புதன், 30 டிசம்பர், 2015

இறந்த சடலத்தின் கற்பனை அழுகை.

நான் துள்ளி விளையாடிய காலங்கள்
நிரந்தரமாய் மௌனித்த நேரம்
வீட்டுத் திண்ணையில் உறவுகள்
சூழ படுத்த படுக்கையில் கிடக்கிறேன்.
உணர்வுகள்  அற்று.சடமாக.

 நான் உயிருடன் இருக்கும் போது
அழகிய பெயர் சொல்லி கூப்பிடஉறவுகள்
நான் மரணித்த பின் சவம் என்ற
பெயரே எனக்கு வைத்து விடுகிறார்கள்.

 நான் வரைந்த ஓவியங்கள்
நான் எழுதிய கவிதைகள்.
நான் செய்த கட்டில் கதிரைகள் எல்லாம்
நான் வேண்டி புதிய கார்
விட்டுவிட்டு தனியாக செல்கிறேன்.

அழகு பார்த்து அழகு பாரத்து நான்
கட்டிய வீடு நான் துள்ளி விளையாடிய முற்றம்
நான் சம்பாரித்த பணம்
என்னை நீண்ட நேரம் வைத்திருக்க முடியாதாம்
ஏன் நான் மரணித்த சவம் என்பதால்.

 மரணம் எனக்கு மட்டுமல்
பூமியில் உயிராக அவதரித்த
ஒவ்வொரு ஜீவனுக்கும் உண்டு.
மரணம் வருமென்று அறிந்தும்
இப்படித்தான் இருக்கிறான் மனிதன்.

புகழ் பணம் எல்லாம் சம்பாரித்தும்
இறுதியில் வருதில்லை.
மனிதனாக வாழும் காலத்தில்
நண்மையை செய்து வாழுங்கள்
உங்களை சொர்க்கத்தில் சேர்த்துவிடும்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
27/12/2015 அன்று மலேசிய பத்திரிகை தமிழ் மலரில் வந்த கவிதை

வியாழன், 24 டிசம்பர், 2015

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி.-2016

 
 
தைப்பொங்கல் திருநாள் கவிதைப்போட்டி சம்மந்தமாக விரிவான விளக்கம் பெற
செல்லவும்.
 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

புதன், 23 டிசம்பர், 2015

இதுவரை……… என்ற நூல் பற்றிய விமர்சனம்


 

10-1-2016 தினக்குரலில் வெளிவந்த விமர்சனம்-இலங்கையில்

ஈழத்தில் பிறந்து வளர்ந்த அன்பான உறவு தற்போது புலம்பெயர்ந்த ஈழத் தமிழராக கனடாவில் வாழ்கிறார் அவர்தான் கனடாவில் வெளிவரும் உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் உரிமையாளரும் திரு.ஆர்.எஸ்.லோகேந்திரலிங்கம் அவர்கள்

புத்தக வெளியீட்டு விழாவுக்காக கனடாவில் இருந்து மலேசியா வந்த போது அவருடைய கை ஓப்பம் இடப்பட்ட புத்தகம் பரிசாக தந்த போது அதை படிக்க நேர்ந்தது.எப்படியான விடயங்கள் இருக்கிறது என்பதை நாம் முதலில் பார்ப்போம் என்றால்.

கனடா உதயன் பத்திரிகையில் தலைப்புக்களை சுமந்த வண்ணம் மிளிர்கிறது. அணுஆயுதம் தாங்கினால் ஒரு எல்லைதான் அழியும் ஆனால் ஒரு பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்ற ரீதியில் ஒவ்வொரு தலைப்பும் பல வரலாற்று சம்பவங்களை சொல்லும் அளவுக்கு ஈழத்தில் நடைபெற்ற ஒவ்வொரு சம்பங்களையும் ஆண்டுகள் ரீதியில் பட்டியல் இட்டு அதற்கான விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.இலங்கை அரசாங்கத்துக்கும் ஈழ விடுதலை போராட்ட தலைமைக்கும் இடையில் நடைபெற்ற அனைத்து நிகழ்வையும் அழகாக உதயன் பத்திரிகையில் வெளியாகிய தலைப்புகள் இது
இந்த நூலில் காணப்படுகிற அத்தனை தலைப்புக்களும் தமிழ்ஈழ சரித்திரத்தில் முக்கியத்துவம் பெற்ற எழு ஆண்டுகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.2004.2008.2009.2010.2011.2012.2013.ஆகிய ஆண்டுகளில் எழுதப்பட்டவை ஆனால் ஈழப்போராட்ட சரித்திரத்தை எடுத்துக்காட்டும் வகையில் எழுதப்பட்டவை. அந்தவகையில் சில தலைப்புக்கள் எடுத்துக்காட்டாக

 1.நம்மினம் வீழ்ந்து மடிகிறது சர்வதேசம் வேடிக்கை பாரக்கிறது.(6.03.2009.இல்)
2.நீதியை  தொடரச்சியாக நிராகரிக்கும் உலகம் அநீதியை மட்டுமே நேசிக்கிறது.(16.03.2012.இல்)வெளிவந்தஆசிரியர்  தலைப்பு.

3.நியாயமும் அனியாயமும் மோதிக்கொள்ளும் வன்னி நிலப்பரப்பு.

இப்படியாக ஈழ விடுதலைப் போராட்ட தலையங்கங்களை சுமந்த வண்ணம் இதுவரை….. என்ற நூலில் சொல்லப்படுகிறது.

சரிந்து போயுள்ள ஒரு சமூகத்தை நிமிர்த்தி சரிசெய்வதற்கு.ஒரு அரசியல் வாதியின் மனதில் தோன்றும் சிந்தனையிலும் பார்க்க
ஒரு பத்திரிகையாளனின் உள்ளக்கருத்தாக பதிப்படும்  எழுத்துக்களால் அதிக பலன் ஏற்படும். அதன் மூலம் அந்த பத்திரிகையாளன் சமூகத்துக்குதொண்டு செய்யும் ஒரு உயர்ந்தவன் ஆகின்றான்.
நூலாசிரியர் படம்
நிச்சயம் ஒவ்வொரு தமிழ் பேசும் உறவுகளும் படிக்க வேண்டிய நூல் நிச்சயம் வேண்டி படியுங்கள். உறவுகளே.

புத்தகம் வாசிப்பது ஒரு சுமையல்ல எமது அறிவுகண்ணை திறக்கும் திறவுகோல்.

.இந்த நூலுக்கான  வாழ்த்துரை வழங்கியவர் உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு பழ.நெடுமாறன் ஐயாவாகும்.

அணிந்துரைவழங்கியவர்.பொ.கனகசபாபதி.
இதுவரை...... நூலுக்கு விமர்சனம்  எழுத கிடைத்தமை எனக்கு மிக்க மகிழ்ச்சி
மலேசியாவில் உள்ள எழுத்தாளர் மார்கரெட் செல்லத்துரை அவர்களுக்கு கொடுக்கும் போது.

நூல்பற்றிய விபரம்

நூலாசியர்-திரு ,ஆர்.எஸ்.லோகேந்திர லிங்கம்

பதிப்பு ஆண்டு-2013

உரிமை-கனடா உதயன் பத்திரிகை.

வெளியிட்டோர்-கனடா உதயன் பத்திரிகை.

நூலின் விலை-கனடா பணத்தில்-CA$15.00

இந்த புத்தகம் 332 பக்கங்களை கொண்டது

நூல் வேண்டவேண்டுமா.-https://www.facebook.com/naga.logan?fref=ts முகநூலில் தொடர்பு கொள்ளுங்கள்.

வியாழன், 10 டிசம்பர், 2015

பிரிந்த தண்டவாளம்


அடவிக்குயிலே கருவிளம் வண்டே.
காணாமல் பல நாள் சிறையறையில்
பல முறை நேசித்து நேசித்து.
பாழாப் போனது என் வாழ்க்கை.
காயப்பட்ட நெஞ்சம்மதில்
பொங்கி எழும் நீராக ஓடுது -உன் நினைவு
வற்றாத என் குருதியில்
பசுமையை படர்ந்திருக்கு-உன் நினைவு.


அதிகம் அதிகம் நேசித்து.
என் இதயம் மரணித்து போனது.
மரணித்த இதயத்தை
உயிர் கொடுக்க எப்போது நீ வருவாய்.???
விழுதுடன் வளர்ந்த ஆலமரம்
நேற்றடித்த புயலுக்கு சாய்ந்த போல்
வீதியிலே சிதைவற்று கிடக்கிறேன்.
சிறகு முளைத்த என் சின்ன சிட்டே
சிறகெழுந்து பறந்து..வா..?


நேசிக்கும் உன்னை மறப்பதில்லை.
அந்த நேசிக்கும் உயிர்காற்றை.
மறந்தால் வாழ்வில் மரணமே
நீ எந்த தேசத்தில் இருந்தாலும்
நிம்மதியாய் நீ தூங்கி எழும்
காதலர்கள் அழிந்தாலும்
நம் காதல் அழிவதில்லை
வரலாறு எப்போதும் பொய்பதில்லை
விடியல் மலரும் போது.
என் மரணத்தில் நீ கண் விழிப்பாய்.


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் உள்ள தினகரன் பத்திரிகையில்வெளியாகிய கவிதை பார்வைக்கு இதோ.

புதன், 2 டிசம்பர், 2015

வானம் அழுததால் இந்த நிலை.

கடலும் வானும் பூமியும் அழுது
ஏழையின் வீட்டை ஏழ்மையாய் பதம் பாக்க
இரவும் பகலும் கண் விழித்து.
ஏக்கம் கலந்த தூக்கங்களும்
ஏழ்மை வாழ்வை புரட்டி போட்டு.
வீதியின் நடுவே மின் விளக்கில்லாமல்
இரவில் விடியலை தேடுகிறோம்.வியர்வை சிந்திய நட்ட பயிரும்
கடன் வேண்டி விதைத்த நெல்லும்
விழலுக்கு இறைந்த நீர் போல.
வாரி அள்ளிச் சென்றதுவே.
அடை மழையின் கண்ணீரால்
மழை வெள்ளம் வந்ததுவே.
மாரி காலம் வந்தால்
வறுமைப் பஞ்சம் வந்திடுமே.

நித்தம் நித்தம் பள்ளி சென்று
கல்வி கற்கும் எம் பிள்ளைகள்
அடை மழையால் பள்ளிதனை இழந்து.
வல்ல வெளிச் சாலையிலே.
உணவின்றி வறுமையில் வாடுதப்பா.
நல்ல மனம் படைத்த
கொடை வள்ளல்களே
சாதி மதம் பாராமல்
கருணையுள்ளம் காட்டி
மழையில் துவன்டோரை
கரை சேர வழி காட்டுங்கப்பா.


29-11-2015 அன்று தமிழ் மலேசியாவின் தேசிய நாள் ஏடு மலரில் வந்த எனது கவிதை

-நன்றி
-அன்புடன்-
-ரூபன்-
 


 

வியாழன், 26 நவம்பர், 2015

விருது கிடைத்த போது.. மனம் மகிழ்வு….

இலங்கையின் தலை நகர் கொழும்பில் உள்ள தமிழ்ச்சங்க மண்டபத்தில் தடாகம் அமைப்பினால் விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இடம் பெற்றது 21-11-2015 அன்று  இந்த நிகழ்வில் எனக்காக கிடைத்த விருது கள் இரண்டு.

1வது விருது. கவிதைப்போட்டியில் கலந்து கொண்டு என் கவிதை தெரிவாகியமைக்காக.கவினெழி என்ற பட்டமும் சான்றிதழும்
 

2வது விருது.-கவியருவி என்ற பட்டம் தந்து சிறப்பிக்கப்பட்டது… இந்த காட்சிகள் அடங்கிய தொகுப்பு தங்களின் பார்வைக்காக. இதோ.
எனதுதம்பி என்சார்பாக கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் விருது பெற்ற போது.
 
 
அன்பு நன்பர் கவிஞர் ஈழ பாரதி  எனது தம்பி  கொழும்பில் சந்திந்த போது
 
கடந்த ஞாயிறு22-11-2015 மலேசியாவில் உள்ள தேசிய நாள் ஏடு. பத்திரிகை தமிழ் மலரில் வந்த எனது கவிதையும் இங்கே.


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெள்ளி, 20 நவம்பர், 2015

தொடர்பதிவில் நானும் சிக்கிவிட்டேன்...


நமது வலையுலக நண்பர். பாசமிகு அண்ணாவான திரு.கில்லர்ஜி அவர்கள் தொடக்கி வைத்த தொடர் பதிவால் வலையுலகம் மிக உச்சாகமாக உள்ளது.அந்த வகையில் கில்லர்ஜி அண்ணாவுக்கு எனது நன்றிகள்

பத்து ஆசைகளை கில்லர்ஜி அண்ணா அழகாக சொல்லியுள்ளார். அந்த தொடர் பதிவில் சிக்கிய சகோதரி தேன்மதுரத் தமிழ் என்ற வலைப்பூ சகோதரி என்னை தொடர் பதிவுக்கு அழைத்தார்கள் எல்லோரும் எழுதிக் கொண்டு வந்தார்கள் நான் மட்டுமே அதில் எஞ்சியுள்ளேன். அந்தவகையில் என்னை தொடர் பதிவுக்கு அழைத்த சகோதரி கிரேஸ்பிரதீபா அவர்களுக்கு எனது நன்றிகள்.

எனது பத்து ஆசைகள் இதோ தங்களின் பார்வைக்கு.

1.கடவுச் சீட்டு இல்லாமல் சுதந்திரமாக சகல நாடுகளுக்கும் செல்ல வேண்டும்
2.முகம் தெரியா எனது வலையுலக நண்பர்களை நேரில் சந்திக்க வேண்டும் அந்த நாள் எப்போது மலரும் என்ற ஏக்கம்.

3.போட்டி பொறமை இல்லாத மனிதம் வளர வேண்டும்.எல்லோரிடமும்.
4.அளவுக்கு அதிகமாக கறுப்பு பணம் வைத்திருக்கும் ஒவ்வொரு தமிழனும் வாழ்வற்று கிடக்கும் அடித்தட்டு மக்களுக்கு உதவ முன்வரவேண்டும்.

5.நடிகர்கள் நடிக்கிறார்கள் அவர்களின் வாழ்வுக்காக. அந்த நடிகர்களின் பட விளம்பர படங்களுக்கு பாலினால் அபிசேகம் செய்யும் மூட நம்பிக்கையை நிறுத்த வேண்டும்.
6.இல்லாத உறவுகளுக்கு கொடுத்து உதவும் மனநலம் ஒவ்வொரு மனிதன் இடத்திலும் வளர வேண்டும்.

7.தமிழராக இருந்து அவர்கள் சந்திக்கும் தமிழருடன் தாய்மொழியில் பேசாமல் வேற்று மொழி கலப்புடன் பேசுவதை நிறுத்த வேண்டும்.தமிழன் என்றால் தமிழால் பேசுவோம….

8.வீட்டில் வளரும் குழந்தைகளுக்கு எமது தாய் மொழியை கற்றுகொடுக்க வேண்டும் பெற்றோர்கள்…
உதாரணத்துக்கு-சன்தொலைக்காட்சியில் சொல்லுங்கள் அண்ணா சொல்லுங்கள் இமான் அண்ணாச்சி நடத்தும் நிகழ்ச்சியில் தமிழ் வார்த்தை தெரியாமல் அல்லல்படும் பிள்ளைகள் எத்தனை பார்த்தவுடன் நெஞ்சம் துடிக்கிறது..இந்த நிலை மாறவேண்டும்.
9.பெற்ற தெய்வங்களை முதியோர் இல்லங்களில் விடாமல் அவர்கள் இறக்கும் வரை பெற்ற பிள்ளைகள் சுமக்கவேண்டும்.
10.எனது தேசம் எனது ஊர் என்ற நிலை உருவாகி.. சமூக சிந்தனை வளர வேண்டும்.
உதாரணத்துக்கு.-நாம் போகும் பாதையில் ஏதாவது பள்ளங்கள் இருந்தால் ஒரு நிமிடமாவாது செலவழித்து..மூட முடியும் என்றால் மண்ணால்  மூடிவிடலாம் இல்லாவிட்டால்  அபாயமான பகுதி என்று அடையாளபடுத்தி செல்லவேண்டும்.
தொடர்பதிவுக்கு எல்லோரையும் அழைத்து விட்டார்கள் அதனால் யாரையும் அழைக்கவில்லை...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

 

செவ்வாய், 10 நவம்பர், 2015

ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் தீபாவளியை முன்னிட்டு நடைபெற்ற கவிதைப்போட்டியின் வெற்றியாளர்கள்

திங்கள், 9 நவம்பர், 2015

ஏக்கம் கலந்த தீபாவளி.


வாழ்க்கையில் துன்பத்தை சுமந்து.
கண்ணீர் வாழ்க்கையில் வாழும்
ஏழைகள் எத்தனை
அவர்களின் ஏக்கங்கள் மனதை கீறல் இட
தீபாவளி பண்டிகையும்
கரை தொடும் காலமாய்
ஆர்ப்பரிக்கிறது.
வாழ்வில் வசந்தம் வருமா
என்ற ஏக்க உணர்வு.
செந்தணலாக எரிகிறது.
தீபாவளி பண்டிகையில்


மழைத்துளிகள் மின்னல் வெட்ட
ஈரங்கள் காயமுன் ரணங்களை
சுமந்த வர்ண வெடிகள்
வெடிப்போமா என்ற ஏக்க ததும்பல்
ஏழைகளின் மனக்கதவை.
ஒரு கனம் திறந்து பார்க்க வைக்கிறது.
அவர்களின் எதிர்பார்ப்புக்கள்
எல்லாம் நிறைவடையுமா?
இந்த தீபாவளில்.

கல்லரை மேனிகள் காற்றோடு கலந்த
சந்தனப் பேழைகள் கண்திறக்கும்
கார்த்திகை மாதத்தில்
பெற்றவளே. கண்ணீர்கடலில்
ஆர்ப்பரிக்க இனிக்குமா இந்த தீபாவளி்
புன்னகை பூக்கும் தீபங்கள்
எண்ணகள் ஈடேற்ற செய்யுமா தீபாவளி.


வாழ்விடம் இழந்த அனாதைகள்
வாழ்வை சீரளித்த பெண்கள்.
ரணம் கொண்ட பூமி பந்தத்தில்.
கயவர்களின் கைவரிசை.
முகம் காட்ட முடியாமல்
பெண்மையை சிதைத்து.
ஆணவம் கொண்ட நரகாசுரன்
அழித்த நாள் தீபாவளி என்றால்மண்ணில் வாழும்
காம வெறி கொண்ட கயவர்கள்
எப்போது அழிக்கப்டுவர்
அப்போதுதான் இனிப்புடன்
கூடிய தித்திக்கும் தீபாவளி.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தீபாவளித் திருநாளை முன்னிட்டு நடை பெற்ற கவிதைப்போட்டி முடிவுகள் ஊற்று வலைத்தளத்தில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியாக அறியத்தருகிறேன்


புதன், 28 அக்டோபர், 2015

உன் நினைவுக் கீற்றுக்கள்


உந்தன் நினைவுகள்
தினம் தினம் வடம் பிடிக்க.
தூண்டிலில் பட்ட மீனைப் போல
துடியாய் துடிக்கிறேன்.

 உன்னை காணத போது..
காதல் என்ற போதையில்
அன்பு என்ற வார்த்தைக்கு
அர்த்தம் சொல்லியதும் நீதான்.

ஆத்தாக்கும்  அப்பனுக்கும் தெரியாமல்.
யாரும் நடமாட வீதியல் காத்திருந்து.
சைக்கிலில் ஏற்றிச் சென்ற காலங்கள்.
தனிமையில் வாழும் போது..
நினைவுகள் நீச்சல் போடுகிறது.

தென்னை ஓலையில் ஊதி செய்து.
ஊதித் திரிந்த காலங்கள்
பனை மரத்தின் பனங்காயில்
தள்ளு வண்டி செய்து

 
நம்ம ஊரு வீதியெல்லாம் 
சுற்றி விளையாடிய காலங்கள்.
அந்த நினைவுகள் எல்லாம்
நெஞ்சோரம் உரசுகிறது.
கோயில் திருவிழா காலங்களில்
கடை வீதியெங்கும்
கண்ணைச் சிமிட்டி
வர்ண யாலம்  காட்டும்

லைட் வெளிச்சத்தில்
கைகோர்த்து நடை
பயின்ற காலங்கள்
எல்லா நினைவுகளும்
வினாடிக்கு வினாடி
இதயத்தை சல்லடை
போட்டுத் தேடுகிறது.
உன் நினைவுக் கீற்றுக்கள்
 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 
தீபாவளியை முன்னிட்டு நடைபெறும் கவிதைப்போட்டிக்கான  காலம் நீடிக்கப்பட மாட்டது. 3 நாட்கள் மட்டுமே உள்ளது விரைவாக போட்டியாளர்கள் தங்களின் படைப்புக்களை எழுதி அனுப்பும்மாறு தயவாக வேண்டிக்கொள்கிறேன். இங்கே