வியாழன், 26 பிப்ரவரி, 2015

உன்னைப்பற்றிய விசாரிப்பு........


உன்னை பார்த்த நாள்முதலாய்
உன்னை பற்றிய விசாரிப்பு தொடங்கியது.
காலங்கள் நாட்கள் மெதுவாக நகர
உன் மீது வைத்த பாசமும்
கரை புரண்டு ஓடியது.
ஆகாய நட்சத்திரங்கள் எல்லாம்
விட்டு விட்டு எரியும்
நட்சத்திரங்களாக காட்சியாக விரிகிறது.

படுக்கை அறையில் கண்மூடி தூங்கயில்
உன் விம்பங்கள் சுவர் எல்லாம் தெரிகிறது
பல் துலக்கப்போனால்  நீண்ட நேரம் எடுக்கிறது.
உன் நினைவுதான் நெஞ்சறையை வருடுகிறது.
வற்றாத ஜீவ நதி போல  உன்
நினைவை வினாடிக்கு வினாடி
ஞாபகமாய் வீணை ஒலி மீட்கிறது.
என் இதய நாளங்கள்.என் கணினியின் திரையில் கூட
உன் உருவந்தான் மின்னுகிறது.
என் கணினியின் என்றர்(ENTER) கீயை
அழுத்தும் போது. உன் நினைவை
அழுத்துவது போல ஒரு உணர்வு
என்றென்றும் காதல் நட்பினால்
காலம் கடக்கிறது. உன் காந்தப் பார்வை
எப்போதும் என்மீது வீசட்டும்…….

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தைப்பொங்கல் சிறப்பு சிறுகதைப்போட்டி முடிவுகள் மிக விரைவில்....

 

புதன், 18 பிப்ரவரி, 2015

எரியும் தீப்பிழம்புபள்ளியறை-முதல்

கட்சியறை-வரை

ஈழத் தமிழரின் மரணக்கோலத்தின்
உதிரம் துவைந்த
பதாதைகள் ஏந்தியபடி

தமிழக பாதைகள் அதிர்ந்த வண்ணம்

உலக அரங்குக்கு பறைசாற்றும்
உரிமைக்குரல் தமிழகம் எங்கும் -ஒலிக்கிறது,எம் தொப்புள் கொடி உறவாம்
எம் ஈழச் சொந்தங்கள்
இரக்கமற்ற மரணத் தாண்டவத்தின்
விளிம்பில் சாய்ந்தவர்கள்.
கோர முகத்தை கிழிக்கும்
கோடித் தமிழர்களின்-உணர்ச்சிக்குரல்
தமிழகத்தில் அங்கும் இங்கும்-வெடிக்கிறது,

 
மண் மானம் தன் மானம் -காக்க
உணர்ச்சிகளின் உத்வேகத்தில்
உணர்வுகள் மேல் எழுந்து
உரிமைக்காக வீர காவியமான
வீர மைந்தர்களின் உயிர்கள்-எத்தனை

அவர்களே எங்களின் காவல்-தெய்வங்கள்
அவர்கள் காட்டிய பாதையை-நிலை நிறுத்தி
ஊர் எங்கும் சோக கீதங்களும்
சோகக் கொடிகள் அரைக்- கம்பத்தில்பறக்க
கடைகளும் கல்லூரிகளும் பூட்டுப் போட்டு
புனிதமான அறவழிப் போராட்டம்
தமிழகம் எங்கும் பூக்கிறது,

 
சுதந்திர தமிழீழத்தாயகம் மலரும்வரை
எங்களின் போராட்டம் ஓயாது
என்ற ஆண்ம சுத்தியுடன்
உண்ணா விரதம்மென்றும்
சாலை மறியல் என்றும்
சார்த்வீக வடிவில் மாணவர்-புரட்சி வெடிக்கிறது,
சுதந்திர தமிழீழம் மலரும் வரை
எங்களின் தீப்பிழம்பு
எரிந்துகொண்டேயிருக்கும்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 

புதன், 11 பிப்ரவரி, 2015

காதலும் காவியம்படைக்கட்டும்


நினைவுகளை சுமந்தேன்
நீதான் என் நெஞ்சறை சுவரில்
சுவாசமாக ஒட்டிக்கொண்டிருக்கிறாய்
அன்பு சுமந்த பயணம்
யாரும் அறியாத பயணம்
கடிகார முட்கள் போல்
நிதனமாய் சுற்றுகிறது.
விடியல் என்ற வட்டத்துக்குள்

 
வேள்வித் தீ மூட்டி
வேதங்களை சொல்லி
உன் நாமத்தை ஓதுகிறேன்.
என்றாவது ஒரு நாள்
உன் நாம உச்சரிப்பை கேட்டு
வானுயர மகிழ்ந்து வாழ்வமைக்க
வாழ்(க்)கை கோலம் பூண்டு வருவாயே.
இல்லாவிட்டால்  கண்ணீர்வடிப்பாய்.

 காலம் உணர்ந்து உனக்காக
காகித்தில் கவிமழை  பொழிகிறேன்
கார்கால இருளில்  நட்சத்திர ஒளியில்
உன் வருகைக்காக காத்திருக்கேன்
வருவாயா என்ற நம்பிக்கையில்
உன் பெயரும் என் பெயரும்
சொல்லி சரித்திரத்தில்
காவியம்படைக்கட்டும்
நம் காதலும் வாழட்டும்…..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

புதன், 4 பிப்ரவரி, 2015

ஏளனம்


தீயினால் சுட்ட புண் ஆறும்
நாவினால் சுட்ட வடு ஆறாது.
ஏழையை கண்டு பணக்காரன் சிரிப்பது.
பணக்காரனை கண்டு ஏழை ஏங்குவதும்
கடும்சொல் வாசகம் காட்டாத்து தண்ணீர்போல்

மேல் வர்க்க நாடுகளை விட
வளர்ந்து வரும் நாடுகளில்
ஏளனம் சிரித்து மகிழ்கிறது.
ஏளனம் என்ற  வார்த்தை
ஏணி போல் உயர முயற்சிப்பவனை
சறுக்கிவிழ வைப்பதும் ஏளனம்.


ஆசிரியரால் மாணவன் ஏளனம்
பெற்றோரால் பிள்ளைகள் ஏளனம்
பணக்காரனால் பிச்சைக்காரன் ஏளனம்
நண்பர்களால் சக நண்பர்கள் ஏளனம்

 மக்களால் நடிகர்களுக்கு ஏளனம்
ஊனப்பிறப்பால் மக்களால் ஏளனம்
ஏளனம் என்ற கடும் சொல் வாசகம்
அதையும் தாண்டி நீச்சல் போட்டால்
வாழ்க்கையில் உயர்வது நிச்சயம்.


ஏளனம் என்ற சொல்வீச்சால்
மரணம் என்ற வாழ்க்கையும்
எந்த மனிதனுக்கும் வந்தடையும்.
ஏளனம் செய்தவன் தானக திருந்த வேண்டும்


உண்மையாக ஏளனம் செய்யப்பட்டவன்
மனதில் இறுமாப்பு கொண்டு
முன்னேறியவர்கள் பலர்
ஏளனம் செய்தவன்தாழ்வான்
என்ற நிலைஉறுதி…

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-