ஞாயிறு, 16 நவம்பர், 2014

ரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014

ரூபன்& யாழ்பாவாணன்  இணைந்து நடத்திய  உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014வணக்கம்
வலையுலக உறவுகளே

தீபாவளியை முன்னிட்டு இணையத்தளத்தில் படைப்புக்களை படைத்துவரும் படைப்பாளிகளுக்கு  என்னால் இயன்றஅளவு ஊக்குவிக்க வேண்டும் என்ற சிந்தனை என்னுள் உதித்ததன் விளைவாக ஒருமாதம் கவிதைப்போட்டி நடைபெற்றது அதன் இறுதி வடிவம் இன்று கிடைக்கப்பெற்றுள்ளது….
கவிதைப்போட்டியில்மொத்தமாக பங்கு பற்றியவர்களின் விபரம் நாளை பதிவாக வலம் வர உள்ளது பார்க்காதவர்கள்.பார்க்கலாம்  மொத்தமாக 54 பேர் பங்கு பற்றியுள்ளார்கள் ஒருவர் இருகவிதை என்ற அடிப்படையில் 108 கவிதைகள் வந்துள்ளது.அதில் 10 பேர் சிறந்த போட்டியாளராக  தேர்வுசெய்யப்பட்டுள்ளது

 குறிப்பாக சில நுணுக்கங்களை கையாண்டு நடுவர்கள் மிகத் திறமையாக தெரிவு செய்தார்கள் உதாரணமாக ஒரு தொலைக்காட்சில் பாட்டுப்போட்டி நிகழ்ச்சி போலதான் போட்டிக்கு வருகிற பாடகர்கள் அனைவரும் மிக அருமையாக பாடுகிறார்கள் நடுவர்களின் கட்டாயத் தீர்ப்பு ஒருவரை தெரிவுசெய்யவேண்டும்அங்கும் சில நுணுக்கங்களை கையாண்டு நாடுவர்கள் தெரிவு செய்கிறார்கள்

அதைப் போல எல்லா படைப்பாளிகளும் மிக நன்றாக கவிதை எழுதியுள்ளார்கள் அவர்களுக்கு முதல் நான் பாராட்டை தெரிவித்துகொள்கிறேன்

வெற்றி வாகை சூடிய போட்டியாளர்களின் விபரம் வருமாறு..

 1.ம் இடம் திருமதி- கவிஞர் –இளமதி
   வலைத்தள முகவரி-இளைய நிலா

----------------------------------------------------------------------------------------------------------

2.ம் இடம் திரு –கவிஞர்-சிவகுமாரன்

வலைத்தளமுகவரி-சிவகுமாரன் கவிதைகள்

-----------------------------------------------------------------------------------------------------------

3.ம் இடம் இரா.எழிலி

வலைத்தளம் இல்லை மின்னஞ்சல் கவிதை


தலைப்பு-வண்ண மலர்ச்சரத்தை வாடுமுன்னே சூட்டிவிடு!

புத்தாடை உடுத்த
புன்முறுவல் பூத்த
மன்னவன் பார்த்திடவ
மலர்ந்திங்கு நின்றாயோ?
ஓவியமாய் உனைப்பார்த்துக
காவியங்கள் படைப்பானோ?
பிடையிடையில் மலர்க்கூட
உடைக்கேற்ற பூச்சரங்கள்!


காந்தக் கண்ணால்
கவர்ந்தாயோ மன்னவனை!
சார்ந்து நிற்பவளின
சஞ்சலங்கள் அறியானோ?
கஞ்சிக்குள் உப்பா
கலந்திட்ட அவன்நினைவால
வஞ்சியவள் நெஞ்சத்தில
கொஞ்சமல்ல கற்பனைகள்!

பூத்த புன்னகையும
பூவிதழ் தேன்சுவையும
மேவிய காதலினால
மென்மேலும் வளராதோ?
நித்திரையில் முத்திரையாய
நின்றிருக்கும் மன்னவனே!
வண்ண மலர்ச்சரத்த
வாடுமுன்னே சூட்டிவிடு!

 தலைப்பு-தழைக்காதோ தாயகமே!

நாட்டின் உயர்வுக்க
நாளுமொரு திட்டம்!
வீணர்கள் சிலரால
விழலுக்கு நீராக!
எங்கே பிழை என்று
ஏங்கிநாம் தவிக்கின்றோம்!
தாங்கிவரும் செய்திகள
தலைக்குனிவைத் தந்திடுதே!

சிறுமியர்க்குக் கொடுமைகள்!
வறுமையால் தற்கொலைகள்!
கற்பழிப்பு, கொலைகளெலாம்
ஏற்புடைத்தா? எண்ணிடுவோம்!
மதுவுக்கு அடிமையெ
மயங்கிக் கிடப்போரின
குடும்பங்கள் சீரழிந்த
படுந்துயரம் பரிதாபம்!

ஒருதலைக் காதலுக்க

உடன்படவில்லையெனில
தெருவழி வரும்போத
திராவகத்தை வீசுவதா?
உள்ளத்தில் தெளிவுடன
ஒழுக்கமாய் வாழ்ந்திட்டால
விழுமிய நிலையடைந்த
தழைக்காதோ தாயகமே
---------------------------------------------------------------------------------------------
  திரு.புதுவைப் பிரபா

வலைத்தமுகவரி-புதுவைபிரபா
                                      புதுவைபிரபா
---------------------------------------------------------------------------------------------
புதுவை .செந்தில்
வலைத்தள முகவரி-புதுவை செந்தில்
                                            புதுவை செந்தில்
------------------------------------------------------------------------------------------

.திரு. காரஞ்சன்-
வலைத்தள முகவரி-காரஞ்சன்
                           காரஞ்சன்
-----------------------------------------------------------------------------------------
மருத்துவர் கே.தனசேகரன்-

வலைத்தளம்-இல்லை.-மின்னஞ்சல் கவிதை
 
 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சியமளா .ராஜசேகர்

வலைத்தளம்-இல்லை.-மின்னஞ்சல் கவிதை
காத்திருக்கும் கன்னி (வெண்பாக்கள் )

கண்ணிரண்டில் காதலுடன் காத்திருக்கும் கட்டழகி
கண்டாங்கி கட்டிக் கவர்ந்திடுவாள் - எண்ணற்ற
கற்பனைகள் நெஞ்சிலோட கால்கடுக்க நின்றிருப்பாள்
நற்றமிழ் தேன்மொழி யாள் .
செஞ்சாந்து பொட்டுவைத்து செவ்வரளிப் பூத்தொடுத்து
கெஞ்சுவிழிப் பார்வையால் கிள்ளினாய் -மஞ்சுளமே
முத்துநகைப் போட்டவளே முல்லைப்பூ வைத்தவளே
சித்திரமே பெண்ணே சிரி .

பூக்கூடை மெல்லிடையில் புன்முறுவல் பூத்தபடி
ஏக்கமுடன் பார்த்தல் எவருக்காய் ?- சீக்கிரமே
வாரானோ காக்கவே வைப்பானோ அன்றியும்
சேரானோ உன்னையே சொல் .
கடிதம் வருமெனக் காத்திருந்து மெல்லத்
துடிக்கும் இதயத்தைத் தேற்றி - அடித்த
மணியோசைக் கேட்டு மலரை, சிலைக்கு
அணிவிக்கச் சென்றாள் அணங்கு .
மஞ்சளிலே பட்டுடுத்தி மாங்கல்யம் சூட்டிட
வஞ்சியைக் கைப்பிடிக்க வந்தானோ ?- கொஞ்சிட
இன்பமது பொங்கும் இசைவெள்ளம் பாய்ந்திடும்
அன்புமனம் ஒன்றுகலந் தால் .

கன்னியவள் பார்வை கவிதைபல சொல்லிடும்
தென்பொதிகைச் சாரலாய் பூத்தூவும் - கன்னலாய்
தித்திக்கும் வான்மழையும் தேன்சிந்தும் என்றுமே


சித்திக்கும் காதல் சிறப்பு
விடியல் வந்திட இருளும் விலகும் !!!
ஒடிந்த உள்ளத்தை ஒன்றாய் இணைத்து
>>>>ஒட்டிட முடியுமோ செல்லக் கிளியே ?
இடியாய்த் தாக்கும் துன்பங்கள் தொடர்ந்தால்
>>>>இன்பம் வருமோ செல்லக் கிளியே ??
நொடிக்குள் நூறு சலனங்கள் மனதை
>>>>நொந்திடச் செய்யும் செல்லக் கிளியே !

வடிக்கும் விழிகள் வஞ்சக சூழ்ச்சியால்
>>>>வதனமும் வாடும் செல்லக் கிளியே !!
குடிக்கும் மனிதன் திருந்த மறுத்தால்
>>>>குடும்பம் குலையும் செல்லக் கிளியே !
அடிதடி சண்டை அடிக்கடி நடந்தால்
>>>>அமைதி விடைபெறும் செல்லக் கிளியே !!
பிடித்த வாழ்க்கை அமையா விட்டால்
>>>>பிறவியும் சாபமே செல்லக் கிளியே !

துடிக்கும் இதயம் தன்பணி முடித்தால்
>>>>துக்கமே இல்லத்தில் செல்லக் கிளியே !!
படிக்கும் மனதில் அறியாமை அகன்று
>>>>பகுத்தறிவு நிறையும் செல்லக் கிளியே !
முடியும் என்ற நம்பிக்கை இருந்தால்
>>>>முயற்சி கைகூடும் செல்லக் கிளியே !!
வெடிக்கும் பட்டாசு ஒளியில் மகிழ்ச்சி
>>>>வெள்ளம் பொங்கும் செல்லக் கிளியே !
விடியல் வந்திட விலகிடும் இருளும்
>>>>விரக்தி ஏனடி செல்லக் கிளியே ....!!!

--------------------------------------------------------------------------------------------------

புதுவை சந்திரஅரி


வலைத்தளம்-இல்லை.-மின்னஞ்சல் கவிதை


 பூக்கூடையை  சுமந்த பூவே.
பூவுக்கு எதற்கு பூக்கூடை?
உன்னில் எத்தனை பூக்கள்
பூக் கண்ணில் எத்தனை பாக்கள்

 நீ நிப்பதேஒரு கவிதை
உன் நளினமே ஒரு காவியம்
நீ ஒர் அழகு ஓவியம்
உன் இதழ்கள் தேன் மலர்கள்

 உன் விழிகளில் என்ன கவர்ச்சி?
அது தருகிறதே புத்துணர்ச்சி
கன்னங்கள் தங்க கிண்ணங்களா?
அதில் உள்ளது முத்துக் குவியல்களா?

 உன் இதழ்களின் புன் சிரிப்பு
புன் பட்டதே பார்த்த மனசு
உன் ஓரப்பார்வை யாரைத் தேடுகிறது?
என் ஆசை அது என்னைத்தான் என்று.

 உன் வளையல்கை தொடும் பூக்களில்
நானும் ஒன்றாக கூடுமோ சொல்.
ஒயிலாக நிற்கின்ற மயிலே
கொஞ்சம் பாடினால் என் குயிலே.

 வாசலில் நிக்கும் வெண்நிலவே.
பௌர்ணமிதான் என்றும் உன் வீடு
கவிதை புனைய கற்பனை வேண்டும்
உன் முகமே என் கவிதைக்கு விதை

 கவித்தலைப்பு-சுமைகள்

பிறந்தவுடன் பயணம் செய்தேன் இறப்பதற்கு
போகும் வழியில் எதையெதையோ சுமப்பதற்கு
தத்தி தத்தி நடக்கையிலே என்ன என்ன சுகங்கள்
தள்ளாடிப் போகையிலே எத்தனையோ சுமைகள்

 பள்ளி போகையில் பாடங்களை சுமந்தேன்
படித்துமுடிக்கையிலே பட்டங்களை சுமந்தேன்
பருவத்தின் வாசலிலே கனவுகளை சுமந்தேன்
பாவையாரை கான்கையிலே கற்பனைகள் சுமந்தேன்

வேலைஒன்றை தேடும்போது விரக்தியினை சுமந்தேன்
வேலையது கிடைத்தபோது பேராசைகளை சுமந்தேன்
ஆசைக்கு ஒருத்தியென்று வந்தவளை சுமந்தேன்
ஆசையோடு அவள் பெற்றவரை பாசத்தோடு சுமந்தேன்

 பெற்றபிள்ளை வளர்த்திடவே தியாகங்களை சுமந்தேன்
வளர்த்தபிள்ளை விட்டுஓடும்போது வேதனையை சுமந்தேன்
சொந்தம்மென்று பந்தமென்று பலபேரை சுமந்தேன்
அவள் தந்த தொல்லைகளை சுகமென்றே சுமந்தேன்

 முதுமையிலே தனிமையிலே வெறுமையினை சுமந்தேன்
முச்சுவிடும் நேரத்திலும் ஆசைகளை சுமந்தேன்
உடலோடு சேர்ந்துவரும் உயிரையும் நான் சுமந்தேன்
உயிர் போகும் நேரத்திலும் நான் செய்த பாவங்களை சுமந்தேன்

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

.சிற்றுளி என்ற  ராம் கணேஷ்-

வலைத்தளம்-இல்லை.-மின்னஞ்சல் கவிதை

நிறைஅர்த்தநாரி

பட்டுடுத்தி பூவை விற்கும்....
பூவை எதிர் பார்ப்பதெல்லாம்....
பட்டறிவால் ஊர் அறிந்த....
பண்பட்ட ஆண் மகனை!
மைவிழியால் மையல் கொண்டு....
மயக்கு பார்வை பார்ப்பதெல்லாம்....
தன்சுயத்தால் தானே நிற்கும்....
திண்மை கொண்ட ஆடவனை!

 பூச்சரத்தை முழம் அளக்கும்....
நெஞ்சுரத்தை மனம் அளக்கும்....
பார்வையாலே தரம் அளக்கும்....
இவளுண்மைதுலாக்கோலேத்தான்!
எலுமிச்சைக் கனி முகத்தாள்....
இமையசைவைப் பெற்றுவிட்டால்....
எழுமிச்சை ஆசைத் தீர்க்க....
பாரில் நாளும் போர்கள் மூளும் !

இடைநில்லா கூடைப்பூவை....
தடையில்லா மாலையாக்கி....
சுயம்வரத் தீ மூட்டிவிட்டால்....
பகை நாடும் நட்பாய் மாறும்!
பெண்மையின்றி ஆண்மையில்லை!
மென்மையில்லா மேன்மையில்லை!
ஆண்பெண் நிகர் இல்லையென்றால்....
அர்த்த நாரி  உலகில் இல்லை!!!!

 
கவித்தலைப்பு-வெளிச்சம்

 காலை வேளையில் கதிரவன் சிவந்து
தருவது ஓர் வெளிச்சம்!

 நண்பகல் வேளையில் அவனே தருவான்
சூட்டுடன் ஒளி வெளிச்சம்!

 அந்தி மாலையில் சூரியன் ஓய்ந்து
அளிப்பதும் ஓர் வெளிச்சம்

 இது மானிட குணத்தை விளக்கிட வருகிற
திருவதன்ஒலி’ – வெளிச்சம்!

 ஈகையும் கோபமும் வெளிச்சமாய் இருந்தால்
பாதிப்பு இருப்பதில்லை!

 வஞ்சனை கேடு  வெளிச்சமாய் இருந்தால்
நற்குடி வாழ்வதில்லை!

 நண்பகல் வேளைப்போல் செல்வம் பெருகிடின்
பஞ்சம் நிலைப்பதில்லை!

 வாழ்வினில் பக்குவம் எழுபதில் வருவதால்
மோட்சமும் கிடைப்பதில்லை!

 இருட்டினில் மெழுகினை ஏற்றிடக் கிடைப்பது
சிந்தனை செயல் வெளிச்சம்!

மூடத்தைப் போக்கி கல்வியை விதைப்பது
ஆளுமை தரும் வெளிச்சம்!

ஆழ்மனம் தூண்டி அறிவொளி தருவது   ஆற்றலின் உயர்
நல்வழி காட்டி தலைமுறை  வளர்ப்பது
நிகரற்ற ஓர் வெளிச்சம்!
------------------------------------------------------------------------------------------------------------------------------

 பல வழிகளில் கவிதைப்போட்டியை நடத்தபக்க பலமாக இருந்த நடுவர்கள்
திரு.கவிஞர். கி.பாரதிதாசன் (ஐயா)
திரு.கவிஞர். ரமணி (ஐயா)
டெக்டர்- எழுத்தாளர்-திரு.முருகானந்தன் ( ஐயா)
இவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்ளுகிறேன்
அத்தோடு கவிதைப்போட்டியின் நிருவாக குழு அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்ளுகிறேன்

 அத்தோடு பல வழிகளில் பலவகைப்பட்ட உதவிகளை செய்து போட்டியை நடத்த வேண்டும் என்று  உச்சாகம் கொடுத்தது மட்டுமல்லாமல் என்னுடன் சேர்ந்து போட்டியை நடத்திய
எழுத்தாளர் திரு. யாழ்பாவாணன் ( அண்ணா) அவர்களுக்கு எனது  உளம் கனிந்த நன்றியை தெரிவிக்கிறேன்…


வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு (பதக்கம் +சான்றிதழ்+புத்தகம்) எல்லாம் மிக விரைவாக அனுப்பிவைக்கப்படும்  கீழ் உள்ள விபரங்களை கீழ்காணப்படும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
rupanvani@yahoo.com

1 .முகவரி
2. தெலைபேசி இலக்கம்

இந்த இரண்டையும் காலம்தாமதிக்காமல் அனுப்புமாறு தயவாக வேண்டிக்கொள்கிறேன்
சிறப்புச் செய்தியாக

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மீண்டும் உலகம் தழுவிய  போட்டிகள்  நடத்ததிட்டமிட்டுளேன்.. மிக ஆர்வமாக பங்கபற்றுங்கள்… இது சம்மந்தமான அறிவித்தல் மிக விரைவில் வலம் வரும்………
 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

46 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரர் ரூபன்!..

  என்னால் இச் செய்தியை நம்ப முடியவில்லை!
  ஆனாலும் நம்பித்தான் ஆகவேண்டியுள்ளது!...

  எனது இந்த வெற்றிக்குக் காரணமான அன்னைத் தமிழிற்கும்
  இலக்கண அறிவூட்டிக்கொண்டிருக்கும் அன்பான ஆசான்
  கவிஞர் கி. பாரதிதாசன் ஐயாவுக்கும்
  வலைத்தள அனைத்து நட்புக்களுக்கும் என் உளமார்ந்த நன்றி!!!

  என்னுடன் இங்கு கவிதைப் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும்
  வெற்றியீட்டிய சக கவிஞர்களுக்கும் இதயங்கனிந்த இனிய நல் வாழ்த்துக்கள்!!!

  தங்கள் பொன்னான நேரத்தைப் போட்டிக் கவிதைகளைப் படித்துத் தரமிட்டு
  பரிசிற்குத் தேர்ந்தெடுத்த நடுவர்கள், உதவிபுரிந்த நிர்வாகக் குழுவினர்
  அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள்!

  ஐயா யாழ்பாவாணன், சகோதரர் ரூபன் ஆகியோரின் தமிழ்மொழி வளர்க்கும்
  ஒப்பற்ற இப்பணிக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கமுடன் வாழ்த்துக்களும்!

  மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 2. உலகத் தமிழிணைக்கும் உங்கள் பணிக்கும், போட்டியில் கலந்து கொண்ட அனைவர்க்கும் வெற்றி பெற்ற கவிஞர்களுக்கும் உளங்கனிந்த வாழ்த்துகள்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 3. கவிதைபோட்டியில்முதல் பரிசை வென்ற எங்கள் சகோதரி இளமதிக்கு மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
  இப்படியொரு மாபெரும்திருவிழா போட்டியை நடத்திய சகோதரர் ரூபன் மற்றும் குழுவினருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 4. congratz all of you..
  எல்லோருக்கும் இனிய வாழ்த்துகள்.
  Vetha.Langathilakam.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 5. தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் முடிவுகள் எல்லோர் உள்ளத்திலும் மகிழ்வைத் தரட்டும்.
  தங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள்.
  தங்கள் பணி தொடர
  எனது ஒத்துழைப்பு என்றும் இருக்கும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 6. வெற்றிபெற்ற அனைவருக்கும் என் விலைமதிக்கமுடியா வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 7. அமர்க்களமாக ஒரு போட்டியை நடத்தி கவிஞர்களை கௌரவப் படுத்தி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் பரிசு வென்றவர்களுக்கும்,கலந்து கொண்டவர்களுக்கும். யாழ் பாவாணன் மற்றும் ரூபனின் ஆர்வத்திற்கும் உழைப்புக்கும் பாராட்டுக்கள் தொடரட்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 8. ஆஹா முடிவுகள் வந்துவிட்டனவா எனக்கு தெரியாதே இளமதியின் பதிவைக் கண்டு தான் இங்கு வந்தேன். மிக்க மகிழ்ச்சி வெற்றி பெற்றவர்களுக்கும் கலந்து கொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். இவற்றை முன்னின்று நடாத்தும் ரூபனுக்கும் சகோ யாழ்பாவனருக்கும் மற்றும் நடுவர்கள் ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் என் என் மனமார்ந்த நன்றியும் பாராட்டும் உரித்தாகட்டும். மேலும் தமிழ் வளர்ப்போம். வாழ்க தமிழ் ! நன்றி நன்றி நன்றி !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 9. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  வெற்றிகரமாக நடத்திய தங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 10. போட்டியில் வெற்றிபெற்ற அனைவருக்கும் பாராட்டுக்களும் ,வாழ்த்துக்களும்,போட்டியை முன்னின்று நடத்திய ரூபன்,யாழ்பாவணருக்கும் மனமார்ந்த நன்றிகள்----சரஸ்வதி ராசேந்திரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 11. ரூபன் உள்ளிட்ட போட்டி அமைப்பாளர்களுக்கும் அய்யா பாரதிதாசன் உள்ளிட்ட நடுவர் குழுவுக்கும், இளமதி உள்ளிட்ட போட்டியாளர்களுக்கும்,என்னில் இருக்கும் சிறு கவிஞனை எப்போதும் உயிர்ப்போடு வைத்திருக்கும் சக பதிவர்களுக்கும் என்னைத் தாங்கி நிற்கும் என் தமிழுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 12. பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 13. வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 14. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  வெற்றிகரமாக நடத்தியவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 15. போட்டியில் பங்கேற்று வெற்றி வாகை சூடிய அனைவருக்கும் வாழ்த்துகள்! பாராட்டுகள்! இந்தப் போட்டியை ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்திய திரு ரூபன், யாழ்பாவாணருக்கும் மிக்க நன்றி! திறம்பட செயலாற்றிய நடுவர் பெருமக்களுக்கும் என் நன்றீ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 16. வாவ்வ்வ் முதல் பரிசை வென்ற இளமதிக்கும்.. மற்றும் பரிசு பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  போட்டியினை இனிதே நடாத்தி முடித்த ரூபனுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 17. வெற்றி வாகை சூடிய போட்டியாளர்களில் என் பெயரும் இருக்கக்கண்டு மகிழ்ந்தேன் . வெற்றி பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் . போட்டியை நடத்தி கவிஞர்களை ஊக்கப்படுத்திய ரூபன் & யாழ்பாவாணன் இருவருக்கும் பாராட்டுகளுடன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 18. பரிசுகள் பெற்ற அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
  இப்போட்டியை திறம்பட நடாத்தி முடித்த சகோ ரூபன் ,யாழ்ப்பாவாணன் ஐயா அவர்களுக்கும் நடுவர்களுக்கும் தமிழன்னை சார்பில் வாழ்த்துக்களை சொரிகின்றேன் வாழ்க வளமுடன் !

  சகோ இளமைதிக்கு !


  கற்றதமிழ் உண்டு கரும்பாக்கி இப்புவியில்
  பெற்றாய் பரிசு பெருங்கவியே - சிற்றம்
  பலத்தான் சிகைதழுவும் பால்நிலவாய் பாரில்
  வலம்வர வேண்டும் வளர்ந்து !

  நன்றே செய்வாய் நலம்பெறுவாய்
  நாளும் சிறப்பு பெற்றிடுவாய்
  இன்றே தொடங்கும் எதிர்காலம்
  இனிக்க வைக்கும் எந்நாளும்
  பொன்னும் புகழும் புவிமீதில்
  பொழியும் போதும் உன்மனதில்
  என்றும் வாழும் எம்தமிழே
  எழிலாய் வளரும் நன்கறிவேன் !

  அன்னை மண்ணும் அதன்சிறப்பும்
  அழகாய் சொல்லும் கவியமுதே
  புன்னை வனத்துப் பூங்குயிலாய்
  புலத்தில் பாடி பறந்திடுவாய்
  என்னை ஈன்ற தாய்போல
  என்றும் அன்பை சொரிபவளே
  இன்னும் இன்னும் பரிசுகளை
  இனிக்க இனிக்க பெற்றிடுவாய் !

  வாழ்த்துக்கள் சகோ இளமதி மென்மேலும் வளர நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   ஓதிய வரிகள் கண்டு மகிழ்ந்தேன் இளமதி இன்னும் பல போட்டிகளில் வெற்றி வாகை சூட எனது வாழ்த்துக்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 19. அற்புதமான கவிதைகள்
  மிகச் சரியான தேர்வு

  எத்தனை சிரமங்கள் இருப்பினும்
  மிகச்சிறப்பான முறையில்
  கவிதைப் போட்டிகள் தொடர்ந்து
  நடத்திவரும் தங்களுக்கு என்
  மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   தங்களின் ஒவ்வொரு கருத்துக்களும் என்னை ஏணிப்படி போல் உயர்த்துகிறது
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு 20. பரிசுகள் பெற்ற அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வெற்றிகரமாக நடத்திய இருவருக்கும் வாழ்த்துக்கள். கவிதை படைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 21. வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்...
  போட்டியை சிறப்பாக நடத்தியமைக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 22. அழகான கவிதைகள்!

  பரிசு பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்! இதனை வெற்றிகரமாக நடத்திய உங்களுக்கும், நண்பர் யாழ்பாவாணனுக்கும் வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள். நடுவர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 23. வெற்றிபெற்ற அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 24. அற்புதமான கவிதைகள்
  பரிசு பெற்றவர்களுக்கும்
  இந்தப் போட்டியை மிகச் சிறப்பாக நடத்தி முடித்த
  தங்களுக்கும் நடுவர்களுக்கும் நிர்வாகக் குழுவினருக்கும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்