புதன், 14 ஜனவரி, 2015

நம்பிக்கை ஆண்டு......


  

மண்ணை முத்தமிட்ட மைந்தர்கள்
என்று தொலை தேசத்தை முத்தமிடுகிறர்கள்
பத்து தலை இராவாணன் போல்
பெண்னாசை மண்ணாசை பிடித்து
ஆணவம் தலை துாக்கி விரித்தாட
விடியல் பொழுதுக்காக ஏங்கி வாழும்
ஏழைகளின் கண்ணீர் துளிகள்
ஆசைக்கு தீ மூட்டியது.பூவும் பொட்டுடன் வாழ்ந்த உறவுகள்
தன் கணவனை துப்பாக்கி சன்னங்களுக்கு
இரயாக்கி சோகத்தில் வாடினார்கள்.
முன்பு பொங்கி பானையில் வரும் பாலுடன்
விதவைக் கோல பெண்ணின் கண்ணீர்த்துளிகளும்
பாசமாய் வளர்த்த பிள்ளையை பறிகொடுத்த தாயின்
அழுகை குரலும் பொங்கல் அன்று
குரவைக் சப்தமாக  ஒலித்தது.-முன்பு.எல்லாம் மாமிசம் தின்னும் பேய்கள் தான்.
எல்லாம் ஒரு குட்டையில்
ஊறிய மட்டைகள் தான்?
புத்தாண்டு பிறந்து விட்டது
காலந்தான்  பதில் சொல்லும் –என்று
அகத்தால் வாடியஉறவுகளுக்கு.
முகத்தில் புன்னகை எப்போது பூக்கும்..????
தை பிறந்தால் வழிபிறக்கும்
என்ற அடைமொழி பலிக்குமா.?
காலம் பதில் சொல்லும்
அதுவரை காத்திருப்போம்.நம்பிகையுடன்…


 -நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 

19 கருத்துகள்:

 1. தை பிறந்துவிட்டது. வழிபிறக்கும். நம்புவோம்.

  பதிலளிநீக்கு
 2. நம்பிக்கை தானே வாழ்க்கை நம்புவோம் ரூபன்!
  நெஞ்சை வேகவைத்தன வார்த்தைகள்!
  குடும்பத்தினர் அனைவருக்கும் அன்பான பொங்கல் வாழ்த்துக்கள் ...!
  என்ன வலைப்பக்கம் காணோம் .

  பதிலளிநீக்கு
 3. நன்பிக்கை என்ற ஒற்றை வார்த்தையில் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறது மனிதம் இன்றும்...!

  எல்லாம் மாறும் நம்பிக்கை கொள்ளுங்கள் கவிஞரே...

  பதிலளிநீக்கு
 4. தைபிறந்தால் வழி பிறக்கும் நிச்சயம்.
  இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
  தம 2

  பதிலளிநீக்கு
 5. காலம் ஒருநாள் கட்டாயம் பதில் சொல்லும் கலங்காதீர்கள்! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. தை பிறந்தால் வழி பிறக்கும். கண்டிப்பாக வழி பிறக்கும்.
  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. இனியெனும் மாற்றம் உண்டாகும் நண்பரே...
  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
  தமிழ் மணம் 3

  பதிலளிநீக்கு
 8. தை பிறந்தால் வழி பிறக்கும்.
  தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் சகோதரரே!

  மனதை கலங்க வைத்த வரிகள்.! நம்பிக்கையோடு காத்திருப்போம். காலம் ஒருநாள் கனியும்.

  தங்களுக்கும், தங்கள் உற்றார், உறவினருக்கும், என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்….

  நட்புடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 10. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 11. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
  கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
  தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
  பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
  எனது மனம் நிறைந்த
  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  பதிலளிநீக்கு
 12. தை பிறந்தாச்சு
  உலகெங்கும் தமிழ் வாழ
  உலகெங்கும் தமிழர் உலாவி வர
  வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!

  பதிலளிநீக்கு
 13. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்....!

  பதிலளிநீக்கு
 14. தை பிறந்தாயிற்று! வழியும் பிறக்கும் !

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 15. காலம் பதில் சொல்லும்
  அதுவரை காத்திருப்போம்.நம்பிகையுடன்…//

  உண்மை , காலம் பதில் சொல்லும்.

  பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்