வியாழன், 29 ஜனவரி, 2015

அன்புள்ள அப்பா


 
 
தோள் மீது நீ போட்டு துயரங்களை நீ பகிர்ந்தாய்
சொல்லி சொல்லி பாராட்டி சுகத்தை நீ தந்தாய்
சுட்டி விரல் பிடித்து எட்டி எட்டி அடிவைக்க
முற்றத்தின் வீதியெல்லாம் சுற்றிக்காட்டினாய்.
நான் சுகமாக வாழ்ந்த நாட்கள் எல்லாம்
நீ சுமையாக வாழ்ந்தாய்.
அப்பா என்ற அழுகை ஓசை கேட்டால்
ஓடோடி வந்து கட்டி அணைத்திடுவாய்

அன்பையும் அறிவையும் நீ புகட்டி
தினம் தினம் நெஞ்சில் சுமந்தாயே.
இரவின் புன்னகை நிலவில் தாலாட்ட
மண்ணின் மடியில் அகரம் எழுதிக்காட்டினேன்
ஆகா என்று மகிழ்ந்தாயே.
ஆருயிர் இன்பம் -கண்டாயே.
கை வண்டி உருட்டும் அழகை பார்ப்பாயே
ஊருரெல்லாம் என் பேச்சாய் திரிவாயே.

தூரதேசம் போனாலும்.
மிட்டாய் வேண்டி வாருவாயே.
உண்டு நானும் மகிழ்ந்திடுவேன்
இரவில் நெஞ்சில் சுமப்பாயே
இனிய கதைகள் சொல்லிடுவாய்
இதமாய் நானும் மகிழ்ந்திடுவேன்.
அம்மா என்றால் அன்புதான்
அப்பா என்றால் அறிவுதான்…

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

 

16 கருத்துகள்:

 1. தந்தையை நேசிக்கும் தனயனைப் பற்றிய கவிதை நன்று.

  பதிலளிநீக்கு
 2. உங்கள் தந்தையின் மேல் நீங்கள் வைத்திருக்கும் பாசத்தை மிகச் சிறப்பாக கவிதையில் காட்டியிருக்கிறீர்கள். பாராட்டுகள், ரூபன்!

  பதிலளிநீக்கு
 3. அருமையான அப்பாதான் நண்பா,,,
  தமிழ் மணம் 5

  பதிலளிநீக்கு
 4. நல்ல அப்பா கிடைத்திருக்கின்றார்.வாழ்த்துகள் சகோ..

  பதிலளிநீக்கு
 5. அருமையான தந்தைக்கு அன்பான மகனின் சமர்ப்பணம் மிக அருமை! அந்த புகைப்படம் மிகவும் அழகு! அத்தனை உயிர்ப்புடன் விளங்குகிறது!!

  பதிலளிநீக்கு
 6. தந்தையை இழந்தவர்களுக்கு வேதனை புரியும் அருமையான ஆக்கம் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. நான் சுகமாக வாழ்ந்த நாட்கள் எல்லாம்
  நீ சுமையாக வாழ்ந்தாய்.// ம்ம் உண்மை சகோ..அருமை

  பதிலளிநீக்கு
 8. சகோ என்ன ஆச்சர்யம் நானும் நினைத்தேன் அப்பாவைப்பற்றி எழுதுபவர்கள்
  மிகக்குறைந்த அளவே, அப்பா தன் மகனைத்தான் காணாத உலகத்தையும்
  தன்மகனுக்கு காட்டத்தான் தன் தோளில் தூக்கிக் காட்டுவாராம் படமும் கவிதயும்
  மனதைதொட்டது அழகு.

  பதிலளிநீக்கு
 9. தந்தையின் அன்பை அழகாய் சொல்லி விட்டீர்கள் .நல்ல படைப்பு

  பதிலளிநீக்கு
 10. மிக அழகான வரிகள் தந்தையின் அன்பிற்கு! எப்படி விடுபடுகின்றது என்று தெரியவில்லை தம்பி! தாம்தமாக வருகை தருவதற்கு மன்னிக்கவும்!

  பதிலளிநீக்கு
 11. இரவில் நெஞ்சில் சுமப்பாயே
  இனிய கதைகள் சொல்லிடுவாய்
  இதமாய் நானும் மகிழ்ந்திடுவேன்.
  அம்மா என்றால் அன்புதான்
  அப்பா என்றால் அறிவுதான்…//

  என் அப்பாவின் நினைவுகளை ஏற்படுத்திய கவிதை அருமை. அம்மா , அப்பா இருவரின் அன்பையும் மறக்க முடியாது.
  அப்பா என்றால் அன்பு தான்.
  வாழ்த்துக்கள்.

  தமிழ்மண் வாக்கு 7

  பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்