புதன், 18 மார்ச், 2015

சோடிக்கிளியாக….…


சொல்லாமல் வந்த காதலால்
வாழ்வில் சுகந்தங்கள் வீச
வாழ்க்கை படிநிலையே மாறிப்போனது.
சிறகு  வெட்டப்பட்ட கிளிபோல
மெதுவாக காதல் வானில் பறக்க
காதல் சிறகு முளைத்தது உன்னாலே.
உன்னைப்பற்றிய ஒவ்வொரு சுதாரிப்பில்
வெட்டிய சிறகு துளிர் விட்டு வளர்கிறது.

ஓலை குடிசையில் ஊர் அற்ற மனிதனாய்
ஊட்டிவளர்க்க யாருமில்லாமல்
விசரன் போல் சுற்றித்திரிந்தேன்
உன் மனதில் அடைக்கலம் தந்தாய்
நீ வரும் பதையெல்லாம்
உன் கால் தடங்களை தேடுவதும்
என் நினைவுகளில் எல்லாம் நீதான்
ஒளிமயமாக தெரிகிறாய்.

காலமெல்லாம் காத்திருக்கேன்
உன் பட்டத்து படிப்புக்காய்
சில காலம் போகட்டும்
கானகத்து கிளியை பார்ப்பதற்காய்
என் கண்ணுரொண்டும் துடியாய் துடிக்கிறது.
காலமெல்லாம் பொக்கிஷமாய் சேர
ஒரு கூட்டு கிளியாக
சோடியாய் பறந்திடுவோம்…..

 -நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-


40 கருத்துகள்:

 1. கூட்டுக்கிளியாக சோடியாய் பறக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   ஐயா
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் கருத்தே என்னை இன்னும் பலப்படுத்தும்...

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 2. தம்பி பறந்து இந்தியாவுக்கு வாங்க... நல்லபடியாக அனைத்தையும் முடித்து விடலாம்... ஹிஹி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   அண்ணா

   நிச்சயம் பறந்து இந்திய வருவேண்... முக்கியமாக தங்களையும் மற்ற உறவுகளையும் பார்ப்பதற்கு சோடிக்கிளியாகத்தான் வருவேன்.... அது வரை காத்திருங்கள் அண்ணா...
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் கருத்தே என்னை இன்னும் பலப்படுத்தும்...

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 3. சோடி சேர்ந்தாச்சா ? வாழ்த்துகள் சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   சகோதரி
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் கருத்தே என்னை இன்னும் பலப்படுத்தும்...
   இன்னும் இல்லை... அடுத்த வருடம்.....

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 4. பதில்கள்
  1. வணக்கம்
   ஐயா
   100 வீதம் உண்மைதான் ஐயா... காத்திருப்பும் ஒரு சுகமும் ஒரு வித வலியும் ஐயா.
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் கருத்தே என்னை இன்னும் பலப்படுத்தும்...

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 5. ரூபன் தம்பி! தங்களின் காதல் நிறைவேறி, நீங்கள் காதல் சோடியாய் பறந்திட எங்களின் மனமார்ந்த வாழ்த்துகக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   அண்ணா.

   மனதாற வாழ்த்தும் தங்களுக்கு எனது அன்பு கனிந்த வாழ்த்து மடல்...அண்ணா
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் கருத்தே என்னை இன்னும் பலப்படுத்தும்...

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 6. வெட்டிய சிறகு துளிர் விடுமானால் காதல் வாழ்க, அருமையான வரிகள். வாழ்த்துகள். வளர்க நும் காதல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் கருத்தே என்னை இன்னும் பலப்படுத்தும்...

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 7. பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் கருத்தே என்னை இன்னும் பலப்படுத்தும்...

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 8. காலமெல்லாம் காத்திருக்கேன்
  ஒரு கூட்டு கிளியாக
  சோடியாய் பறந்திடலமென
  காலமெல்லாம் பொக்கிஷமாய் சேர
  என்று நன்றே பகிர்ந்தீர்
  நல்ல கவிதை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   அண்ணா..
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் கருத்தே என்னை இன்னும் பலப்படுத்தும்...

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 9. காலமெல்லாம் காத்திருக்கேன்
  ஒரு கூட்டு கிளியாக
  சோடியாய் பறந்திடலமென
  காலமெல்லாம் பொக்கிஷமாய் சேர
  என்று நன்றே பகிர்ந்தீர்
  நல்ல கவிதை!

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் சகோதரரே .!

  காத்திருத்தலின் காரணங்கள் சுபமாக முடிந்தவுடன், காதல் வானில் ஜோடி கிளிகளாக சுதந்திரமாய் பறக்க காதல் கிளிகளுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   தங்களின் வாழ்த்து மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் கருத்தே என்னை இன்னும் பலப்படுத்தும்...

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 11. விரைவில் சேர்ந்து பறக்கட்டும் ஜோடிக்கிளிகள் ரெண்டும் என வாழ்த்துகிறேன்.
  தமிழ் மணம் 6

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   ஜி

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் கருத்தே என்னை இன்னும் பலப்படுத்தும்...

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 12. தமிழ்மனங்களைக் கொள்ளை கொள்ள தம 7.

  தொடருங்கள் அய்யா!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   ஐயா
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் கருத்தே என்னை இன்னும் பலப்படுத்தும்...

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 13. #நீ வரும் பதையெல்லாம்
  உன் கால் தடங்களை தேடுவது#இருக்கட்டும் சகோ ,பாதையில் நீங்க ஒரு கால் வைக்கலாமே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   ஜி..
   நீங்கள் சொல்லும் ஐடியா சரி போலதான் உள்ளது.. எங்கோ.. ஒரு எதிர் விசை உள்ளது போல தோன்றுது ஹிஹி...ஹிஹி...
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் கருத்தே என்னை இன்னும் பலப்படுத்தும்...

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 14. இன்னும் எத்தனை நாட்கள் இந்த ஏக்கங்கள்? என்று முடியும் இந்த நாட்கள்? கொட்டு முழக்குங்கள். குவாகுவா மறு ஆண்டு.
  த.ம.9

  பதிலளிநீக்கு
 15. வணக்கம்
  ஐயா

  வருகையும் கருத்தும்மிக்க மகிழ்ச்சியளிக்கிறது... நன்றி ஐயா.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 16. காத்திருப்பும் அதன் தவிப்பும் ஒருவித சுகமே! அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 17. விரைவில் சேர்ந்து பறந்திட ஜோடிக்கிளிக்கு வாழுத்துக்கள் !

  பதிலளிநீக்கு
 18. சீக்கிரம் ஜோடி சேர்வதற்கு வாழ்த்துக்கள் சகோ.

  பதிலளிநீக்கு
 19. ஒரு கூட்டு கிளியாக
  சோடியாய் பறந்திடுங்கள்
  தம +1

  பதிலளிநீக்கு
 20. ஜோடி கிளி விரைவில் சேர வாழ்த்துக்கள்.
  கவிதை நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 21. விரைவில் ஜோடி சேர வாழ்த்துக்கள். கவிதை அருமை

  பதிலளிநீக்கு
 22. அன்புள்ள அய்யா,

  சோடிக்கிளி சொல்லு, சொல்லு,

  சொந்தக் கிளியே நீ, வந்து நில்லு!

  கன்னிக் கிளிதான் காத்துக் கெடக்கு, கண்ணுறங்காம,

  பட்டுக் கிளி இதைக் கட்டிக்கொள்ளு,
  தொட்டுக் கலந்தொரு மெட்டுச் சொல்லு!

  தங்கள் கவிதைப் படிக்கையில் இந்தப் பாட்டுதான் நினைவுக்கு வந்தது...!

  வாழ்க்கை வானில் சோடியாய் பறந்து ஆடிப் பாடி திரிய வாழ்த்துகள்.

  நன்றி.

  த.ம. 13.

  பதிலளிநீக்கு
 23. எண்ணம் நிறைவேறும் காலம் விரைவில் வர வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 24. ஒரு கூட்டு கிளியாகி சோடியாக பறக்க வாழ்த்துக்கள்...
  கவிதை அருமையாக இருந்தது ....

  வாழ்க வளமுடன்...

  பதிலளிநீக்கு
 25. காதல் வசத்தில் இருக்கும் போது என்னென்னவோ எண்ணங்கள் தோன்றும் சிறகு வெட்டினால் பறக்க முடியாத கிளியும் பறக்கும்.வெட்டப்பட்ட சிறகுகள் முளைக்கும் தன்னிலையில் எழுதும் போது சொந்த அனுபவமோ என்று எண்ணத் தோன்றும் வாழ்த்துக்கள் ரூபன்

  பதிலளிநீக்கு
 26. கவிதை அருமை. விரைவில் ஒன்று சேர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 27. வணக்கம் கவிஞரே
  வலைச்சரம் பணியினால்
  கவிதைக் கூண்டுக்குள்
  நுழைய முடியவில்லை!
  ஒரு ஜோடிக் கிளிகள் பறப்பதற்குள்
  வந்து விட்டேன் பார்த்தீர்களா?
  காதல் தில்லானா ஜில் ஜில் கவிஞரே!
  வருக வலைப் பூ பக்கம்!

  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு
  தம + 1

  பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்