திங்கள், 16 ஜூன், 2014

சிறகடிக்கும் நினைவலைகள்-4

உன் நினைவில் நெஞ்சுக்குழிகாய்கிறது.
உன் நினைவில் நான்தினம் தினம் சாகிறேன்
செம் மண்சாலையில்   தென் மேற்கு பருவக்காற்று
திசை மாறி சுழண்டு சுழண்டு  வீசுகையில்
நீ நிழலுக்காக பிடித்து வந்த குடையை.
காற்றுத்திருடன்  பிறை சூடி  ஓடுகையில்
அவன் தாவி தாவி என்னிடமே  கொண்டுவந்தான்
முன்பே காற்றுத் திருடனே அறிந்து விட்டான்
இவளின் காதலன் இவன்தான் என்று.
குடையை எடுத்து வந்து உன்னிடம் தந்த நினைவுகள்.


முதல்நாள் பார்த்துப் பேசிய போது.
காற்றின் காதலி நாணல் புல்
சாய்ந்து  நிலமகளை பார்ப்பது போல
உன் முகமும் கால்ப்பெரு விரலும்
நிலமகளின் மேனியின் மேல்
நீ வரைந்த  கோடும் எனக்கு கீறல் சித்திரமாய் இருந்தது.
நீ சென்ற பின் அந் சித்திரத்தில்
மூன்று இலக்கம் இருந்தது.


அது என்னவென்று பார்த்தால்.
ஒன்று .நான்கு.மூன்று (1.4.3)என்ற இலக்கம் இருந்தது
அப்போதுதான் நானறிந்தேன்
என்  காதலியே நம் காதலுக்கு
பச்சைக்கொடி காட்டிவிட்டாய்.
அந்த நாளும் அந்த நேரமும் ஆண்டும்
தனிமைப் பொழுதில்
ஒருகனம் மீட்டுப்பார்க்க சொல்லுகிறது.
அடுத்த  தொடர் விரைவில்.............

 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 11 கருத்துகள்:

 1. என்ன ரூபன் நெஞ்சுக் குழியே காய்கிறது என்றால் இனி தாமதம் செய்தல் ஆகாது. அம்மாவிடம் சொல்லி ஆவன செய்யவும். எல்லாம் கூடி வர மனமார வாழ்த்துகிறேன் ....! எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிவான் நிச்சயமாக வருந்த வேண்டாம். கவிதையில் ஆதங்கத்தை கொட்டிவிட்டீர்கள். ரசித்தேன் ஆனால் மனம் வருந்தியது. தொடர வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   அம்மா.

   காலம் நேரம் வரும் போது வாழ்கை இனிக்கும்... பொறுமை முக்கியம்... கட்டாயம் நடக்கும் தூர தேசம் இருப்பதால் ஒன்றும் செய்யமுடியாத நிலை....வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 2. அருமையான காதல் கவிதை. படைப்பிற்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்

   தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 3. வணக்கம் சகோதரர்
  முன்பு ஒரு முறை நான் உங்களிடம் பேசும் போது கேட்ட போது இது எல்லாம் அனுபவமா என்று கேட்டேன் நீங்கள் கற்பனை தான் என்று சொல்லி விட்டீர்கள். உங்கள் கற்பனை மட்டுமல்ல அதற்கான கவிவரிகளும் கவர்ந்திழுக்கிறது சகோதரரே. தொடருங்கள். விரைவில் மணமுடிக்க வேண்டுமென்பது எங்கள் விருப்பம். அழகான வரிகளுக்கு அன்பான நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்
  சகோதரன்.

  உண்மைதான் சகோ. எல்லாம் கற்பனை வரிகளும் நிஜமும் கலந்த கலவை ஊரில் இருக்கும் போது வாழ்க்கை இப்படியாக ஓடியது தூரதேச வாழ்க்கையால் தொலைபேசியும் .SKYPEயும் தஞ்சம் என்றுதான் கடக்கிறது. உண்மையில் இருக்கிறது வாழ்க்கை நேரம் காலம் மிக விரைவில் வந்து சேரும் போது தோப்பாக இருப்பேன் இப்போ தனிமரமாக ..இருக்கிறேன். தங்களுக்கு தெரியாமல் என்னுடைய விடயங்கள் நடக்கவே நடக்காது... காலம் விரைவில் பதில் சொல்லும்...வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. சகோதரன்..
  (இறைவனுக்கு நேர்ந்து விட்ட நேர்த்திப்பொருள் இறைவனுக்குத்தான்)


  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 5. காதலியை நினைப்பதுவும் ,
  காதலில் வெற்றியும்
  கசப்பதில்லையே..

  வாழ்த்துக்கள் நண்பரே..

  பதிலளிநீக்கு
 6. கற்பனையென கற்பனை செய்து தீட்டியாளும் தன்னையறியாமல் உண்மை வந்து விழுந்து விடுவது உண்மையே நண்பரே...

  பதிலளிநீக்கு
 7. அருமை சகோதரரே...விரைவில் ஒன்று சேர வாழ்த்துக்கள்..கற்பனை அல்ல என்று திண்ணமாக நினைக்கிறேன் :)

  பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்