புதன், 15 அக்டோபர், 2014

கலங்காதே.... கலங்காதே...

பௌர்ணமி நிலவு போல்
மூன்றாம் பிறை நெற்றித் திலகம்
கணனித் திரையில்பளிச்சிடும்
உருவம் கண்ணெதிரே வந்தது.
கார்கால பனிக்குளிருக்கும்
வரண்ட காற்றுக்கும்
போராடும் இலைகள் போல்
அவளின் முகம் வாடி வதங்கியது..

என்னவளக்கு என்னவனின்
குரலோசை கேட்டபோது
கதிரவன் ஒளிக் கீற்றுக்கு
வதனமே மலரும்
ஆயிரம் இதழ்தாமரை போல்
ஒளி விட்டு சிரித்தது
என்னவளின் புன்னகைதேசம்.

ஈர் ஐந்து நாட்கள்
என்னவளைப் பார்க்கவில்லை
என்னவள் என் நினைவை
நெஞ்சில் சுமந்தபடி.
அழுதழுது வடித்த கண்ணீரை
அவளின் கைக்குட்டை
ஒத்தடம் போட்டது.
அதனை படம் பிடித்து

என் மின்னஞ்சல் பெட்டிக்கு அனுப்பினால்.
நித்தம் நித்தம் காலையில் திறந்த போது
அத்தனையும் கண்ணெதிரே தோன்றியது.
சத்தியமாய் நான் இனி செல்ல மாட்டேன்
சாவும் வரைஉன்னருகில் நான் இருப்பேன்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

33 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. ஒத்தடம் என்ற சொல் சரியானது .
   ஒற்றனம் என்ற சொல்லு பேச்சு வழக்கு... அதனால் எழுதினேன்....
   ஒத்தடம்- என்ற சொல்லுக்கு பதிலாக ஒற்றனம் என்று அழைப்பார்கள் எங்கள் பேச்சுத்தமிழில்.
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 2. சாகும் வரை உன்னருகில் நான் இருப்பேன்....

  அருமை சார்...மிகவும் நன்றாக இருக்கிறது...

  பதிலளிநீக்கு
 3. அருமை. பாராட்டுகள் ரூபன்.

  ஸ்ரீராம் சார் கேட்ட அதே கேள்வி எனக்குள்ளும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒத்தடம் என்ற சொல் சரியானது .
   ஒற்றனம் என்ற சொல்லு பேச்சு வழக்கு... அதனால் எழுதினேன்....
   ஒத்தடம்- என்ற சொல்லுக்கு பதிலாக ஒற்றனம் என்று அழைப்பார்கள் எங்கள் பேச்சுத்தமிழில்.
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 4. சிறந்த பாவரிகள்
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 5. உருகி உருகி அருமையாக எழுதியுள்ளீர்கள் ரூபன் பிரிவு துயரம் தானே பிரியாமல் வாழ வேண்டும் என்று நினைப்பது நியாயமே. எண்ணங்கள் ஈடேற வாழ்த்துக்கள் ....!

  பதிலளிநீக்கு
 6. ஒத்தடம் தானே .சாகவேண்டாம்.அருகிலேயே இருந்தால்ப் போதும். நல்ல கவிதை.
  நேசம் இப்படி இருக்க வேண்டும். அன்புடன்

  பதிலளிநீக்கு
 7. கதிரவன் ஒளிக் கீற்றுக்கு
  வதனமே மலரும்
  ஆயிரம் இதழ்தாமரை போல்
  ஒளி விட்டு சிரித்தது
  என்னவளின் புன்னகைதேசம். // மிகவும் ரசித்தேன் ரூபன்.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் சகோதரர் ரூபன்!

  கொன்றிடும் ஏக்கமும் கூத்திடும் உள்ளுணர்வும்
  தின்றுவிடும் என்றீர் தெரிந்து!

  உணர்வுக் கவிவரிகள் சிறப்பு! வாழ்த்துக்கள் சகோ!

  பதிலளிநீக்கு
 9. இப்படி சொன்ன பிறகு எப்படி கலங்குவாங்க... சிறப்புப்பா.

  பதிலளிநீக்கு
 10. உருக்கமான உணர்வு மிக்க கவிதை வரிகள் ரூபன் தம்பி! அருமை! வாழ்த்துக்கள் தம்பி!

  பதிலளிநீக்கு
 11. ஆஹா ஒத்தடம் போட்டாளா!ஹீ கவிதை அருமை.

  பதிலளிநீக்கு
 12. பிரியாமல் இணைந்து இருங்கள் என்றும்
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் சகோதரரே.!

  நல்ல கருத்துச் செறிவுடன் ௬டிய, அற்புதமான கவிதை.! பகிர்ந்தமைக்கு என் வாழ்த்துக்களுடன், நன்றிகள்.!

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 14. ''..சாவும் வரைஉன்னருகில் நான் இருப்பேன்...''


  தீபாவளி நல் வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 15. ஆயிரம் இதழ்தாமரை போல்
  ஒளி விட்டு சிரித்தது
  என்னவளின் புன்னகைதேசம். கவிதை அருமை.

  பதிலளிநீக்கு
 16. சிறப்பான கவிதை. சாக வேண்டாம். ஒருவரின் அன்பில் ஒருவர் கட்டுப்பட்டு பலகாலம் ஒன்றாக இருங்கள். வாழ்த்துக்கள்!

  உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் சகோதரரே

  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 18. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .ரூபன்...!

  பதிலளிநீக்கு
 19. தங்களுக்கும்
  எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
  http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

  பதிலளிநீக்கு
 20. கவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கம்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
  Tha.ma.3

  பதிலளிநீக்கு
 21. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ரூபன்.
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 22. எனது புதிய பதிவு : தேங்காய்க்குள்ள பாம் !

  http://saamaaniyan.blogspot.fr/2014/10/blog-post_15.html

  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி

  பதிலளிநீக்கு
 23. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 24. ஒத்த தடம் பார்த்து நடக்கும் வாழ்வில் ஒத்தடத்துக்கு இடமேது? அழகிய கவிதை. பாராட்டுகள் ரூபன்.

  பதிலளிநீக்கு
 25. சகோதரர் ரூபன் அவர்களுக்கு வாழ்த்துகள்..!
  பாசமான,நேசமான வரிகள்..!
  "அழுதழுது வடித்த கண்ணீரை
  அவளின் கைக்குட்டை
  ஒத்தடம் போட்டது."...
  ...ஈரமான வார்த்தைகள்..! வாழ்த்துகள்..!
  ...நம் வலைநட்பு தொடரட்டும்.
  mahaasundar.blogspot.in

  பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்