புதன், 7 ஜனவரி, 2015

கனவு நனவாகட்டும்


நூறுகோடி உருவங்கள் வைத்து.
நீ என் கண்ணுக்குள் வந்தாய்
,
ஆள் மறந்து அசதியாத் தூங்கையில்

உன் வளையோசை என் காதில்-லித்ததடி.
உன் ணி பாவாடை காற்றினில்ஆடிடவே
.
நீ என் கண்ணுக்குள் றூறு கோடி
.
நிலவாய் வந்தாயடி.

சிட்டுக்குருவியின் சிறகு போல்.

நீ சிறகடித்து-நீ என்
இதய வானில்.பறந்தாயடி,
சிங்கண்ணா கடைக்கு சீக்கரமாய் வா என்று
.
கைபேசியில் தகவல் சொன்னாயடி

வாசித்த பின் என் கையோ.
காலோ ஆடவில்லை
,
ஒன்றும் தெரியாமல்-கண்கெட்ட
.
குருடனைப் போல சில மணி நேரம்
.
திகைத்துப் போய் நின்றேன்,


 உன் மதிபோன்ற வதனத்தில்.
மூன்றாம் பிறை போல
.
உன் நெற்றியில்-திலகம்சூட்டிடவே
.
உன் நெளிந்து வளைந்த

நூலிடையின் அழகையும்.
வானவில் போன்ற வளைந்த
.
நெற்றியின் புருவமும்
,

கயல்  போன்ற விழியும்
.
கெண்டை மீன் போன்ற-தெடையும்
.
மழைமேகம் போல்-றுத்த முடியும்
.
என் மெய்யோடு மெய்யா
.
உறவாட கனாக் கன்டேன்….

தீராத ஆசையாய் நிஜமற்ற கனவுகண்டு.
உன் நினைவலையில் என் காலம்போகுதடி
.
என் மனதில் வீசும் காற்றாக வந்தாய்
.
அந்த காற்று நம்கல்யாவாழ்த்தாக-மலரட்டும்.
 
 -நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

23 கருத்துகள்:

 1. தீராத ஆசையும் நிஜமற்ற கனவும் நனவாகட்டும்! கல்யாண வாழ்த்துக்கள் விரைவில் மலரட்டும்!!

  பதிலளிநீக்கு
 2. கனவுகள் எல்லாம் நினைவாகட்டும் தை பிறக்கப்போகிறது வழி பிறக்கும் கல்யாண வாழ்த்துக்கள் கண்டிப்பாக மலரும் ரூபன்

  பதிலளிநீக்கு
 3. நினைவில் நெடுங்கனவில் நிற்பவள் சேர்வாள்
  நனவில் களிப்புறும் வாழ்வு!
  கூடியவிரைவில் நனவாகட்டும் ஆசைகள் ரூபன்! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ....!

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துக்கள் தம்பி...

  விரைவில் நல்ல செய்தி சொல்லுங்கள்...

  பதிலளிநீக்கு
 5. காதல் முற்றி
  கலியாணம் தொற்றி
  குடும்பம் பற்றி
  வாழ்வில் வெற்றி
  பெற்றிட வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 6. நாங்கள் உங்களுக்கு திருமண வாழ்த்துக்கள் சொல்லும் நாள் விரைவில் வரட்டும்.

  பதிலளிநீக்கு
 7. அருமை நண்பா ஏக்கம் நனவாகட்டும் விரைவில்
  த.ம 3

  பதிலளிநீக்கு
 8. நிஜமற்ற கனவு... ஏக்கமாய் தொடராமல்...
  ஏகாந்தமாய் வாழ்க்கையை ஆரம்பித்து வைக்கட்டும்...
  அருமை...

  பதிலளிநீக்கு
 9. இப்பவே கனவு நனவானது மாதிரி தெரியுது வர்ணனைகளைப் படித்தால்:)
  த ம 4

  பதிலளிநீக்கு
 10. விரைவில் நிறைவேறப் போகிறது தானே? வாழ்த்துக்கள் சகோ :)

  பதிலளிநீக்கு
 11. கனவும் நனவாகும் காலம் கனிய
  மனதும் மலர்ந்திடும் வாழ்வு!

  அருமை! இனிய வாழ்த்துக்கள் சகோதரரே!

  பதிலளிநீக்கு
 12. //தீராத ஆசையாய் நிஜமற்ற கனவுகண்டு.
  உன் நினைவலையில் என் காலம்போகுதடி.
  என் மனதில் வீசும் காற்றாக வந்தாய்.
  அந்த காற்று நம்கல்யாணவாழ்த்தாக-மலரட்டும்.////
  கல்யாண காற்று வீசட்டும்
  தம +1

  பதிலளிநீக்கு
 13. உங்களது எழுத்துக்கள் கனவு போலத் தோன்றவேயில்லை. முற்றிலும் நிறைவேறியது போலவே உள்ளது.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 14. நிச்சயம் தங்கள் கனவுகள் அனைத்தும் நலமாகும் அய்யா!
  வாழத்துகளுடன்
  த ம 7

  பதிலளிநீக்கு
 15. எல்லாம் நல்லதாகவே நடக்கும், கவலை வேண்டாம். உங்கள் கனவுகள் கூடிய விரைவில் நனவாகட்டும். எனது வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 16. காலம் கனிகின்றது
  தை மகள் உன் வாசலை மதியாக வலம் வந்தே மிதித்திடுவாள்
  நதி போல் நலம் பெறுவாய்! விதியினை வென்றபடி!
  கனவு நனவாகட்டும்
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 17. வணக்கம்!

  அன்புமனம் பொங்கட்டும்! பண்புமனம் பொங்கட்டும்!
  இன்பமனம் பொங்கட்டும் இன்றமிழாய்! - மன்பதையில்
  நன்மனிதம் பொங்கட்டும்! நல்லறங்கள் பொங்கட்டும்!
  பொன்னமுதம் பொங்கட்டும் பூத்து!

  எங்கும் பொதுமை இனிதே மலரட்டும்!
  சங்கும் முழங்கட்டும் சால்புகளை! - மங்கலமாய்த்
  தங்குகவே இன்பம்! தனித்தமிழ் நற்சுவையாய்ப்
  பொங்குகவே பொங்கல் பொலிந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 18. தீராத ஆசையாய் நிஜமற்ற கனவுகண்டு.
  உன் நினைவலையில் என் காலம்போகுதடி.
  என் மனதில் வீசும் காற்றாக வந்தாய்.
  அந்த காற்று நம்கல்யாணவாழ்த்தாக-மலரட்டும்.//

  உங்கள் தீராத ஆசை நிறைவேறி கல்யாண வாழ்த்தாக மலர வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 19. கற்பனைக் கவிதையாய் நினைக்க முடியவில்லை. நிஜத்தில் நிறைவேறட்டும் கவிதையின் எதிர்பார்ப்புகள். அன்புடன்

  பதிலளிநீக்கு
 20. நம்கல்யாணவாழ்த்தாக-மலரட்டும்.//

  கல்யாணவாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்