புதன், 24 செப்டம்பர், 2014

அத்தை வீட்டுசின்னக் கிளி..


என் அத்தை வீட்டு சின்னக் கிளி
நீயே மாமரத்து இளம் குயிலே
மாமன் வரு வான் வென்று.
மல்லிகைப்பூ தலையில் சூடி
மந்தாரப் பொழுதினிலே.
ஒய்யாரம் செய்கிறாய்

ஒற்றை வழி போறேன் னென்று
ஓரக்கண்ணாலே ஒதுங்கி நின்று பார்க்கிறாய்
காதல் வசந்தம் கல்பனா சக்தியாய்
உன் உச்சந்தலையில் ஏற ஏற
என் ஞாபகமே உன் மனக் கடலில்
ஆர்ப்பரிக்கும் ஆரவாரம்... தாலாட்ட
நிம்மதியாய் நீவிடும் பெருமூச்சில்
திக்கு தடுமாறும் என் இதயம்
நிம்மதியாய் உறங்கிறதே.
அத்த வீட்டு சின்ன கிளியாலே.
 

கடல் அன்னையின் மடியில் இருந்து
துள்ளிக் குதித்து ஓடிவரும்அலைகள் எல்லாம்
கரையை வந்து முத்தமிட்டு செல்லுமல்லவா.
அது போல் உன்னை விட்டு நான் பிரிந்து.
நெடு நாட்கள் வாழ்கிறேன். கடல் கடந்த தேசத்தில்.
நீ காட்டும் கருணை உள்ளம்
நீ காட்டும் அன்பு மொழியால்
நான் தினம் தினம் மகிழ்ச்சிக் கடலில் ஆர்ப்பரிக்கிறேன்.
அத்த வீட்டு சின்னக்கிளியாலே...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 
குறிப்பு
மீண்டும் விருது ஒன்றை எனக்கு உகந்தளித்த
        திருமதி  கமலா ஹரிஹரன் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகள்

 
தீபாவளித் திருநாளை முன்னிட்டு
ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014
                                முடிவுகள் மிக விரைவில் வெளியாகும்.....

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

இதோ விருது அள்ளிச் செல்லுங்கள்....


வணக்கம்

வலையுலக உறவுகளே....
மனதுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுடன் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியாகஉள்ளது. என்ன விடயம் என்றால்...
திரு.கரந்தை ஜெயக்குமார் ஐயா  அவர்களும்
திருமதி விஜயா அம்மா அவர்களும் எனக்கு இன்முகத்துடன் விருது வழங்கியுள்ளார்கள்... அவர்கள் இருவருக்கும் எனது சிரம் தாழ்ந்தநன்றிகள் பல....

நான் பலருக்கு விருது வழங்கியுளேன் வழங்கி கொண்டுதான் இருக்கிறேன். இருந்தாலும் எனக்கு முதலில் விருதை வழங்கியவர் கரந்தை ஜெயக்குமார் ஐயாதான்
இரண்டாவது விருதை வழங்கியவர் -திருமதி. விஜயா அம்மா.
(பெயரில் சொடுக்கவும்)
இருவரும் தந்த விருதை நான் சில பதிவர்களுக்கு பகிர்கிறேன்... இதோ எடுத்துக்கொள்ளுங்கள்.
என்னைப்பற்றி

எனது தாயகம் இலங்கை. இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவன். தாயகத்தில் வெடியோசை கேட்டு கேட்டு படிப்பை தொடர்ந்தவன்.. சொல்லப் போனால் அவலவாழ்கை என்றுதான் சொல்ல வேண்டும் பலதுன்பங்களை சுமந்தவன்..

ஆசைக்கு அம்மா. அப்பா. என்னுடன் சேர்ந்து 8 உடன் பிறப்புக்கள் அதில் மூத்த பிள்ளை நான்.. 6 ஆண் சகோதரங்கள் 1 பெண் சகோதரி.. சொல்லுவார்கள் ஏழு அண்ணனுக்கு இளைய தங்கச்சி என்று சொல்லும் பழமொழிக்கு எங்கள் குடும்பம் அமையப் பெற்றது.

2001ம் ஆண்டு உயர்தரப்பரீட்சை தித்தியடைந்து. அதன் பின்பு. பட்டப்படிப்பை தொடந்தேன் 1.1/2வருடங்கள் நாட்டில் ஏற்பட்ட யுத்தம் என்னை மட்டுமல்ல பலரது வாழ்க்கையை சிதைத்தது..அதன் பின் வட இலங்கை சங்கீத சபையில் கர்நாடக சங்கீதம் படித்தேன்.. அதனை தரம் 6வரை படித்தேன்.. அதில் பல பரீட்சைகள் தாண்டி சித்தியடைந்தேன். அதன் பின்பு 2005.இன் கடைப்பகுதியில் நியமனம் கிடைத்து சங்கீத ஆசிரியராக பாடசாலையில் கடமையாற்றினேன்.

அதன் பின்பு. 2006 உடை உறையுள் எல்லாம் .இழந்து இடம் பெயர்ந்து. வேறு மாவட்டத்தில் 2 வருங்கள் வாழ்ந்தோம்... இப்போது பிறந்தஊரில் வாழ்கிறார்கள் எம் உறவுகள்... நான் வேலையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று தாயகம் கடந்தேன் இப்போதும் தாயகம் கடந்த வாழ்க்கைதான் வாழ்கிறேன்.
தற்போதுஒரு கம்பனியில். Safety Health & Environment 
பதவியில் உள்ளேன்


 ஒரு நபருக்கு இரண்டு விருதுகள் என்ற அடிப்படையில் பகிர்ந்துள்ளேன் அன்பாக எடுத்துக்கொள்ளுங்கள்

1.-திருமதி. கோமதி (அம்மா)  -திருமதி பக்கங்கள்.
2.திருமதி. இனியா(அம்மா)    -காவியக்கவி
3.திரு .ஜோசப் விஜி                 -ஊமைக்கனவுகள்
4.திரு.ஜீவலிங்கம்                    -யாழ்பாவாணன்
5.கவிஞர் இரமணி ஐயா         -தீதும் நன்றும் பிறர் தர வாரா
6.கே.பி.ஜனா                           -கே.பி .ஜனா
7.டொக்டர் திரு. முருகானந்தன்
8.கவியாழி                              -கவியாழி
9.திருமதி.                     உமையாள்.காயத்ரி
10.துளசி ஸ்ரீனிவாஸ்              -மயிலிறகு
11.திரு.கோ.புண்ணியவான்-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

புதன், 10 செப்டம்பர், 2014

இதயத்தில் உன்னை சிறை வைப்பேன்

மங்கைக் கனியே.
மாதுளம் துளிரே.
மாலை நேரத்தில் மயக்கம் ஏனடி
மஞ்சள் இட்ட உன் முகம்
மல்லிகைப்பூ சூடிய வாசனை
வீதியில் செல்லும் என்னை
திரும்பி பார்க்க வைக்குதடி.

நித்தம் நித்தம் உன் நினைவு
நீச்சல் போடுது என் குருதித் தடாகத்தில்.
நீந்தி நீந்திக் களைக்கிறேன்.
நிதமும் வந்து ஆறுதல் சொல்லிடுவாய்
உன் குறும்புச் சிரிப்பு
என்னை சொக்கவைத்ததடி.
சொல்லிச்சொல்லி அழுதாலும்
உன் நினைவு அகலாது.

உறங்கிய பொழுது விழித்தாலும்
உறவைக் கிழித்து எறிந்தாலும்
ஊரை விட்டுப் போனாலும்
உன் வதனம் கண்ணில் தோன்றுமடி.
எப்போவோ ஒரு நாள்.
உன்னை என் இதயறையில் சிறைப்பிடிப்பேன்
அப்போது ஒரு நாள்.
உன்னை மணம் முடிப்பேன்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

எனது கவிதை இலங்கை வானொலி சூரியன் FM மில்
சொடுக்கி கேட்டு மகிழுங்கள்
 

 

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014
வணக்கம் வலையுலக உறவுகளே.

தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டடிக்கான காலம் நீடிக்கப்படுகிறது
ரூபன் & யாழ்பாவாணன்  நடத்தும் மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்…
வாருங்கள்… வாருங்கள்…

வலையுலக உறவுகள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப மீண்டும் காலம் நீடிக்கப்படுகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியாக அறியத்தருகிறோம்…

கவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய காலம்-15.09.2014 

இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கு பல கவிதைகள் வந்துள்ளது… அதில் ஒவ்வொன்றையும் பார்க்கும்போது. கொடுக்கப்பட்ட தலைப்புக்களில் மிகத் தரமான சொல் வீச்சும் கருத்தாடலும், அனைவரையும் கவரும்படி நன்றாக எழுதியுள்ளார்கள்… நீங்களும் அவர்களுடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்...

போட்டியின் நெறி முறைகள்

1.கொடுக்கப்பட்டுள்ள படத்தைதோ்வு செய்து அதற்கான கவிதையை இருபத்து நான்கு  அடிகளுக்கு  மிகாமல் எழுத வேண்டும்.
 
2.விரும்பிய தலைப்பில் மற்றொரு கவிதையை 24 அடிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும்.
 
3படமும் பாட்டும் கவிதைக்கு 50 மதிப்பெண்களும், விரும்பிய தலைப்பில் எழுதும் கவிதைக்கு 50 மதிப்பெண்களும் வழங்கப்படும். இரண்டு கவிதைகளின் மதிப்பெண்களைக் கூட்டி வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்.
 
4மரபுக் கவிதையாகவும் பாடலாம், புதுக்கவிதையாகவும் எழுதலாம்
 
5.கவிதையினைத் தங்கள் பதிவில் 15/09/2014 இரவு 12 மணிக்குள் (இந்திய நேரம்)  பதிவிடப்    
பட்டிருக்கவேண்டும்.
 
6.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது
 
7.மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படா.
 
8.கலந்து கொள்பவர்கள்  பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரி ஆகிய குறிப்புகளைத் தரவேண்டும்.
 
9.வலைத்தளம் இல்லாதவர்கள் கவிதைகளை அஞ்சல் வழி அனுப்பலாம்
 
10.உங்களின் தளத்தில் கவிதையை வெளியிட்ட பின் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி : ramask614@gmail.com  
 
நடுவர்கள் :
1கவிஞர் கி. பாரதிதாசன். -பிரான்சு(http://bharathidasanfrance.blogspot.com )

2கவிஞர் இரமணி. -இந்தியா
(
http://yaathoramani.blogspot.com)

3.டொக்டர் திருமிகு முருகானந்தன். -இலங்கை
(
http://muruganandanclics.wordpress.com)
நிருவாகக்குழு

திரு.பொன்.தனபாலன்(அண்ணா)-      இந்தியா

திரு.இராஜ முகுந்தன் (அண்ணா)-      கனடா

திரு.
. பாண்டியன்-                                       இந்தியா

திரு.
கா. யாழ்பாவாணன்-.                            இலங்கை

திரு.
. ரூபன்
-                                                      மலேசியா

 

 
பரிசுகள்

முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு
(பதக்கமும் + சான்றிதழும் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)
ஏழுஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,+புத்தகம் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)
பெருவாரியானஎண்ணிக்கையில்பங்கெடுத்துக்கொண்டுதமிழ்வளர்க்கவாரீர்வாரீர்என்றுவரவேற்கிறோம்…!மேற்கொண்டுவிளக்கம்தேவையெனில்தயங்காது கீழ்குறிப்பிட்டுள்ளமின்னஞ்சல்முகவரிகளில்தொடர்புகொள்ளுங்கள்…கருத்திடும்அன்பர்கள்தங்களின்பெயர்,மின்னஞ்சல்மற்றும்வலைத்தளமுகவரியைபின்னூட்டத்தில்தெரிவிக்கவும்

தொடர்புகொள்ளவேண்டிய மின்னஞ்சல்-

rupanvani@yahoo.com &dindiguldhanabalan@yahoo.com

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-