புதன், 31 டிசம்பர், 2014

வீதியோர தேவதை…

வீதியோரம் போகயில் விதியாக வந்தாள்.
என் வீதியோர தேவதை  உன்.
நிழலாடும் போது  உன் நினைவாடுகிறது.
வந்தாடும் நினைவில் என்னை பந்தாடுகிறாய்.
சொல்லாமல் சொல்லும் வார்த்தையில்
என்னை  நீ வென்றாடுகிறாய்.
சொல்லாடும் வேளையில் நீ சொந்தங்களை
சொன்னாய் பாவி மகளே.

வந்தாடியதால் வெந்தாடியது என்னுள்ளம்.
நொந்தாடி திரிகிறேன் பந்தாடும் வீதியிலே.
முன்னாடி போகிறாய் நான் பின்னாடி வருகிறேன்.
தன்னாலே சொன்னாய் காதலை -அன்பே
என் மெய் நாடி ஏற்றது காதலை-அன்பே
உன் மெய் நாடி வந்தது என் உள்ளம்.
காதல் போதையால் தள்ளாடித்
திரிந்தது என்னுள்ளம் அன்பே.


மண்டாடி கேட்கிறேன் உன்னிடம்-அன்பே
நான் மறைத் தீர்ப்புக்கு சாட்சியாய்
மாறுதல் இல்லாமல் சொல்வாயா- அன்பே
உன்னிடத்தில் என்மீது அன்பு உள்ளதா?
சத்தியமாய் நிருபிக்க  அவகாசம் கேட்காதே.
காலம் மென்னும் வெள்ளத்தில் காலத்தை கடத்தாதே
காலம் கடந்தாலே காலதேவனும் மன்னிக்க மாட்டான்
நம் காதலும் வெகு துாரம் கடந்திடுமே.


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 
 
 

23 கருத்துகள்:

 1. காலம் கடந்தாலே காலதேவனும் மன்னிக்க மாட்டான்
  நம் காதலும் வெகு துாரம் கடந்திடுமே.//

  ஐயோ வேண்டாமே! காதல் வெல்ல வேண்டும்! தம்பி! அந்தத் தேவதைக்கு காலம் கடக்காமல் சொல்லிவிடு என்று செய்தி அனுப்பிடலாமா? தம்பி!!!!?

  அருமை அருமை!

  பதிலளிநீக்கு
 2. அதானே...? காலம் தாழ்த்தலாமா...?

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. காதல் நிறைந்து கவிதை வழிகிறது அன்பு ரூபன் !!!
  அருமையான படைப்பு!
  இன்னும் தாருங்கள்!
  த ம 2

  பதிலளிநீக்கு
 4. கவிதை அருமை ! காலம் தாழ்த்தாது காதல் போதையில் தள்ளாடும் உம்தனுக்கு உகந்த பதில் கிட்ட புதிய ஆண்டில் வழி கிட்டட்டும் என்று வாழ்த்துகிறேன். ,,,! அன்பான ரூபனுக்கு இப்புதிய ஆண்டில் எண்ணம் போல் விரும்பிய அனைத்தும் ஈடேற வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன் ..... !

  பதிலளிநீக்கு
 5. சத்தியமாய் நிருபிக்க அவகாசம் கேட்காதே.-உண்மை அன்பு நிருபிக்கப்பட வேண்டியதோ .புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 6. உன்னிடத்தில் என்மீது அன்பு உள்ளதா?
  சத்தியமாய் நிருபிக்க அவகாசம் கேட்காதே. உண்மையான அன்பும் நிருபிக்கபட வேண்டுமோஞ?. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 7. புத்தாண்டில் தம் காதலை உங்களக்குச் சொல்லிவிடுவார். கவலை வேண்டாம்.

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், ரூபன்!

  பதிலளிநீக்கு
 8. ஒவ்வொரு வரியும் அழகு! சிறப்பான காதல் கவிதை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 9. புத்தாண்டில் எல்லாம் வசமாக வாழ்த்துகிறேன் சகோ.

  பதிலளிநீக்கு
 10. காலம் கடந்தாலே காலதேவனும் மன்னிக்க மாட்டான்
  அருமை நண்பா,,,,, எமது இனிய 2015 புத்தாண்டு வாழ்த்துகள்
  தமிழ் மணம் 6

  பதிலளிநீக்கு
 11. தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 12. புத்தாண்டு வாழ்த்துக்கள்.இந்த இனிய புத்தாண்டில் காதல் கனிந்து வர வாழத்துக்கள்.
  தை பிறந்தால் வழி பிறக்கும் நல்ல சேதியும் வரும் ரூபனிடமிருந்து என்று எதிர்ப்பார்க்கிறேன்.
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 13. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரா !

  பதிலளிநீக்கு
 14. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  அன்புடனும் நட்புடனும்

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
 15. # சொந்தங்களை
  சொன்னாய் பாவி மகளே.#
  எந்த சொந்தத்தை சொன்னாள்,அந்த பாவி மகள் ?
  த ம 8

  பதிலளிநீக்கு
 16. அருமை சகோ, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 17. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ரூபன்...

  பதிலளிநீக்கு
 18. அருமை அருமை சகோ.

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 19. அருமை ரூபன்.

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 20. அன்பு சகோ ரூபன் அவர்க்ளுக்கு! இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்! தங்களது கவிதைத்தொகுப்பினை இந்த ஆண்டு எதிர்பார்க்கலாமா? ஆண்டு பிறப்பே அழகிய காதலை சொல்லுதே! வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 21. அருமை..புத்தாண்டு வாழ்த்துகள் சகோ.

  பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்