புதன், 25 மார்ச், 2015

வாழ்விடம் இழந்த அகதிகள்.


 
 

சிட்டுக்குருவி போல்சுதந்திரமாய்.
வாழ்ந்து வந்த எம் தமிழ் இனம்-இன்று

சிதர்உண்டு சிதையுண்டு
சுதந்திரக் காற்றினை ஓரளவு
சுவாசித்து வாழ்ந்த எம்மினம்

இன்று வாழ்விடம் இழந்த
அனாதைகள் ஆகிவிட்டார்கள்.

வாழவேண்டுமென்று -பிறந்த
எம் வாலிபர்கள்-என்ன பிழை செய்தார்கள்.
செய்யாத தப்புக்கு சில ஆண்டு சிறைவாசம்.
அந்த கொடுமையின் வேதனையை பாருங்கப்பா?
சிறைவாசம் வாடும் பிள்ளையை-பார்க்க.
ஈன்றெடுத்த தாயானவள்-கையில் பணம் இல்லாமல்.
பிச்சை எடுத்து பார்க்கப் புறப்படுகிறாள்
பெற்ற பாசம் சும்மா விடுமா???
தமிழ் இனம் அன்றும்- இன்றும்
வாழ்விடம் இழந்த அனாதைகள் ஆகிவிட்டார்கள்.

ஏர்பிடித்து நிலம் உழுது
வாழ்ந்த தமிழ் இனம்
இன்று பாத்திரம் ஏந்தி-ஒருசான் வயிற்றுக்கு
வீதி ஓரமாய் நின்று பிச்சை எடுக்கும்
காலமாக மாறி விட்டது………….
இந்த அவல வாழ்க்கைக்கு தள்ளப்பட்ட

தமிழ் இனம் வந்தாரை வா..வா.. என்று
அழைத்து விருந்தோம்பும் பண்பு.
கொண்ட  தமிழ்இனம்


இன்று வா.வா.என்றுநம்ம அழைத்தவர்கள்.
இன்றுநமக்கு விருந்தோம்பல் செய்கின்றார்கள்
.
இது காலத்தின் தண்டனையா?-அல்லது
.
இறைவனின் தண்டனையா
?
அன்றும் இன்றும் தமிழ் இனம்

வாழ்விடம் இழந்த அனாதைகள்

இதையும் தட்டிக் கேட்க -யாரும் இல்லையா?????
அடிமைகள் போல வாழ்விடம்

இழந்த அனாதைகள் போல


வாழ்கிறார்கள்.எம் தமிழ்இனம்


 


-நன்றி-

-அன்புடன்-

-ரூபன்-

பட உதவி -GOOGLE.COM


 

 

புதன், 18 மார்ச், 2015

சோடிக்கிளியாக….…


சொல்லாமல் வந்த காதலால்
வாழ்வில் சுகந்தங்கள் வீச
வாழ்க்கை படிநிலையே மாறிப்போனது.
சிறகு  வெட்டப்பட்ட கிளிபோல
மெதுவாக காதல் வானில் பறக்க
காதல் சிறகு முளைத்தது உன்னாலே.
உன்னைப்பற்றிய ஒவ்வொரு சுதாரிப்பில்
வெட்டிய சிறகு துளிர் விட்டு வளர்கிறது.

ஓலை குடிசையில் ஊர் அற்ற மனிதனாய்
ஊட்டிவளர்க்க யாருமில்லாமல்
விசரன் போல் சுற்றித்திரிந்தேன்
உன் மனதில் அடைக்கலம் தந்தாய்
நீ வரும் பதையெல்லாம்
உன் கால் தடங்களை தேடுவதும்
என் நினைவுகளில் எல்லாம் நீதான்
ஒளிமயமாக தெரிகிறாய்.

காலமெல்லாம் காத்திருக்கேன்
உன் பட்டத்து படிப்புக்காய்
சில காலம் போகட்டும்
கானகத்து கிளியை பார்ப்பதற்காய்
என் கண்ணுரொண்டும் துடியாய் துடிக்கிறது.
காலமெல்லாம் பொக்கிஷமாய் சேர
ஒரு கூட்டு கிளியாக
சோடியாய் பறந்திடுவோம்…..

 -நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-


புதன், 11 மார்ச், 2015

சிறகடிக்கும் நினைவலைகள்-8மழையில் நானைந்த நினைவுகள்
மழை வரும் போது தெரிகிறது
இளம் வட்ட வயதில் இளமையின்
சிறுமை துள்ளி விளையாட.
தூக்கணாம் குரு விக் கூட்டுடன்
தோழர்களை சுமந்து.. துள்ளி
விளையாடிய நினைவுகள்
நெஞ்சை விட்டு அகல வில்லை.


காகிதத்தில் கப்பல் செய்து
ஓடையில் ஓடம் விட்டோம்
சிறு வீடு கட்டி  மண் சோறு சமைத்து
செங்கல் துகள்களில் கறி சமைத்து
நண்பர்களும் நண்பிளும் மகிழ்ந்த நினைவுகள்.
பிஞ்சு நெஞ்சினிலே விதைத்த விதை
வயது வந்து மறக்க வில்லை.
நினைவுகள் தோன்றும் போது…
வரி வடிவம் கொடுக்கின்றேன் கவியாக.வேப்ப மர நிழனிலே வேலவனின்
புகழ்பாடி வேண்டு தலை நிறைவேற்ற.
கல் ஒன்றை நாம் வைத்து.
சிறு பொங்கல் பொங்கி கற்பூரம் நாம் எரித்து
வாழை இலை வரிசையாய் போட்டு
மாறி மாறி பொங்கல் உண்ட நினைவுகள்
பெயர் ஒன்றை  பெற்றோர்  சூட்ட
நம் நண்பர்களும் நமக்கு பட்டப் பெயர் சூட்டி
மகிழ்ந்த நினைவுகள் வயது வந்தும்
அகல வில்லை நெஞ்சினிலே.
 


-நனறி-
-அன்புடன்-
-ரூபன்-

புதன், 4 மார்ச், 2015

சிறுகதைப்போட்டியின் வெற்றியாளர்கள்..-2015

                         வணக்கம்வலையுலக உறவுகளே
 
ரூபன் &யாழ்பாவாணன்நடத்தியஉலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டியின் முடிவுகள்.-2015
                                  சிறப்புபரிசு பெற்றவர்கள்.
 
ஆறுதல் பரிசு பெற்றவர்கள்.
 
திரு.மெக்னேஷ்.விக்னேஸ்வரன்
திரு.மணவை ஜேம்ஸ்
திரு.பொ.முத்துக்குமார்
திரு.பி.பிரசாத்
திரு.புதுவை பிரபா
திருமதி.கவிமீனா.
திருமதி.தமிழ்முகில் பிரகாசம்
 
 
 
தைப்பொங்கலை முன்னிட்டு இணையத்தளத்தில் படைப்புக்களை படைத்துவரும் படைப்பாளிகளுக்கு என்னால் இயன்றஅளவு ஊக்குவிக்க வேண்டும் என்ற சிந்தனை என்னுள் உதித்ததன் விளைவாக ஒருமாதம் சிறுகதைப்போட்டி நடைபெற்றது அதன் இறுதி வடிவம் இன்று கிடைக்கப்பெற்றுள்ளது….10 பேர் சிறந்த போட்டியாளராக தேர்வுசெய்யப்பட்டுள்ளது
 
குறிப்பாக சில நுணுக்கங்களை கையாண்டு நடுவர்கள் மிகத் திறமையாக தெரிவு செய்தார்கள் உதாரணமாக ஒரு தொலைக்காட்சில் பாட்டுப்போட்டி நிகழ்ச்சி போலதான் போட்டிக்கு வருகிற பாடகர்கள் அனைவரும் மிக அருமையாக பாடுகிறார்கள் நடுவர்களின் கட்டாயத் தீர்ப்பு ஒருவரை தெரிவுசெய்யவேண்டும்…அங்கும் சில நுணுக்கங்களை கையாண்டு நாடுவர்கள் தெரிவு செய்கிறார்கள்
அதைப் போல எல்லா படைப்பாளிகளும் மிக நன்றாக சிறுகதைஎழுதியுள்ளார்கள் அவர்களுக்கு முதல் நான் பாராட்டை தெரிவித்துகொள்கிறேன்.

நடுவராக கடமையாற்றியவர்கள்

திரு. ரமணி ஐயா.
திரு.திண்டுக்கல் .தனபாலன் (அண்ணா)
திரு.. புவேனேந்திரன்(அண்ணா)
இவர்கள் மூவரும் தங்களின் பணிச்சுமைக்கு மத்தியில் நடுவராக கடமைபுரிந்து மிக திறமையான போட்டியாளர்களை இனங்கண்டு என்னிடம் தந்தார்கள்... அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்..இவர்களின் சேவை இந்த எழுத்துலகில் இன்னும் வளர எனது வாழ்த்துக்கள்.
அத்தோடு என்னுடன் நின்று போட்டியை நடத்தும் யாழ்பாவாணன் அண்ணா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
சில முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற சிந்தனை உணர்வுகளை வழங்கி வரும் எமது நிருவாக குழுவுக்கு நன்றியை கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். இன்னும் பல போட்டிகள் நடாத்த எங்கள் குழுவின் ஆலோசனை எப்போதும் பக்க பலமாக இருக்கும்...

வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு உரிய பரிசுகள்  தபால் வழி வந்தடையும் விரைவில்.
(சான்றிதழ் +பதக்கம்  +புத்தகம்)என்பவற்றில் தங்களின் பெயர்களை எழுத வேண்டியுள்ளதால் சரியான விபரத்தை கீழ்காணப்படும் அஞ்சலுக்கு அனுப்பவும்.
rupanvani@yahoo.com

அடுத்த போட்டியில் மீண்டும் சந்திக்கலாம்.....மிக விரைவில்...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-