செவ்வாய், 10 ஜூன், 2014

சிறகடிக்கும் நினைவலைகள்-3

சிறகடிக்கும் நினைவலைகள் என்ற தொடர்பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்
சிறகடிக்கும் நினைவலைகள் -1
சிறகடிக்கும் நினைவலைகள்-2 

வண்ணக்கோலங்கள் வாசலில் போடும் போது
வானவெளி பார்க்கும்மென்று
மழை பொழியும் கரு மேகம்
இருளாக பந்திலிட
பகலவனே ஒளிந்திடுவான்.
துணையாக நீ விரும்பும்
உன் காதலனே கருமேக இருளிலே
உனக்காக காத்திருந்தான்.

அந்தி நேரத்தில் யாருமற்ற வேளையில்
பொழுதுறங்கும் நேரத்திலே
புன்னகை பூத்தாயே.
இருளிலே உன் பல்லின் வெண்மையது
பளிச்சிடும் ஒளியாக மின்னியது.
நிரல் கொண்ட யானைகள் போல.
பனைமரத்தின் காதலி ஆலமர விழுதே
பின்னிப்பினைந்த மரத்தின் கீழ்
ஆயிரம் வார்த்தைகள் பேசினோம்
யாருமே அறியவில்லை.
அந்த பனைமரமும் ஆலமரமும்
நம் காதலுக்கு சாட்சியாக இருக்கிறது.

உன் நினைவு என் நெஞ்சில்
ஊஞ்சல் ஆடுகிறது என்பதை
என் கையடக்க தொலைபேசியில்
நீ அனுப்பும் குறுஞ்செய்தி.
தினம் தினம் என் in box ஐ நிரப்புகிறது
அதை அழிக்கும் போது
உன் உள்ளத்தில் இருக்கும் என் நினைவை
அழிப்பது போல உணர்வுவருகிறது…

தொடரும்…..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

15 கருத்துகள்:

 1. அருமை நண்பரே.....

  குறுஞ்செய்தி அழிக்கும்போது இருக்கும் கஷ்டம் உங்கள் வரிகளில் நன்று. கடினமான விஷயம் தான் - அதுவும் காதலியிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி எனும்போது கடினம் அதிகம் தான்.

  பதிலளிநீக்கு
 2. சிறப்பான இந்த நினைவலைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் சகோதரா .

  பதிலளிநீக்கு
 3. உன் நினைவு என் நெஞ்சில்
  ஊஞ்சல் ஆடுகிறது என்பதை
  என் கையடக்க தொலைபேசியில்
  நீ அனுப்பும் குறுஞ்செய்தி.
  தினம் தினம் என் in box நிறப்புகிறது
  அதை அழிக்கும் போது
  உன் உள்ளத்தில் இருக்கும் என் நினைவை
  அழிப்பது போல உணர்வுவருகிறது…

  நாங்கள் ரசித்த வரிகள் தம்பி ரூபன்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. நினைவலைகள் தொடரட்டும்
  நெஞ்சினில் நிறுத்தி நிம்மதி காணும்
  கண்ட கனவுகள் நிஜமாக
  கவிதைகள் அரங்கேற வாழ்த்துகிறேன்...! ரசித்தேன் ரூபன் ஆதங்கம் புரிகிறது. தொடர வாழ்த்துக்கள் ....!

  பதிலளிநீக்கு
 5. குறுஞ்செய்தி அழிக்கும் போது செம feel சகோ!
  மென்சோக மெலடியாய் இருக்கு கவிதை!

  பதிலளிநீக்கு
 6. ''..அதை அழிக்கும் போது
  உன் உள்ளத்தில் இருக்கும் என் நினைவை
  அழிப்பது போல உணர்வுவருகிறது..'' ....ம்...ம்...தொடரட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 7. ''..அதை அழிக்கும் போது
  உன் உள்ளத்தில் இருக்கும் என் நினைவை
  அழிப்பது போல உணர்வுவருகிறது…''
  அதை அழிக்கும் போது
  உன் உள்ளத்தில் இருக்கும் என் நினைவை
  அழிப்பது போல உணர்வுவருகிறது…
  ம்...ம்...தொடரட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 8. உங்களுடைய நினைவலைகள் பலருடைய நினைவலைகளை கிளப்பி விடும் அபாயம் உள்ளது நண்பரே.
  அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 9. அந்த பனைமரமும் ஆலமரமும்
  நம் காதலுக்கு சாட்சியாக இருக்கிறது.
  பலருடைய வாழ்வில் இது உண்மைதான் நண்பரே....

  பதிலளிநீக்கு
 10. குறுஞ்செய்தி ஏன் அழிக்கிறீங்க? தனியா ஒரு memory card போட்டுக்கோங்க :)
  த.ம.+1

  பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்