புதன், 4 மார்ச், 2015

சிறுகதைப்போட்டியின் வெற்றியாளர்கள்..-2015

                         வணக்கம்வலையுலக உறவுகளே
 
ரூபன் &யாழ்பாவாணன்நடத்தியஉலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டியின் முடிவுகள்.-2015
                                  சிறப்புபரிசு பெற்றவர்கள்.
 
ஆறுதல் பரிசு பெற்றவர்கள்.
 
திரு.மெக்னேஷ்.விக்னேஸ்வரன்
திரு.மணவை ஜேம்ஸ்
திரு.பொ.முத்துக்குமார்
திரு.பி.பிரசாத்
திரு.புதுவை பிரபா
திருமதி.கவிமீனா.
திருமதி.தமிழ்முகில் பிரகாசம்
 
 
 
தைப்பொங்கலை முன்னிட்டு இணையத்தளத்தில் படைப்புக்களை படைத்துவரும் படைப்பாளிகளுக்கு என்னால் இயன்றஅளவு ஊக்குவிக்க வேண்டும் என்ற சிந்தனை என்னுள் உதித்ததன் விளைவாக ஒருமாதம் சிறுகதைப்போட்டி நடைபெற்றது அதன் இறுதி வடிவம் இன்று கிடைக்கப்பெற்றுள்ளது….10 பேர் சிறந்த போட்டியாளராக தேர்வுசெய்யப்பட்டுள்ளது
 
குறிப்பாக சில நுணுக்கங்களை கையாண்டு நடுவர்கள் மிகத் திறமையாக தெரிவு செய்தார்கள் உதாரணமாக ஒரு தொலைக்காட்சில் பாட்டுப்போட்டி நிகழ்ச்சி போலதான் போட்டிக்கு வருகிற பாடகர்கள் அனைவரும் மிக அருமையாக பாடுகிறார்கள் நடுவர்களின் கட்டாயத் தீர்ப்பு ஒருவரை தெரிவுசெய்யவேண்டும்…அங்கும் சில நுணுக்கங்களை கையாண்டு நாடுவர்கள் தெரிவு செய்கிறார்கள்
அதைப் போல எல்லா படைப்பாளிகளும் மிக நன்றாக சிறுகதைஎழுதியுள்ளார்கள் அவர்களுக்கு முதல் நான் பாராட்டை தெரிவித்துகொள்கிறேன்.

நடுவராக கடமையாற்றியவர்கள்

திரு. ரமணி ஐயா.
திரு.திண்டுக்கல் .தனபாலன் (அண்ணா)
திரு.. புவேனேந்திரன்(அண்ணா)
இவர்கள் மூவரும் தங்களின் பணிச்சுமைக்கு மத்தியில் நடுவராக கடமைபுரிந்து மிக திறமையான போட்டியாளர்களை இனங்கண்டு என்னிடம் தந்தார்கள்... அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்..இவர்களின் சேவை இந்த எழுத்துலகில் இன்னும் வளர எனது வாழ்த்துக்கள்.
அத்தோடு என்னுடன் நின்று போட்டியை நடத்தும் யாழ்பாவாணன் அண்ணா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
சில முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற சிந்தனை உணர்வுகளை வழங்கி வரும் எமது நிருவாக குழுவுக்கு நன்றியை கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். இன்னும் பல போட்டிகள் நடாத்த எங்கள் குழுவின் ஆலோசனை எப்போதும் பக்க பலமாக இருக்கும்...

வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு உரிய பரிசுகள்  தபால் வழி வந்தடையும் விரைவில்.
(சான்றிதழ் +பதக்கம்  +புத்தகம்)என்பவற்றில் தங்களின் பெயர்களை எழுத வேண்டியுள்ளதால் சரியான விபரத்தை கீழ்காணப்படும் அஞ்சலுக்கு அனுப்பவும்.
rupanvani@yahoo.com

அடுத்த போட்டியில் மீண்டும் சந்திக்கலாம்.....மிக விரைவில்...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

 
 
 

28 கருத்துகள்:

 1. my good wishes and hearty congratulations to the winners and thanks a lot for my brother rupan for his continuous efforts

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துகள்
  வெற்றியாளர்களை வாழ்த்துவோம்
  அடுத்த போட்டிகளில் பங்கெடுக்க
  அனைவரும் அணி திரள்க.
  விரைவில்
  பரிசில்கள் அனுப்பி வைக்கப்படும்.

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துகள்
  வெற்றியாளர்களை வாழ்த்துவோம்
  அடுத்த போட்டிகளில் பங்கெடுக்க
  அனைவரும் அணி திரள்க.
  விரைவில்
  பரிசில்கள் அனுப்பி வைக்கப்படும்.

  பதிலளிநீக்கு
 4. வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
  உங்கள் முயற்சி தொடரட்டும்

  பதிலளிநீக்கு
 5. பரிசுப் பெற்ற அனைவருக்கும், நடுவர்களுக்கும்,இதனை திறம்பட நடத்திய உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.

  பதிலளிநீக்கு
 6. எனக்கும் பரிசா.... என்னைத் தேர்ந்தெடுத்த நடுவர் குழுவுக்கு நன்றி.
  போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கும் ஆர்வமுடன் கலந்து கொண்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. போட்டி நடத்திய உங்களுக்கும் ,வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்!
  த ம 2

  பதிலளிநீக்கு
 8. முதல்முறையாக என் வாழ்நாளில் நான் கலந்துகொண்ட முதல் போட்டியில் பரிசு பெற்றது பெரும் உவகையாக இருக்கிறது . இப்போட்டியை நடத்திய ரூபன் அண்ணன் மற்றும் அவரது குழுவிற்கும் , எனக்கு ஆறுதல் பரிசளித்து ஊக்கப்படுத்திய திரு.ரமணி ஐயா , திரு.திண்டுக்கல் தனபாலன் அண்ணா , திரு.க.புவனேந்திரன் அண்ணா அவர்களுக்கு மிக்க நன்றியை இக்கணம் தெரிவித்துக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் . போட்டியில் வெற்றி பெற்ற முனைவர் .லட்சுமி திரு. ராஜேந்திரன், திரு .சே.குமார் அவர்களுக்கும் என் வாழ்த்துகள் .

  பதிலளிநீக்கு
 9. வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்உங்களுக்கும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 10. வெற்றி பெற்றூருக்கு என் வாழ்த்துகள்!!

  பதிலளிநீக்கு
 11. அனைவருக்கும் தங்களிற்கும்
  இனிய வாழ்த்துகள்
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 12. வெற்றி பெற்றூருக்கு என் வாழ்த்துகள்
  தமிழ் மணம் 4

  பதிலளிநீக்கு
 13. அன்புள்ள அய்யா,

  ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டியின் முடிவுகள்.-2015 ஆம் ஆண்டின் வரிசையில் 10 பேர் சிறந்த போட்டியாளராகத் தேர்வுசெய்யப்பட்டு... சிறப்புபரிசு பெற்றவர்கள் வரிசையில் எனது பெயரும் இடம் பெற்றுள்ளது கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

  நடுவராக இருந்து சிறுகதைகளைத் தேர்வு செய்திட்ட திருமிகு. ரமணி , திருமிகு.திண்டுக்கல் தனபாலன், திருமிகு.க. புவேனேந்திரன் அவர்களுக்கும், படைப்பாளிகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு சிறுகதைப் போட்டியை நடத்திட்ட திருவாளர்கள்.ரூபன் & யாழ்பாவாணன் மற்றும் நிருவாகக் குழுவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்!

  மிக்க நன்றி.
  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.
  manavaijamestamilpandit.blogspot.in  பதிலளிநீக்கு
 14. போட்டியில் வென்ற அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். அற்புதமான போட்டியை ஆர்வத்துடன் நடத்தி வலையுலகை ஊக்குவித்த ரூபனுக்கு பாராட்டுக்கள். நடுவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்

  பதிலளிநீக்கு
 15. தேர்வுபெற்ற எழுத்தாளர்களுக்கு அன்பான வாழ்த்துகள். தேர்வுசெய்த நடுவர் பெருமக்களுக்கும், நடத்திய தங்களுக்கும் என் இனிய பாராட்டுகள். தொடரட்டும் உங்கள் பணி.அத்தோடு, “எல்லா படைப்பாளிகளும் மிக நன்றாக கவிதை எழுதியுள்ளார்கள்“ என்று தெரிவித்திருக்கிறீர்களே, அந்தக் கவிதைகளையும் பரிசு பெற்ற கதைகளையும் எங்கே படிக்கலாம் என்னும் விவரத்தைத் தந்திருக்கலாமே?

  பதிலளிநீக்கு
 16. கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  பரிசு பொற்றவர்களுக்கும், நடுவர்களுக்கும், நடத்தியவர்களுக்கும் பாராட்டுக்கள்.
  தம +1

  பதிலளிநீக்கு
 17. போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள். இப்போட்டியில் ஆறுதல் பரிசு கிட்டியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. போட்டியை நடத்திய சகோதரர் ரூபன் அவர்களுக்கும், திரு. யாழ்பாவாணன் அவர்களுக்கும் நன்றிகள். எனது கதையை தேர்ந்தெடுத்த நடுவர்கள் அவர்களுக்கும் நன்றிகள் பல.

  பதிலளிநீக்கு
 18. வெற்றியாளர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 19. இவ்வாறான நிகழ்வுக்குப் பெருமுயற்சி எடுக்கும் தங்களுக்கும் குழுவினருக்கும், வெற்றி பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 20. சிறுகதைபோட்டியில் எனக்குப் பரிசு கிடைத்திருப்பது கண்டு மிக மனம் மகிழ்ந்தேன் நடுவராக இருந்து சிறுகதைகளைத் தேர்வு செய்த திருமிகு ரமணி,திருமிகு,திண்டுக்கல் தனபாலன்.திருமிகு புவனேந்திரனவ்ர்களுக்கும் இச்சிறுகதை போட்டியை நடாத்திய ரூபன்&யாழ்பாவாணன் ,மற்றும் நிர்வாக குழுவினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்--சரஸ்வதி ராஜேந்திரன்

  பதிலளிநீக்கு
 21. வெற்றியாளர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
  போட்டியைத் திறம்பட நடத்திய தங்களுக்கும் பாராட்டுக்கள் நல் வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 22. பரிசு பெற்ற‌வர்களுக்கு நல்வாழ்த்துக்கள்! போட்டியை திறமையாக நடத்திய உங்களுக்கு இனிய பாராட்டுக்கள்!!

  பதிலளிநீக்கு
 23. "சிறுகதைப்போட்டியின் வெற்றியாளர்கள்..௨015"
  அனைவருக்கு நல் வாழ்த்துகள்
  உலக மகளீர் தினம் நன்னாளில் சிறக்கட்டும்.
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 24. இந்த வலையுலகில் அருமையான போட்டிகள் நடத்தி எல்லோரையும் ஊக்குவிக்கும் தங்களுக்கும்,தங்கள் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்...

  வெற்றிபெற்றோர்,பங்கு கொண்டோர் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்...

  வாழ்க வளமுடன்.....

  பதிலளிநீக்கு
 25. வெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! உங்கள் முயற்சிக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 26. போட்டியில் எனது படைப்பும் பரிசு வென்றுள்ளது மிகவும் மகிழ்ச்சி ! சக போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்கள் ! ரூபனின் பணி தொடரவும், மேலும் சிறக்கவும் வேண்டுகிறேன் ! - பி. பிரசாத்

  பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்