சனி, 31 ஜனவரி, 2015

சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்டுகிறது.-2015
                                       வணக்கம் வலையுலக உறவுகளே.

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்படுகிறது
ரூபன்யாழ்பாவாணன்  நடத்தும் மாபெரும் சிறுகதைப் போட்டிக்கு அழைக்கிறோம்
வாருங்கள்வாருங்கள்

வலையுலக உறவுகள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப மீண்டும் காலம் நீடிக்கப்படுகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியாக அறியத்தருகிறோம்


 சிறுகதைகள் சமர்ப்பிக்க வேண்டிய காலம்-15.02.2015 

இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கும் பல சிறுகதைகள் வந்துள்ளதுஅதில் ஒவ்வொன்றையும் பார்க்கும்போது. கொடுக்கப்பட்ட தலைப்பில் மிகத் தரமான சொல் வீச்சும் ,கருத்தாடலும், அனைவரையும் கவரும்படி நன்றாக எழுதியுள்ளார்கள்நீங்களும் அவர்களுடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்
அனுப்ப வேண்டிய முகவரி-ramask614@gmail.com

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வியாழன், 29 ஜனவரி, 2015

அன்புள்ள அப்பா


 
 
தோள் மீது நீ போட்டு துயரங்களை நீ பகிர்ந்தாய்
சொல்லி சொல்லி பாராட்டி சுகத்தை நீ தந்தாய்
சுட்டி விரல் பிடித்து எட்டி எட்டி அடிவைக்க
முற்றத்தின் வீதியெல்லாம் சுற்றிக்காட்டினாய்.
நான் சுகமாக வாழ்ந்த நாட்கள் எல்லாம்
நீ சுமையாக வாழ்ந்தாய்.
அப்பா என்ற அழுகை ஓசை கேட்டால்
ஓடோடி வந்து கட்டி அணைத்திடுவாய்

அன்பையும் அறிவையும் நீ புகட்டி
தினம் தினம் நெஞ்சில் சுமந்தாயே.
இரவின் புன்னகை நிலவில் தாலாட்ட
மண்ணின் மடியில் அகரம் எழுதிக்காட்டினேன்
ஆகா என்று மகிழ்ந்தாயே.
ஆருயிர் இன்பம் -கண்டாயே.
கை வண்டி உருட்டும் அழகை பார்ப்பாயே
ஊருரெல்லாம் என் பேச்சாய் திரிவாயே.

தூரதேசம் போனாலும்.
மிட்டாய் வேண்டி வாருவாயே.
உண்டு நானும் மகிழ்ந்திடுவேன்
இரவில் நெஞ்சில் சுமப்பாயே
இனிய கதைகள் சொல்லிடுவாய்
இதமாய் நானும் மகிழ்ந்திடுவேன்.
அம்மா என்றால் அன்புதான்
அப்பா என்றால் அறிவுதான்…

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

 

புதன், 21 ஜனவரி, 2015

ஆராரோ பாடிடுவோம்

அலையோசை கேட்ட போது.
உன் குரலோசை கேட்டது.
உன் மடி மீது தவழத்தான்
தனியாத தாகமாய் எண்ணங்கள்
புயலாக எழுகிறது.
கண்ணாடி முன்னாடி நிற்கையில்
உன் திரு மேனி முன்னாடி நிற்குதடி.
தள்ளாடித் திரிகிறேன். உன் நினைவில்.

 
தோப்போரம்  மானாட மயிலாட
தோகை யெல்லாம் விரித்தாட
உன் கரு மேக தோப்போரம்.
மல்லிகைப்பூ வாசனையில்
மதுவுண்டு களிக்குது. வண்டுகள்.
மதுவுண்டு களிக்கும் வண்டு போல.
நானும் உன் தலை முடியை
கோது காலம் எப்போது.

 
சிலகாலம் காதலித்து.
சிந்தை குளிர பேசினோம்
பல காலம் பிரிந்து வாழ்கிறேன்.
தணியாக சிறையறையில்.
மீண்டும் கரம் பிடித்து நடை பழக
சில காலம் காத்திருங்கள்.
நம் காதல் சாட்சியாம் ஆலமரத்தின் கீழ்
ஆறுதலாய் அமர்ந்து ஆராரோ பாடிடுவோம்…


வணக்கம்
உறவுகளே.

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டுநடை பெறும்உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டி முடிவடைய இன்னும் 10 நாட்கள் உள்ளது.. மீண்டும் காலம் நீடிக்கப்பட மாட்டாது என்பதை அறியத்தருகிறேன்.தயவு செய்து இப்படியான சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள்... மீண்டும் வருவதில்லை...  உச்சாகத்துடன் தங்களின் படைப்புக்களை எழுதி அனுப்புங்கள்... கதை அனுப்ப வேண்டிய காலம்.31.01.2014. இரவு 12 மணிக்கு..(இந்திய நேரம்)

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

புதன், 14 ஜனவரி, 2015

நம்பிக்கை ஆண்டு......


  

மண்ணை முத்தமிட்ட மைந்தர்கள்
என்று தொலை தேசத்தை முத்தமிடுகிறர்கள்
பத்து தலை இராவாணன் போல்
பெண்னாசை மண்ணாசை பிடித்து
ஆணவம் தலை துாக்கி விரித்தாட
விடியல் பொழுதுக்காக ஏங்கி வாழும்
ஏழைகளின் கண்ணீர் துளிகள்
ஆசைக்கு தீ மூட்டியது.பூவும் பொட்டுடன் வாழ்ந்த உறவுகள்
தன் கணவனை துப்பாக்கி சன்னங்களுக்கு
இரயாக்கி சோகத்தில் வாடினார்கள்.
முன்பு பொங்கி பானையில் வரும் பாலுடன்
விதவைக் கோல பெண்ணின் கண்ணீர்த்துளிகளும்
பாசமாய் வளர்த்த பிள்ளையை பறிகொடுத்த தாயின்
அழுகை குரலும் பொங்கல் அன்று
குரவைக் சப்தமாக  ஒலித்தது.-முன்பு.எல்லாம் மாமிசம் தின்னும் பேய்கள் தான்.
எல்லாம் ஒரு குட்டையில்
ஊறிய மட்டைகள் தான்?
புத்தாண்டு பிறந்து விட்டது
காலந்தான்  பதில் சொல்லும் –என்று
அகத்தால் வாடியஉறவுகளுக்கு.
முகத்தில் புன்னகை எப்போது பூக்கும்..????
தை பிறந்தால் வழிபிறக்கும்
என்ற அடைமொழி பலிக்குமா.?
காலம் பதில் சொல்லும்
அதுவரை காத்திருப்போம்.நம்பிகையுடன்…


 -நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 

புதன், 7 ஜனவரி, 2015

கனவு நனவாகட்டும்


நூறுகோடி உருவங்கள் வைத்து.
நீ என் கண்ணுக்குள் வந்தாய்
,
ஆள் மறந்து அசதியாத் தூங்கையில்

உன் வளையோசை என் காதில்-லித்ததடி.
உன் ணி பாவாடை காற்றினில்ஆடிடவே
.
நீ என் கண்ணுக்குள் றூறு கோடி
.
நிலவாய் வந்தாயடி.

சிட்டுக்குருவியின் சிறகு போல்.

நீ சிறகடித்து-நீ என்
இதய வானில்.பறந்தாயடி,
சிங்கண்ணா கடைக்கு சீக்கரமாய் வா என்று
.
கைபேசியில் தகவல் சொன்னாயடி

வாசித்த பின் என் கையோ.
காலோ ஆடவில்லை
,
ஒன்றும் தெரியாமல்-கண்கெட்ட
.
குருடனைப் போல சில மணி நேரம்
.
திகைத்துப் போய் நின்றேன்,


 உன் மதிபோன்ற வதனத்தில்.
மூன்றாம் பிறை போல
.
உன் நெற்றியில்-திலகம்சூட்டிடவே
.
உன் நெளிந்து வளைந்த

நூலிடையின் அழகையும்.
வானவில் போன்ற வளைந்த
.
நெற்றியின் புருவமும்
,

கயல்  போன்ற விழியும்
.
கெண்டை மீன் போன்ற-தெடையும்
.
மழைமேகம் போல்-றுத்த முடியும்
.
என் மெய்யோடு மெய்யா
.
உறவாட கனாக் கன்டேன்….

தீராத ஆசையாய் நிஜமற்ற கனவுகண்டு.
உன் நினைவலையில் என் காலம்போகுதடி
.
என் மனதில் வீசும் காற்றாக வந்தாய்
.
அந்த காற்று நம்கல்யாவாழ்த்தாக-மலரட்டும்.
 
 -நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-