புதன், 8 ஏப்ரல், 2015

மனதின் நெருடல்


மனதை கல்லாக்கி
பிறந்த தாயகத்தை மறந்து
கையில் அழகான சுமைப் பொதியுடன்
பன்நாடும் எல்லாம் கூடும் எந்நாட்டில்
முகவரால் ஏமாத்தப்பட்ட நிஜங்கள்எத்தனை
அந்த நிஜங்கள் வரிசையில் நாமும் ஒருவராக
எடுத்த விசா பொய்யா என்ற ஏக்கம்
உறவுகளை பிரிகிறோம் என்ற மன ஓட்டம்
 
 
அன்பான காதலியை பிரிகிறோம் என்ற
உள்ளார்ந்த மன ஏக்கம்
எல்லா நதிகளும் ஊற்றெடுத்து
நாலா பக்கமும் பாய்வது போல
மனதின் ஏக்கங்கள்  கல்லில் மோதும்
கடலலை போல பொங்கி எழுகிறது.
மனதை வாட்டி வதைத்தது ஏக்கத்தின் வலிகள்
எத்தனையோ ஆன்மாக்கள் விடை
தெரியாமல் தினம் தினம் வாழ்கிறார்கள்….
 
கடலும் தூரமும் எம்மை
பிரித்தாழ்கிறது என்றால்
உறவும் நட்பும் பிரிந்தழுகிறது…
அன்பும் பாசமும் காட்டி வளர்த்த
அன்பு தங்கையை பிரிகிறோம் என்ற வலி
பணத்தை தேடி செல்லும் ஒவ்வொரு
மனிதனின் வாழ்க்கையில்
ஒவ்வொரு வரலாறு உள்ளது.
அந்த வரலாறு  கண்ணீர்
எழுத்துக்களால் செதுக்கப்படுகிறது.
 
 


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 


 

 

28 கருத்துகள்:

 1. உண்மை... உண்மை...

  காலம் ஒரு நாள் மாறும்... கவலைகள் யாவும் தீரும்...

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  அண்ணா

  உண்மைதான்... உண்மைதான்....முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் சகோ..
  நெகிழவைக்கும் உண்மை...விரைவில் நல்ல மாற்றம் உண்டாகட்டும், வாழ்வு இனிதாய் மலரட்டும்.

  பதிலளிநீக்கு
 4. அன்பு, ஏக்கம், ஏமாற்றம், தவிப்பு என்ற நிலையில் பல சூழல்களை எதிர்கொண்டு வாழ்க்கையை ஓட்டுவது என்பது மிகவும் சிரமமானதே. இவ்வாறான பதிவுகள் மூலமாக பகிர்ந்துகொள்ளப்படும்போது மனச்சுமை குறையும் வாய்ப்பு அதிகம் உள்ளது. நல்லதை நினைப்போம். நல்லதே நடக்கும்.

  பதிலளிநீக்கு
 5. இழப்புகளும் துயரங்களும
  துரத்தி விரட்டினாலும்
  சலியாது முயன்றால்
  வெற்றி விரைந்தோடி வரும்

  பதிலளிநீக்கு
 6. ஈழத்தமிழர்களின் வேதனை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
  என் நண்பர் ஒருவர் சமீபத்தில் இலங்கை சென்று வந்தார். அங்கு மார்பகங்கள் அறுக்கப்பட்ட தமிழ் பெண்களின் புகைப் படங்கள், தங்களின் ஆண்கள் சுட்டுவீழ்த்தப்பட்ட பரிதாபம் சொல்ல சொல்ல மனம் கலங்கியது. என்று தணியுமோ இந்த இன வெறி மோகம்?

  த ம 3

  பதிலளிநீக்கு
 7. இது துயரத்தின் எல்லை எப்போது தீருமோ இந்தத் தொல்லை.
  நாம் நம்புவோம் வெல்வோம் என்பதை. ரூபன்
  இழந்த அனைத்தும் சீக்கிரம் பெற ஆண்டவன் அருளட்டும்...! பதிவுக்கு நன்றி !

  பதிலளிநீக்கு
 8. மிகவும் உண்மையான வார்த்தைகள்! நல்ல காலம் விரைவில் வந்து ஒளி வீசட்டும். துயர் சொல்ல வார்த்தைகள் இல்லை....தம்பி!

  பதிலளிநீக்கு
 9. வலி நிறைந்த கவிதை....
  எல்லாம் சுகமாகும்.
  த ம 8

  பதிலளிநீக்கு
 10. இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது!

  பதிலளிநீக்கு
 11. காலம் ஒரு நாள் மாறும். வாழ்வும் இனிமையாக மாறும் என்று நம்புவோம்.

  பதிலளிநீக்கு
 12. மாற்றம் வரும் நண்பரே காத்திருப்போம்
  த.ம. மூன்றாவது

  பதிலளிநீக்கு
 13. அன்புள்ள அய்யா,

  எண்ணப் பறவை...!

  சிறந்து வாழ்ந்த தமிழினத்தைச்
    சிதைத்தே வாழ்தல் பொறுக்காமல்
  உறவுப் பறவைக் கூட்டத்தை
    உங்கள் சிறகால் காக்கின்றீர்!
  பறக்கும் எங்கள் மனம்உங்கள்
    பாசம் தேடி ஓடிவர
  பிறக்கும் கவிதை பேரின்பம்
    படைப்பீர் பருக வருகின்றோம்!

  நன்றி.
  த.ம. 10.

  பதிலளிநீக்கு
 14. என்றுதான் விடியல் வருமோ?? அருமையான கவிதை.

  பதிலளிநீக்கு
 15. இந்த நிலை மாற கடவுள் அருள்புரிவார். நாங்களும் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 16. துயர்பாடும் அருமையான கவி....சகோ..

  பதிலளிநீக்கு
 17. நெருடல் ஈழத்திலிருந்து ஆந்திரா வரை வந்து எங்கள் உள்ளங்களையும் தாக்கியது என்றால் மிகையில்லை ரூபன். வார்த்தைகளின் ஆழமும் சோகமும் மனதை முள்ளாய் தைக்கிறது. காலம் கனியும் கனவுகள் நனவாகும். நம்பிக்கையுடன் காத்திருப்போம்

  பதிலளிநீக்கு
 18. மாற்றம் ஒன்றே மாறாதது, இது உண்மையானால் மாறும். காத்து இருப்போம்,,

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் சகோதரரே.!

  தாங்கள் வடித்த வார்த்தைகளின் வரிகள் நெஞ்சை கனக்கச் செய்து விட்டன. பாசங்களை புரிந்து கொண்ட காலம் ஓர்நாள் கண்டிப்பாக மாறி நல்லதை நடத்திக் காட்டும். இறைவனிடம் நம்பிக்கை வைப்போம்.நம்பிக்கை என்றும் பொய்த்து விடாது..

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 20. கண்ணீர் எழுத்துக்கள்
  யாவும் ஒருநாள்
  பன்னீர் பதிவாகும்
  கவிஞரே!
  சிறப்பினை நோக்கி
  பயணம் செய்யும்
  சிறகுகள்
  உம்மிடம் உண்டு!
  நட்புடன்,
  புதுவை வேலு
  த ம +1

  பதிலளிநீக்கு
 21. இழப்புக்கள் இருந்தும்
  வாழவேண்டும் என்ற எண்ணம்
  வற்புறுத்தும் காரணத்தால்
  இருக்கின்றோம் நாமும்
  நடைபிணங்களாய் வாழ்வில்
  வடுக்களோடு.....!
  அருமை கவிஞரே!

  பதிலளிநீக்கு
 22. அந்த வரலாறு கண்ணீர்
  எழுத்துக்களால் செதுக்கப்படுகிறது., எத்தனை சத்தியமான வரிகள் உணர்வுப்பூர்வமான கவிதை

  பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்