புதன், 29 அக்டோபர், 2014

குடிகார அப்பாக்கள்


குடியும் குடித்தனமும் செந் தமிழும் நாற்பழக்கம்
சில அப்பாக்களின் மறையா விழுமியங்கள்
வாழ்நாள் முழுதும் சாலையோரம்
வரம் பெற்ற மனிதனாய்
கவலையற்று தூங்குகிறார்கள்
பல அப்பாக்கள்
இவர்களிடம் ஏன்?அப்பா என்றால்
அகராதியில் இல்லாத  செந்தமிழ் பிறந்திடும்


பகலவனின் ஒளிக்கீற்றின் வெம்மையை தாங்கி
பொண்டாட்டி களத்துக்கு களம் போய்
பிச்சை எடுத்து வரும் நெல்மணியை
சாராய கடையில் விற்றுப் போட்டு
சாராயம் குடிக்கும் குடிகார அப்பாக்கள் எத்தனை பேர்
பிள்ளைகள் கிழிந்த உடுப்புடுத்து
நாலு பேர் ஏழ்மையாய் சிரிக்க
தாங்க முடியாமல் வீட்டின் மூலையில்
இருந்து கொண்டு அழும் பிள்ளைகள் எத்தனை பேர்


தொட்டிலிலே பச்சிளம் குழந்தை பாலுக்கு அழ
புருசனை நம்பி பால்மா வேண்டி வா என்று.
காசி கொடுத்தால் சாராயக் கடையில்
மதுசாரம் ஊற்றும் அப்பாக்கள் எத்தனை பேர்
பொண்டாட்டி பிள்ளைகள்
நாளெல்லாம் பட்டினியாக் கிடந்தாலும்
பத்து ரூபாய் இருந்தாலும் பக்குவயமாய்
குடித்திடுவர் மதுசாரம் நம் அப்பாக்கள்


மதுசாரம் ஒழித்திடுவோம் மதுசாரம் ஒழித்திடுவோம்
ஊர் அதிர பறையடித்தாலும்
மறுநாள் காலையிலே.திர்ப்பக்கம்
மறு கடையும் திறந்திருக்கும்
குற்றங்களை சொல்லி! மேல் இடத்தில் முறையிட்டால்
முறையிட்ட மறு கனமே அவர் உயிர் போய் விடுமே.
இந்த நிலை தொடர்ந்தால் குடிகார அப்பாக்கள்
ஊரெல்லாம் குடியும் குடித்தனமும்
கும்மாளம் தொடருமையா.....

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

புதன், 15 அக்டோபர், 2014

கலங்காதே.... கலங்காதே...

பௌர்ணமி நிலவு போல்
மூன்றாம் பிறை நெற்றித் திலகம்
கணனித் திரையில்பளிச்சிடும்
உருவம் கண்ணெதிரே வந்தது.
கார்கால பனிக்குளிருக்கும்
வரண்ட காற்றுக்கும்
போராடும் இலைகள் போல்
அவளின் முகம் வாடி வதங்கியது..

என்னவளக்கு என்னவனின்
குரலோசை கேட்டபோது
கதிரவன் ஒளிக் கீற்றுக்கு
வதனமே மலரும்
ஆயிரம் இதழ்தாமரை போல்
ஒளி விட்டு சிரித்தது
என்னவளின் புன்னகைதேசம்.

ஈர் ஐந்து நாட்கள்
என்னவளைப் பார்க்கவில்லை
என்னவள் என் நினைவை
நெஞ்சில் சுமந்தபடி.
அழுதழுது வடித்த கண்ணீரை
அவளின் கைக்குட்டை
ஒத்தடம் போட்டது.
அதனை படம் பிடித்து

என் மின்னஞ்சல் பெட்டிக்கு அனுப்பினால்.
நித்தம் நித்தம் காலையில் திறந்த போது
அத்தனையும் கண்ணெதிரே தோன்றியது.
சத்தியமாய் நான் இனி செல்ல மாட்டேன்
சாவும் வரைஉன்னருகில் நான் இருப்பேன்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

புதன், 8 அக்டோபர், 2014

உன் மரணத்தின் வலிகள்....என்னவளே என்னவளே.
எனக்காக பிறந்தவளே.
உன் ஞாபகங்கள் தீயாக எரிகிறது.
உன்னுடன் பழகிய காலங்கள்
என் வாழ்வில் வசந்த காலங்கள்.
 
தனியாக வாழும் நாட்கள் எல்லாம்
ஏதோ ஒன்றை இழந்தது போல 
ஞாபக கீற்றுக்கள்
மனவானில் மையலிடுகிறது.
 
இதயத்தின் துடிப்புக் கூட
உன் ஞாபகங்கள் அலையடிக்கிறது.
அன்பே அன்பே ஒரு கணம். திரும்பிப்பார்
இரவுப் பொழுதில் நிலா வெளிச்சத்தில்
 
முற்றத்தில் கைபிடித்து நடந்த காலங்கள்.
திருவிழாக் காலங்களில்
கோயில் வீதியெங்கும்
நடை பயின்ற காலங்கள்.
 
வீதியில் நான் நடந்து செல்லும் போது
வான் மேகம் கண்ணீர் வடித்த போது
ஓடோடி வந்து குடை பிடித்த ஞாபங்கள்
என்னை தனியாக தவிக்க விட்டு
 
விண்ணுலகம் அடைந்து விட்டாய்
எப் போதும் உன் கல்லறையில்.
என் கண்ணீர்த் துளிகள்
மழைத்துளிகளாக பிரவேசம்.
 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 
 
தீபாவளிக் கவிதைப் போட்டி முடிவுகள் மிக விரைவில்..........

வியாழன், 2 அக்டோபர், 2014

வீதியெங்கும் குழந்தையின் அவலக்குரல்......

குப்பைத் தொட்டிகள் இன்று

தாயின் புனித கருவறையாக மாறிவிட்டது.
தாயின் புனிதக் கருவறை என்று குப்பை
தொட்டிகளாகிவிட்டது.
காமச் சுகம் கண்ட பாதகத்தியால்
நடத்தைப் பிறல்வால்
சீர்கெட்டுப் போகிறது சமுகம்
விடைதெரியாமல் திக்குத் தடுமாறுகிறது.

 
கசங்கிய காகிதத்தை தூக்கி வீசுவது போல்.
என்னை ஏன் தூக்கி வீசினாய்
தெருவோரம் வரிசை வரிசையாய்
உள்ள குப்பைத் தொட்டிகளில்
என் போன்ற குழந்தையின் அழுகைச் சப்தம்
ஊர் ரெல்லாம் அவலக் குரலாக ஒலிக்கிறது
என்ன செய்தோம் தாயே.???
உன் மானம் போய்விடுமோ.???
அல்லது உன் முகவரி தெரிந்து விடும் என்றா


ஆமாம் மகனே ஆமாம்
உன்னை குப்பைத் தொட்டியில் வீசினேன்
இல்லை அம்மா.இல்லை
என்னை ஒரு அனாதை இல்லத்தின்
வாசல் படியில் போட்டிருந்தால்
நான் உயிர் பிழைத்திருப்பேன்
ஊர் அறிய உலகறிய முகவரி அறிய
என் தாய் யார் என்று சொல்லிருக்க மாட்டேன்


உனக்காக ஒரு எச்சரிக்கை.தாயே
உன்நடத்தை பிறல்வால் காமச் சுகம் கண்டு
இனியாவது ஒரு உன் வயிற்றில் இருந்து.
ஒரு குழந்தையை பிரசவித்தால்
குப்பைத் தொட்டியில் போட வேண்டாம்
அனாதை இல்லாத்தின் வாசல் படியில் போட்டுவிடு
உன்னை யார் என்று சொல்ல மாட்டான்
நான் உயிர் பிழைத்து வாழ்ந்திடுவான் தாயே

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-