ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

உரிமையைத் தேடி


ஈழ தேசத்தில் தமிழனின்
அபயக்குரல் வீதி எங்கும் ஒலிக்கிறது.
உயிரை இழந்தோம் உடமை இழந்தோம்
உறவை இழந்தோம் சொந்தம் இழந்தோம்
வாழும் மண்னை இழந்தோம்.


சொந்த காணி நிலம் வேண்டி
தாயக உறவுகள் தயங்காமல்
போர்க்கொடி ஏந்தி வெற்றிக் கொடி நாட்ட
தமிழினம் வீதி வலம் வருகிறான்
பதாதைகள் தாங்கிய கலர் எழுத்துக்களில்

துயரங்கள் துரத்தி வந்தாலும்
கொட்டும் வெயிலிலும் பிஞ்சுக்குழந்தைகளை
மடிஏந்தி வாழ இடம் தேடும் எம் உறவுகள்
நல்லாட்சி நாயகனின் செவிப்பறை
கிழியும் வரை ஊர்ரெங்கும் உரிமைக்குரல்.

ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை வரும்
மக்கள் பலத்தில் வென்ற மக்கள்
நாயகன் எங்கே?
அவர்களின் காதுக்கு கேட்க வில்லையா.
துயரங்கள் தீர துரிதமாய் புறப்படும்.நாயகா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெள்ளி, 20 ஜனவரி, 2017

திருகோணமலை-ஈச்சிலம்பற்று மண்ணில் எனது கவிதை நூல் வெளியீடு-2017


கல்விக்கு கரம் கொடுப்போம் அமைப்பும் ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றமும் இந்தியாவை சேர்ந்த இனிய நந்தவனம் பதிப்பகமும் அம்பாறை மாவட்ட தமிழ்எழுத்தாளர்கள் மேம்பாட்டு பேரவையும் இணைந்து நடாத்தும் முப்பெரும் விழா-2017

 
ஈச்சிலம்பற்றையை சேர்ந்த கவிஞர் . ரூபன் எழுதிய ஜன்னல் ஓரத்து நிலா கவிதை நூல் வெளியீடும்.

 
ஈச்சிலம்பற்று கோட்டத்தில் தரம் 1இல் புதிதாக கல்வி பயிலும் வறிய மாணவர்களுக்கு தலா 1000ரூபாய் என்ற அடிப்படையில் மக்கள் வங்கியில் சிறுவர் சேமிப்புக் கணக்கு திறந்து சேமிப்பு புத்தகம் பெற்றோர்களிடம் கையளித்தல்.100 மாணவர்களுக்கு தாய் தந்தை இல்லாமல் வாழ்வோருக்கு

வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கல் நிகழ்வு.

வெருகல்-ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்கள் சமுக தொண்டர்களை கௌரவித்தல் நிகழ்வும்

 
இலக்கிய வாதிகளை கௌரவித்தல்.


இந்த நிகழ்வுக்கு இந்தியா.குவைத். மலேசியா .சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து இலக்கிய வாதிகள் தொழில் அதிபர்கள் கல்லூரி முதல்வர்கள் வருகை தருகிறார்கள்.


இவ் விழா -29-01-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்குநடைஸ்ரீசண்பகாமகா வித்தியாலயத்தில் நடை  பெறவுள்ளது என்பதை அறியத்தருகிறேன்.
 
மாணவர்களின் நலன் கருதி உதவி செய்வோர் உதவலாம் சிறுதுள்ளியாவது...

 

நன்றி
இவ்வண்ணம்
கவிஞர்..ரூபன்-(தலைவர்) ஊற்றுவலையுலக எழுத்தாளர்கள் மன்றம்

சனி, 17 டிசம்பர், 2016

பெற்றவளே கண்ணீரில்.

கருவறையில் உன்னை பல காலம் சுமந்து.
இரு விழிகளிலும் கண்ணீர் மல்லக
இமையோரம் உன்னை இமைக்கும் நேரமெல்லாம்
விழி யோடு சுமந்தேன்.


வலியோடு உன்னை பெற்றெடுத்த தாய்யுள்ளம்
மடியோடு சுமந்து. மனதோரம் தாலாட்டி.
அன்பு மகனே என்று. ஆர்ப்பரிக்கும் -ஓசையில்.
என் காலம் கடக்கிறது.


நீ எட்டி எட்டி அடிவைக்க.
ஏழ் கடலும் துளைத்தெடுக்க.
எண்ணமெல்லாம் உன் நினைவு.
உயிராக கொல்லுதடா என் மனதில்


புத்தி கெட்ட மனிதர்கள் புயலாக வந்ததடா.
பூமியிலே. பொல்லாத காரியங்கள் நடக்குதடா.
போதை கொண்ட மனிதர்களும்
போர்க் குணமும் கொண்டார்கள்.


பொல்லாத கூட்டத்துடன் நீ சேர்ந்து.
தனியாக வாடுகிறாய் சிறையறையில்.
வேதனையில் துடிக்குதடா.பெற்ற மனம்
சோகத்தை பகிர யாருமில்ல.
சோதனையில் போகுதடா என் வாழ்க்கை.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 
 

வெள்ளி, 18 நவம்பர், 2016

உதிரத்தில் வளர்ந்த மொழி


நற்தமிழே நாவூறும்செந்தமிழே
நாம் கற்கும்  பைந்தமிழே
இந்தனைக்கும் நீ வாழ
தரணியிலே உன் புகழும்.
கண்மணிகள்பிறந்து விட்டால்
கற்பனையாய் தாலாட்டும்
நம் தமிழின் செந்தமிழை
கேட்டாலே உள்ளமெல்லாம் தேனூறும்

இணையத்தில் தமிழே
இணையற்ற உன் புகழே
கோடி தமிழர்கள் உச்சரித்தால்
உன் சுவையே மாறாது
பன்னிரெண்டு உயிரெழுத்தும்
பதினெண் மெய்எழுத்தும்
ஆயுத எழுத்துமாய்
உயிர் மெய்யாய் நீ நின்று
பல வகை சொற்களும்
உன்னிலிருந்து மலர்கிறது.
உன் புகழே அகிலமெல்லாம்
இன்னிசை பாடுது தமிழே
ஆயிரம் மொழிகள் தோன்றியும்
அழியாமல் நிக்குது நம் மொழி
உதிரத்தில் பிறந்த மொழி
உள்ளத்தில்  வளரும் மொழி
ஆயிரம் வணக்கம் சொல்வோம்
அகிலத்தின் மொழியாய்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

உதிரத்தில் வளர்ந்த மொழி


நற்தமிலே நாவூறும்செந்தமிலே
நாம் கற்கும்  பைந்தமிழே
இந்தனைக்கும் நீ வாழ
தரணியிலே உன் புகழும்.
கண்மணிகள்பிறந்து விட்டால்
கற்பனையாய் தாலாட்டும்
நம் தமிழின் செந்தமிழை
கேட்டாலே உள்ளமெல்லாம் தேனூறும்

 

இணையத்தில் தமிழே

இணையற்ற உன் புகழே

கோடி தமிழர்கள் உச்சரித்தால்

உன் சுவையே மாறாது

பன்னிரெண்டு உயிரெழுத்தும்

பதிணெட்டு மெய்எழுத்தும்

ஆயுத எழுத்துமாய்

உயிர் மெய்யாய் நீ நின்று

 

பல வகை சொற்களும்

உன்னிலிருந்து மலர்கிறது.

உன் புகழே அகிலமெல்லாம்

இன்னிசை பாடுது தமிழே

ஆயிரம் மொழிகள் தேன்றியும்

அழியாமல் நிக்குது நம் மொழி

உதிரத்தில் பிறந்த மொழி

உள்ளத்தில்  வளரும் மொழி

ஆயிரம் வணக்கம் சொல்வோம்

அகிலத்தின் மொழியாய்
 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திங்கள், 11 ஜூலை, 2016

ஆயுதப்பூ சிறுகதை நூல் வெளியீடு.-மலேசியா-சிங்கப்பூர்21-5-2016


ஆயுதப்பூ சிறுகதை நூல் வெளியீடு.-21-5-2016

மலேசியத் தலை நகர் கோலாலம்பூரில்  சிரம்பான் என்ற இடத்தில் அமைந்துள்ள தமிழர்களின் கலாசார மண்ணடபத்தில் இனிய நந்தவனம் பதிப்பகமும் தடாகம் இலக்கிய அமைப்பு –இலங்கை ஸ்ரீமுகவரி அறவாறியம்  இணைந்து நடத்திய நிகழ்வு.இறைவணக்கத்துடனும் பொதுச்சுடர் ஏற்றும் நிகழ்வுடன் நிகழ்வு ஆரம்பம்மானது கனடா உதன் பத்திரிக்கை பிரதம ஆசிரியர் தலைமை வகிக்க மலேசியா எழுத்தாளர்சங்க தலைவர் மன்னர் மன்னர் முன்னிலை வகிக்க .லண்டனை வசிப்பிடமாக கொண்ட திரு. குலேந்திரன்  மியன்மார் நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் திரு.க.முனியாண்டி இலங்கை எழுத்தாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி  இந்தியாவை சேர்ந்த பாரதி வாணர் சிவா. கவிஞர் பழம் முக்கனி பழனியப்பன் ஆகியோரின் வாழ்த்துரையுடன்


புலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால இலக்கிய போக்கு என்ற தலைப்பில் கட்டுரைகளும் கருத்து பரிமாற்றம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து.

கவியரங்கம் நடைபெற்றது இந்த கவியரங்கத்துக்கு மலேசிய கவிஞர் தமிழ் கனல் குப்பு சாமி தலைமை வகிக்க இந்தியா இலங்கை மலேசிய கவிஞர்கள் கவிபாடினார்கள். கவியரங்கம் நிறைவு பெற்றது. பின்பு கவிதை பாடியவர்களுக்கு இலக்கிய கட்டுரை சமர்ப்பித்தவர்களுக்கு  நினைவுச்சின்னமும் சான்றிதழும் வழங்ப்பட்டது.

நூல் வெளியீட்டு நிகழ்வு-

அதன் பின்பு பி.ப. 3.00 மணிக்கு கோலாலம்பூர் தலைநகருக்கு அருகாமை அமைந்துள்ள நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அமைந்துள்ள மலேசிய இந்தியன் காங்கிரஸ் பொது மண்டபத்தில் நடை பெற்றது வரவேற்புரையை மைக்கல் வீமன் வழங்க

மலேசிய நாட்டை சேர்ந்த தொழிலதிபர் துவான்.V.P.ராஜா தலைமை வகிக்க இனிய நந்தவனம் பதிப்பக ஆசிரியர் நந்தவனம் சந்திர சேகர் முன்னிலைவகிக்க  சிறப்புரையை கனடா உதன் பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர்  ஆர் எஸ்.லோகேந்திர லிங்கம் வழங்க நூல்வெளியீடுகள் நடை பெற்றது.


முதலாவது நூலாக ஈழத்தை சேர்ந்த கவிஞர் த. ரூபன் எழுதிய (ஆயுதப்பூ சிறுகதை நூல் வெளியீடு நடை பெற்றது இந்த நிகழ்வின் போது கவிமாணி என்ற பட்டம் தந்து பன்னாட்டு எழுத்தாளர்கள் முன்னிலையில்  கௌரவிக்கப்பட்டது. முதல்  பிரதியை நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர் திரு ஆ.செல்லத்துரை பெற்றுக்கொண்டார்


இரண்டாவது நூலாக ஈழத்தை பிறப்பிடமாகவும் யேர்மணியை வசிப்பிடமாக கொண்ட திருமதி சந்திர கௌரி சிவபாலன் அவர்களின் முக்கோண முக்குளிப்பு என்ற கட்டுரை நூலும்

மூன்றவது நூலாக ஈழத்தை பிறப்பிடமாக கொண்ட திருமதி சிவரமணி அவர்களின் அவள் ஒரு தனித்தீவு என்ற சிறுகதை  போன்ற நூல்கள் வெளியீடு காணப்பட்டது.

 நிகழ்ச்சியை ஈழத்தை சேர்ந்த கவிஞர் த.ரூபன் தொகுத்து வழங்க

இந்தியாவை சேர்ந்த செல்வி .நிவேதா சிவனேசனின் பரதநாட்டியத்துடனும் கவிஞர் த. ரூபனின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி மாலை 7.30 மணியல்வில் நிறைவு பெற்றது.

சிங்கப்பூர் நிகழ்வு-24-5-2016

அதன் பின்பு 24ம் திகதி சிங்கப்பூரில் உள்ள தமிழ் எழுத்தாளர்களும் இந்தியா எழுத்தாளர்களும் கனடா .குவைத்த போன்ற நாடுகளை சேர் எழுத்தாளர்கள் பங்குகொண்டார்கள் நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு இனிதே தொடங்கியது. நிகழ்வில் தலைவகித்தவர் ரெ.செல்வராசு (சிங்கப்பூர் தமிழர் இயக்க தலைவர்) முன்னிலை இனிய நந்தவனம் பதிப்பக ஆசிரியர் திரு சந்திர சேகரன் அவர்களும். வாழ்த்துரை வே. தவமணி (சிங்ப்பூர் தமிழர் இயக்க ஆலோசகர்) சிங்ப்பூர் தமிழ் பாடசாலை ஆசிரியர் ஜகூர் உசேன் அவர்களின் வாழ்த்துரையுடனும் ஏற்புரையை கனடா உதயன் பத்திரிக்கை ஆசிரியர் ஆர் எஸ் லோகேந்திர லிங்கம் வழங்க வரவேற்புரையை சிங்கப்பூர்  தமிழர் இயக்க செயலாளார் திரு நாராயணசாமி வழங்கினர் அதன் பின் கனடா உதன் பத்திரிக்கை பிரதம அசிரியர் திரு ஆர் எஸ்.லோகேந்திர லிங்கம் அவர்களின்  இதுரை நூலும்

ஈழத்தை சேர்ந்த கவிஞர் த. ரூபனின் ஆயுதப்பூ சிறுகதையும் அறிமுகமாகின பிரதிகளை பெற்ற பின்பு கவிஞர் த. ரூபனின் நன்றியுரையுடனும் செல்வி நிவேதா அவர்களின் பரத நாட்டியத்துடன்  இனிதே நிறைவு பெற்றது. அதன் பின்பு இரவுநேர விருந்தோம்பல் இடம்பெற்றது சிங்கப்பூர் தமிழர் இயக்கத்தினால்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திங்கள், 18 ஏப்ரல், 2016

அன்பு காட்டு மனிதா........


மரங்களை வேட்டையாடும் மனிதா.,..
மானிடனின் வாழ்வுக்கு ஆக்ஸிஜன்
கொடுப்பதும் மரந்தானே?
இயற்கையே காப்பவன் என்று.
இலை மறைவில் கூடுகட்டி
குடும்பமாய் வாழ்ந்த பறவை.
குஞ்சுகளை பொறித்து மகிழ்வாக வாழ்ந்த
அகில விருட்சம் காப்பவனை
ஏன் சிதைத்தாய் மனிதா?

 
மரத்தை துண்டு போடும் மனிதனே.
மனிதனையும் துண்டு போடுகிறான்
ஒரு கூட்டு பிள்ளைகள் நிலத்தில் அழுகிறது....
இந்த அழுகுரல் கேட்க வில்லையா.?
இலையாலே கூடுகாட்டி
இமைக்கும் பொழுதெல்லாம்
இமைகாத்தாளே அம்மா.
அலகினால் சீவி அழகு பார்த்த நாங்கள்
வீதியோரம் அழுகிறோம்.

 
மண்ணின் அழகை மனங்கொண்டு பார்க்க
நல்ல மனம் படைத்த மூதாதையர்
நட்டுவைத்த இயற்கையை
நம்மவன் சிதைக்கின்றான்-இன்று
மாட மாளிகைக்கு மகுடம் பதிக்க
அகில விருட்சத்தை சிதைக்கும் –மனிதா.
அதை நம்பி வாழும் பறவைகள் இடத்திலும்
அன்புகாட்டும் மனிதா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
17-4-2016 மலேசியாவின் முதன்மை நாள் ஏடு தமிழ்மலரில் வந்த கவிதை இதோ.