புதன், 20 ஆகஸ்ட், 2014

வடிந்து உருகும் தாயுள்ளம்
கட்டில்சு
கம் கண்டு 
கணவருடன் நெடுநாட்கள் இருந்து
இருளறை என்ற கருவறையில்
உன்னை பல காலம் சுமந்தேன்.

வாழ்க்கைப் போராட்டம்
என்னை வாழ வழி விட வில்லை
யுகங்கள் காலங்கள் கடந்து போக
உலக வாழ்க்கை வெறுக்கிறது.

பிள்ளைப்பாசம் என்னை கட்டித்தழுவ
கண்களில் கண்ணீர் அருவிபாய
ஒற்றி எடுக்கும் பிஞ்சுள்ளம்
ஏங்கி தவிக்கும் விழிப்பார்வை.

உன்னை துவசம் செய்த
என் அப்பன் எங்கே
ஒருசான் வயிற்றுக்கு ஒரு நாள்
உழைத்து காசு தரதாஅப்பன் எங்கே தாயே

 
கிழிந்த சேலையுடன் கசங்கிய முடியுடன்
உன்னை இந்த கோலத்தில் காணும் போது
என் உதிர நாளங்கள் முறுக்கேற
கண்ணீர் சிந்திய விழிகள் நடுங்க
என்னை கட்டி அணைக்கும்
தாயுள்ளம் கண்டு மகிழ்கிறேன் தாயே.

உன்னைப் போன்று கணவனின் கொடுமையால்
துன்பம் என்ற சமுத்திரத்தை தாங்கிய படி
வாழும் பெண்கள் எத்தனை
அவர்கள் வாழ்விலும்விடியல் பிறக்கட்டு
எதிர்காலத்தில் வசந்தங்கள் வீசட்டும் தாயே
அமைதி வாழ்க்கை மலரட்டும்


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 
 
 

24 கருத்துகள்:

 1. தமிழ்மணம் க்ளிக் செய்தால் தளமே தமிழ்மணத்துக்கு மாறுவதை இன்னும் நீங்கள் சரி செய்யவில்லை நண்பரே... தனியாகவும் திறக்கிறது, இங்கும் மாறி விடுகிறது. (முன்பே ஒருமுறை சொன்னேன்)

  கருவறை என்ற இருளறையில் என்று மாற்றிப் படிக்கலாமோ! :))

  அருமை. தாயின் துன்பம் கண்டு போருக்க முடியாத தனயன் மனம்.

  பதிலளிநீக்கு
 2. ஹ்ம்ம் சில தாய்மாரின் வலி சொல்லும் கவிதை..அனைவர் வாழ்விலும் வசந்தம் வரட்டும்

  பதிலளிநீக்கு
 3. வறுமையின் பிடியில் தாய்மை சிக்கிட
  வாய்த்த கணவனின் கொடுமையும் சேர்ந்து தாக்கிட
  பெற்ற குழந்தை ஏங்கித் தவித்திட
  பொல்லாப் புவியில் புகலிடம் இன்றி கலங்கிடும் அன்னை

  அருமையான தலைப்பு அன்னையர் பற்றி பொருத்தமான படமும் நன்றாக அமைந்துள்ளது.. நன்றி வாழ்த்துக்கள் ரூபன் !

  பதிலளிநீக்கு
 4. ஆணாதிக்கத்திற்கு பலியான ஒரு பெண்ணின் அவல நிலையைக் கவிதை வரிகளாக்கி கண்ணீர் சிந்தும் உமது கருணையுள்ளத்தை என்னவென்று சொல்வது? இரக்க குணம் உடையோர் பேறு பெற்ற்வர்கள் என்ற அந்த இயேசுவின் வார்த்தைதான் நினைவுக்கு வருகிறது.
  த.ம.3

  பதிலளிநீக்கு
 5. உண்மையை விளம்பி நிற்கும் உணர்வு மிகு வரிகளுக்குப் பாராட்டுக்களும்
  வாழ்த்துக்களும் சகோதரா .

  பதிலளிநீக்கு
 6. அன்னையைப் பற்றி அழகான க்விதை வடித்த தம்பிக்கு எங்கள் பாராட்டுக்கள்! அப்பனின் கொடுமைகளுக்கு ஆளாகும் அன்னையர் எத்தனை பேர் இருக்கின்றனர்?!! தங்கள் உருக்கமான கவிதை அருமை!

  பதிலளிநீக்கு
 7. Nalla Kavithai Roopan-ji....... Oru kulanthai thanathu ammavukku mattum sinthikkaamal, ellaa ammakkaagavum sinthippathu oru thani alagu !

  பதிலளிநீக்கு
 8. தாயின் பெருமைக்கு ஒரு மணிமகுடமாய் இருக்கிறது கவிதை அருமை நண்பரே...

  பதிலளிநீக்கு
 9. //கிழிந்த சேலையுடன் கசங்கிய முடியுடன்னும்
  உன்னை இந்த கோலத்தில் காணும் போது
  என் உதிர நாளங்கள் முறுக்கேற
  கண்ணீர் சிந்திய விழிகள் நடுங்க
  என்னை கட்டி அணைக்கும்
  தாயுள்ளம் கண்டு மகிழ்கிறேன் தாயே.//
  வரிகள் மனதைக் கனக்கச் செய்துவிட்டது
  நண்பரே

  பதிலளிநீக்கு
 10. பெண்ணை பெற்ற தாயின் கனவு நிறைவேறட்டும் !
  த ம +வோட்டு போட்டால் _வோட்டு ஒன்றும் கூடுகிறதே ?  பதிலளிநீக்கு
 11. அருமையான பா வரிகள்
  சிறந்த வழிகாட்டலுடன்
  சமகால நடப்பை வெளிக்காட்டும்
  கவிதை என்பேன்!

  பதிலளிநீக்கு
 12. தங்கள் தங்கமான வரிகள் கண்டு!
  .....................................................................................................................................................!
  எதுவும் சொல்லத் தோன்றவில்லை? எமக்கு...

  பதிலளிநீக்கு
 13. தாய்மையின் பெருமை சொல்லும் கவிதை. சில வரிகள் மனதை நெகிழ வைத்தன.
  வாழ்த்துக்கள்.......

  பதிலளிநீக்கு
 14. சூப்பர் மிக அருமை.. உணர்ச்சிபூர்வமா இருக்கு.. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 15. "என்னைக் கட்டி அணைக்கும்
  தாயுள்ளம் கண்டு மகிழ்கிறேன்
  தாயே." என்ற அடிகளை
  மறக்க இயலாதே!
  சிறந்த பாவரிகள்
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 16. பாசத்தின் தோற்றம் பரிவுமிகு தாயுடனே
  நேசமிகு சேயின் நெகிழ்வு!

  அருமையான தாய் சேய் உறவை
  எழுத்தாற்றலினால் படம் பிடித்தவிதம் சிறப்பு!

  வாழ்த்துக்கள் சகோதரரே!

  பதிலளிநீக்கு
 17. அருமையான கவிதை ரூபன்...
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 18. நல்ல மனம் கொண்டவர்களின் வேண்டுதல் கேட்கப்படாமல் போகுமா?
  அமைதி வாழ்க்கை நிச்சயம் மலரும் ரூபன்!
  உங்கள் படைப்பு உள்ளம் தொடுகிறது.
  பகிர்விற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 19. தாயின் பெருமை சொல்லும் கவிதை மிக அருமை.
  வாழ்த்துக்கள் ரூபன்.

  பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்