சனி, 22 பிப்ரவரி, 2014

நேரில் பேசும் தெய்வங்கள்உயிரைப் பெற்றவன்-இன்று
சுதந்திரப்பறவையாக –இருக்க
அந்த உயிரை கொடுத்தவன்
கொடுத்தவள் இன்று-சிறைக் கைதியாக
மனச்சாட்சிகளின் கதவுகள் அடைக்கப்பட்டு
ஏதோ ஒன்றை தேடிக்கொண்டு –வாழ்கிறார்கள்

 
ஒவ்வொரு விடியல் பொழுதும்
அவர்களின் வாழ்வில் –பெற்ற பிள்ளைகளை
தரணியிலே.மற்றவர்கள்- பிள்ளைகளுக்கு.
நிகராக வாழவேண்டும் என்ற
எண்ணச்சிறகு விரித்து பறந்தவர்கள்….
மகனே நீ இருக்க -உனக்கு
ஒரு கருவறை இருந்தது.
நான் உன்னுடன் வாழ –எனக்கென்று.
ஒரு கழிவரை கூட இல்லையா….?????
பெற்றவனும் பெற்றவளும் இன்று சிறைக் கைதியாக
மணிக்கு மணி மணித்துளியாக
கண்ணீர்த் துளிகள் சிந்துகிறோம் –மகனே…..
இந்த துயரங்களை எப்போது அறியப்போகிறாய்


ஆதவன் புலர்ந்திடுவான்
மண்வெட்டியை தோளில் –சுமந்து….
மாற்றான் தோட்டத்திற்கு- நீர்பாய்ச்சி
சமுதாயத்தில் நல்லவனாய் -வளர்த்தேனே
நீ செய்தது நாயமா.???நீதியா???
நான் பெற்ற மகனே சொல்லும்மட……,,,,,,,
அந்த கதிரவனும் மறைந்திடுவான்.
உங்களை தோளில் தூக்கி நிலாவினை காட்டி
உன்விழி உறங்க வைத்தேன்-மகனே


உன் சுக போக வாழ்வுக்கா
உன் சம்சாரத்தின் சொல்லுக்கா.
என்னையும் உன் அம்மாவையும்…
முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு
நீ தொலை தேசம் போய் விட்டாய் –
வேண்டாம் வேண்டாம் -உறவுகளே.
எம்மைப்பெற்ற தெய்வங்களை.
அரவனைக்க முதியோர் இல்லம்-வேண்டாம்.
அவர்களின் இறுதி மூச்சு உள்ளவரை
பெற்ற பிள்ளைகளின் மடியில் -சுமந்திடுவோம்……
 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கட்டுரைப்போட்டி முடிவுகள் மிக விரைவில்

வியாழன், 13 பிப்ரவரி, 2014

என்னவளின் வருகைக்காக
அவளின் சங்குப் பல்லி ன்
சிரிப்பில் சிதையுண்டு
வீட்டுக்கு ஒளியேற்ற
மின்மினி பூச்சியை தேடும்
தூக்கணாம் குருவி போல
அவளைத் தேடி தேடி அலைந்து திரிந்தேன்

அலைபுரண்டு ஓடும் குத்தாலம் அருவியில்
குளிக்கும் போது –

கமகமத்த சீயக்காய் வாசனைத் திரவியம்
என் மூக்கில் நுகர்ந்த -போது
வஞ்சியவளின் மெய்யழகு என்னை-.வஞ்சிக்கவைத்தது.

மெல்லத்திறந்த  வாயினால் மௌனம் கலந்த புன்னகை
ஏதோ ஒன்றின் அடையாளத்தின் அறிகுறி.
அப்போது இதயம் திறந்தது.
அவள் சிரிப்பு இதயத்தில் புகுந்தது.
வானில் பறக்கும் காற்றாடி போல
என்னவளின் நினைவில் பறந்து கொண்டு இருக்கிறேன்
காதலர் தினம் வருகிறது.
வருவாள் என்ற  நம்பிக்கையில்
பூங்கா வனத்தில் ரோஜா மலருடன்
தனியாக காத்திருக்கேன்.........

 

 -நன்றி-
-அன்புடன்-

-ரூபன்-

 

 ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

அம்மாவுக்கு ஒரு விண்ணப்பம்
 

அம்மாவுக்கு ஒரு விண்ணப்பம்

என்ற கவிதையை முழுமையாக படிக்க. தலைப்பில் சொடுக்கவும் அத்தோடு அம்மா பாடலையும்  கேட்டு இரசித்து தங்களின் கருத்தை சொல்லுங்கள் எனது வலைத்தள உறவுகளே!!

கால தேவன் அருள்  இருந்தால் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்......


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 


திங்கள், 3 பிப்ரவரி, 2014

நான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்……!

 

 நான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்-உங்களின் நட்பையும்.வாழ்த்துகளையும் தேடி…

முழுவிபரத்தை படிக்க தலைப்பில் சொடுக்கவும்...

-நன்றி-

-அன்புடன்-

-ரூபன்- 

சனி, 1 பிப்ரவரி, 2014

கடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்……..

கடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்

என்ற கவிதையை முழுமையாக படிக்க தலைப்பில் சொடுக்கவும்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-