வியாழன், 26 ஜூன், 2014

சிறகடிக்கும் நினைவலைகள்-6தேசம் எரிகிறது மகனே.
என் தேகம் எரிகிறது
என் நினைவும் அலைகிறது
என் நெஞ்சும் எரிகிறது
நேசமது காட்டிய தேசத்தில்
வேசமது ஆடுகிறது
அதுகளையும் காலம் எப்போது
அது வரை காத்திருப்போம் மகனே.

அன்று வீசிய குண்டில் எரிந்தது தேசம்
அன்று கருகி மாண்டது சொந்தங்கள்.
பாலுட்டி வளர்த் அன்னையின்
முலை பாதிபாதியாய் சிதறியதும் அன்று
சிதறிய முலையில் வடிந்த உதிரத்தை
பசிக்கு அழுத பாலகன் பால் என்று பருகியதும் அன்று.
அன்று வந்தது கண்ணீர் சிந்தினோம்
இன்று வந்தால் என்ன செய்வோம்??

உதிரத்தின் மணம் வீசும் திசை எங்கும்
உடல்களும் அவையங்களும் சிதறிக்கிடந்தது.
ஊன்று கோல் தடியுடன் ஊன்றி நடந்த தாத்தாவை
கழுகுகள் நரிகள் அங்கம் அங்கமாக
சுவை ததும்ப புசிக்கின்ற காட்சிகளும்.
அன்று தொலைக்காட்சிகளிலும்
பத்திரிகைகளிலும் கலர் படங்களாக
வருவதை பார்க்கும் போது
கண்கள் கண்ணீர் வடிந்தது மகனே.
சோங்கள் சுமையாக  என்
நெஞ்சில் வந்தாடுது......


தொடரும்........

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 
  
  
 

சனி, 21 ஜூன், 2014

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?
சகோதரி திருமதி -கிரேஸ் அவர்கள் என்னை  பத்து கேள்விகள் கேட்டு பத்துக்கும் பதிலளிக்கவும் என்று சொல்லிவிட்டார். என் விடைத்தாள் இங்கே

கேட்டவுடன் என்தலை  தலைப்பு சுற்றுவது போல சுற்றியது.


1.உங்களுடைய 100 வது பிறந்த நாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?
ஈழத்தில் பிறந்து வளர்ந்தவன் என்ற ரீதியில் பிறந்த நாளை கொண்டாடுவோம் என்பது பொய்யான விடயம் மரணம் எப்போதும் உறுதி என்ற வாழ்க்கையை நினைத்து வாழ்பவன். இருந்தாலும் 100வது பிறந்த நாள் கிடைக்கும் போது பெற்ற தெய்வங்களை இழந்த செல்வங்களுடன் கொண்டாட விரும்புவேன்.

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
பிறர் உழைப்பில் வாழாமல் என்னுடைய  உழைப்பில் வாழ வேண்டும் என்ற  என்ற வாக்கிய தொடரை தினம் தினம்  என்னுள் புகுத்திக் கொள்வேன்.

3.கடசியாக சிரித்தது எப்போது?எதற்காக?

இறுதியாக தாயகத்தில் இருந்து விடைபெறும் போது.
எதற்காக- உயிருக்கு உயிராக தாய் தந்தையருக்கு தெரியாமல் காதல் வளர்ந்தது நான் வெளிநாடு செல்கிறேன் என்ற தகவல் அறிந்த போது தொலைபேசியில் SKYPEவழியாக  காதலியுடன் சிரித்த சிரிப்புத்தான்.அன்று .

4.24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
நண்பர்களுடன் இரவில் தூங்கும் போது  யார் என்று இருட்டில் தெரியாது அதனால் கிள்ளிவிட்டு ஓடிப்போய் தூங்குவது ...

5.உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?
பிறர் மிதிக்க நடக்காதே  பிறர் மதிக்க நட என்று சொல்வேன்.

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
பக்கத்து வீட்டுக்காரன் நல்ல செல்வத்துடன் இருந்தால் அதைப்பார்த்து  செய்வினை சூனியம் செய்யும் மந்திரவாதிகளையும் ஏமாத்தி பிழைக்கும் தந்திர வாதிகள் போன்றோரினால் உருவாகும் பிரச்சினையை தீர்ப்பேன்.

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
என்வயதுக்கு மூத்தவர்களிடம்

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
கீதையில் சொல்வது போல எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கட்டும்
இடக்காதில்வேண்டி வலக்காதில் விட்டுவிடுவேன்.

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
மரணம் என்பது யாரை விட்டு வைத்தது. இவைஎல்லாம் இயற்கையின்  நியதி
எப்போது தாயின் வயிற்றில் இருந்து மண்ணின் மடியை தாவிய போது.அப்போதே மரணம் என்பது உண்மையாகி விட்டது. என்று சொல்லுவேன்.

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
எப்போதும் புத்தகம் வாசிப்பதும் அத்தோடு எனக்கு பிரியமான ஒரு பாடம் என்றால் போட்டோசப்(ADOBE PHOTOSHOP) இதில்தான் நான் பொழுதை கழிப்பது.அதிகம் அன்றும் இன்றும்

 இதற்கு பதில்சொல்ல நான்அழைக்கும் அன்புள்ளங்கள் (தங்களின் பதிலை தாருங்கள்)

1. நாகேந்திர பாரதி
2. சின்னப்பயல்
3.மழைக்காகிதம்
4.பிரியசகி


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-