சனி, 26 ஜூலை, 2014

சிறகடிக்கும் நினைவலைகள்-7சின்ன வயதில் கனவு சுமந்த வாழ்க்கை
சின்னநெஞ்சில் வடம் பிடித்தது
துள்ளித்திரியும் வயதினிலே
தூண்டில் போட்டு விளையாடிய காலங்கள்
துரத்தி துரத்தி அப்பா அடித்த காலங்கள்
கல்லூரிக் காலங்கள் வசந்தகாலங்கள் ஆனது
வாழ்க்கைப்பாடத்தை கற்றுத்தந்தது.
வாழ்வில் ஒரு சுகந்தம் பிறந்தது.
 
வாழ்க்கையில் அவலங்கள் மூண்டது
வாழ்வே வெறுத்துப்போனது
தன்நம்பிக்கை தகர்ந்தது.
தாயகம் கடந்தோம் தார்மிக உணர்வோடு
கல்லுரியில் படித்தோம்
கனிவான பண்புடன் ஆசிரியரை மதித்தேன்
தலை குனிந்து நடந்தோன்
தலை நிமிர்ந்து நின்றோன்
 
படித்த படிப்புக்கு வேலை கிடைத்தது.
பள்ளிக்கூட வாழ்க்கையாய் இருந்தது.
வாழும் உறைவிடம் வேறி இடம்
வேலை கிடைத்தது வேறி இடம்
அறிவில் சிந்த ஆசிரியர்களுடன்
ஒன்றாய் கூடி மகிழ்ந்த காலங்கள்
என் நெஞ்சில் தினம் தினம்
ஞான ஒளி ஏற்றுகிறது
 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

செவ்வாய், 15 ஜூலை, 2014

பேனாமுனைப்போராளிபேனாவின் நரம்பு-வழிஓடும்
உதிரத்தில்உலக சரித்திரத்தை
புரட்டிப் போட்டவனும்
பேனா முனைப் போராளிதான்
எங்கெல்லாம் ஆணவம் தலை விரித்து-ஆடுதோ.
அங்கே எல்லாம்

முதற்புள்ளியும் முற்றுப்புள்ளியும்
வைப்பவன் பேனாமுனைப் போராளிதான்
பேனா சிறிய விலை என்றாலும்
அதன் நுனியில் இருந்து -வடியும்
கண்ணீர் மிக வலிமை படைத்த -சக்தி
உலக சரித்திரத்தயே-சொல்லிவிடும

ஆயுத முனையில் யுத்தம்-செய்யும்
எதிரியை விட
பேனா முனையில் எழுதி
யுத்தம் செய்யும் ஒரு எழுத்தாளன்
உலக அரங்கில் வெற்றி வாகை சூடுவான்
ஆயுதத்தால் யுத்தம் செய்வதை- விட
பேனா முனையில் யுத்தம் செய்பவன்
மிக வலிமை படைத்தவன்

பேனா முனையில் யுத்தம்-செய்பவன்
நீதி நியாயம்.தர்மம் எல்லாம்
பக்கச் சார்பற்று நடு நிலை காப்பவன்
எரிகின்ற தீப்பிளம்புக்கு-மத்தியில்
தன் உயிரே துச்சமென -பாராமல்
அர்ப்பணம் செய்பவன்
நாட்டு மக்களுக்கு-சுதந்திர
தாகத்தை இதமாக -சுவாசிக்க
பெற்றுக் கொடுப்பவனும்
பேனா முனைப் போராளிதான்

எங்எங்கோ மனித குலத்துக்கு
எதிராக அடக்கு முறைகளும்
இன அழிப்புக்களும்-மேல் ஓங்கி நிக்குதோ
ஒரு இனத்தை ஒருஇனம்
எங்கே ஒடுக்குகின்றார்களோ
அங்கல்லாம் பேனா முனைப்
போராளியின்-குரல்
சர்வதேச அரங்கெல்லாம்
கம்பீரமாக ஓங்கி ஒலிக்கும

சிலநேரம் அணுகுண்டு-வெடித்து
சில எல்லைகளைத்தான்-அழிக்கும்
ஆனால் பேனா முனைப் போராளி
எடுக்கும் அணுகுண்டுப்பேனா
அது உலகெங்கும் அதிர்வுகளை
உணர வைக்கும்-அந்த
நிஜமான அணுகுண்டை-விட
பல மிக்க —சக்தி
பேனாமுனைப் போராளிக்கே-அதிகம்

ஒரு நாட்டின் எல்லைப் புறத்தில்
யுத்தம் செய்யும்-வீரர்கள்
பல இழப்புக்களை
உதிரம் சிந்தித்தான்
நாட்டு எல்லையை மீட்க வேண்டும்
ஆனால் பேனாமுனைப் போராளி
உதிரம் சிந்தாமலும் வியர்வை சிந்தாமலும்
பேனா முனையில் எழுத்து வடிவில்
புரட்சி செய்து நியாயத்தை-பெற்று தருகின்றவன்.
அவன்தான் பேனாமுனைப் போராளி
.
யுத்தம் செய்யும்வீரனின்-பலம் ஒரு மடங்கு என்றால்

பேனா முனைப் போராளியின்
பலம் பலமடங்கு என்று பொருள்படும்

எத்தனையோ பேனா முனைப்-போராளிகள்
தன் தாய் நாட்டுக்காகவும்
தன் சமுதாயத்துக்காகவும்
அன்றும் இன்றும் உயிரை-தியாகம் செய்தார்கள்
அவர்களை இன்று இருக்கின்ற
எம் சமுதாய உறவுகள்
தினம் தினம் பூசிப்போம்……………

-நன்றி-
-
அன்புடன்
-
-
ரூபன்-

வெள்ளி, 11 ஜூலை, 2014

இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை???


 
ஆதவன் உலகை எழுப்பி விட்டான்
இன்னும் என் சின்னக்குயில் -ஒலி எழுப்பவில்லை
காரணம் என்ன வென்று புரியவில்லை-கொஞ்சம்
தேடிகண்டு பிடித்துச் சொல்லண்டா-நண்பா
 
அவள் முகத்தை இது வரை பார்த்ததில்ல
அவள் முகவரி கூட அறிந்ததில்லை
அகத்தால் ஆளும் சின்னக் குயில்தான்-கூவி
அழைக்காது இருப்பதேன் அதை புரிந்து
சொல்வாயடா நண்பா
 
பால் போன்ற வெள்ளை உள்ளம்-என்றும்
அகம் மகிழ வெளிப்படையாகச் சிரிக்கும்-மலரது
அவள் குறும்புப் பேச்சால் என் மனது-அவளை
கொள்ளை கொள்ள வைத்தது-ஏன்
சொல்லிக்க வில்லை தெரிந்து வா-நண்பா

 

இருவர் உறவை கைபேசி வளர்ந்தது
கவிதை உணர்வு பேச்சு மூலம் வளர்ந்தது
திறமை கொண்ட கவிதைப் புத்தகம்
கூவா திருப்பதேனோ??-அதை
அறிந்து வா நண்பா
 
என் சின்னக் குயில்தான்
இன்னும் கூவவில்லை-ஏன்
ஊமை என்று தெரியவில்லை
எனக்கு மின்னல் போல்-பாயுது துன்பம்
என் மனக் கோட்டை
மண் கோட்டையா மாறிச்சா-என்ன
முடிவென்று அறிந்து வா-நண்பா

 
தூது அனுப்பினேன் உனக்கு-என் நண்பனை
நீ பிடி வாதம் பிடிக்காதே-சின்னக் குயிலே
என் துன்பத்தை அறிந்து
என் வருத்தம் போக்க
உன் பாசக் குரலைக் காட்டும் சின்னக் குயிலே


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

 
 


  •  

திங்கள், 7 ஜூலை, 2014

எப்போதுதான் பார்ப்பது.......
சித்திரையில்-பார்ப்போம்
சிங்காரியே சொல்லு
நித்திரையும் போனதடி
நின்று பதில் சொல்லும்
சித்திரை மாத சுடும்வெயில்
சுர் என்று என்னைத் தாக்குமே
பத்து மாத தங்க மேனி
கறுத்துப்போகுமடி

வாயாடி முத்தழகி
வாழத்தண்டு காலழகி
வைகாசி மாத்திலே
வருவாயாசொல்லுமடி
வைகாசியில் வானம் கறுக்கும்
வழியெல்லாம் ஈரம் சொட்டும்
வழுக்கிவிட்ட என்னவாகும்?
நானிருக்கேன் உனக்கு
சொல்லும்மடி புள்ள
ஆனிமாசம் வந்திடுவாய்
ஆடி ஓடி முத்தம் தந்திடுவேன்
என் அன்பிற்கு ஆனிமாத முத்தம் போதுமடி
அப்புறம் எதற்கு சந்திப்பு
சொல்லுமடி சொல்லுமடி…

போடி நீ வாய்க்காரி
பொல்லாத கைக்காரி
ஆடிமாசம் எப்படி
நாள் பாத்து சொல்லுமடி
ஆடிமாதம் ஆகாதன்னு
அப்பனும் ஆத்தாலும் சொன்னாங்க
பாடிப்பாடி சொன்னாலும்

உன் மண்டையில ஏறாதடி
சாமியாரை பார்ப்போம்-நல்ல சகுனம்
ஒன்று கேட்போம்
என்னை சேதாரம் பண்ணிப்போட்டு
செய்கூலியும் கேட்பார்கள்
அஞ்சி மாதம் பொறுத்திரு
ஐப்பேசி வந்து விடும்-அப்போ
மிஞ்சி அணிய விரல்தாரும்-இந்தப்
பஞ்சோடு நீ தீயாக

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

புதன், 2 ஜூலை, 2014

நீ நெஞ்சில் தந்த காயங்கள்

 அன்பான உறவுவைத் தேடி தேடி
வாழ்க்கை நீண்டு போனது
காதல் சுகங்கள் சுமையேற
சோர்ந்து போனது உள்ளக்கிடக்கை
அவள் ஒரு திசையில் நான்ஒரு திசையில்
திசைமாறிய பறவைகள் போல வாழ்க்கை
சோகங்களைத் தரும் காதலை விட
அவளிடம் இருந்துவரும் அழைப்பே
என் காதலுக்கு ஒரு சுகம் தரும்


அவளிடம் இருந்து வந்த கடிதங்கள்
என் செஞ்சில் ஒரு இன்னிசை
புயல் யுத்தம் செய்தது.
சிட்டுக்குருவியின் சிறகை வேண்டி
வானத்தில் பறக்கச்சொன்னது.
யாருக்கும் தெரியாத அமைதியான இடம் நோக்கி
அவளின் காதல் கடிதங்களை வாசிப்பதில்
ஒருசுகம் இருக்கும்..ஆகா…ஆகா…


தாயின் வயிற்றில்பிறக்கும் பிள்ளை
வளர்ந்தவுடன் திசைமாறிவிடும்
சாகும் வரை காதல் என்ற உறவே
பிரியாமல் எப்போதும் நிலைத்திருக்கும்
நான் அன்பு என்ற மூன்றெழுத்தை விதைத்தேன்
ஆனால் நீ பிரிவு என்றமூன்றெழுத்தை
என்னுள் விதைத்து விட்டாய்
நாலுசனம் வாழ்த்த நீ வாழ்ந்தால் போதும்
நான் உன் நினைவில் வாழ்ந்துகொண்டுடிருப்பேன்
அது உனக்கு புரியுமடி.


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-


உறவுகள் கேட்டதிற்கு ஏற்ப மீண்டும் பகிரப்படுகிறது. wordpress.com விட மனமில்லை... உறவுகளே அதனால் அங்கு பகிர்ந்தேன்