வியாழன், 23 ஜூலை, 2015

பொறாமை


மனிதவாழ்வியல் தந்துத்தில்
மரணப் படுக்கை வரை.
நினைவோடு நெஞ்சோடு
முட்டி மோதி விளையாடும்
கடலலைபோல் 
பொறாமைஎன்னும் ஆணிவேர்
குற்றுயிராய் கிடக்கும் போது.
பிறர் கண்டு சீற்றம் அடிக்கிறது.

மனிதன் இடத்தில் இருந்தா.?,
பறவையிடத்தில் இருந்தா....?
விலங்கிடம் இருந்தா...?
பொறாமை பிறந்தது.

குயிலுக்கும் காக்கைக்கும் பகை.
பாம்புக்கும் கீரிக்கும் பகை.
மனிதன் மனிதனுக்கு பகை.
மனிதன் எதில் இருந்து கற்றானோ.
தெரியாத புதிராக என் மனம்.
அலையடிக்கும் தாமரை போல.
நிமிடத்துக்கு நிமிடம் தத்தளிக்குது.

பொறாமை என்ற வன் சொல்லை.
ஆயுதமாக எடுத்து.
எத்தனை மனிதர்களின் வாழ்க்கை.
புயலடித்த தேசம் போல. சிதர் உண்டு கிடக்கிறது.
ஆழ்மனதில் புதையுண்டு கிடக்கும்
ஆணவச் சொல் பொறாமையை.
புதிய ஆடையை கண்டவுன்
பழைய ஆடையை களைவது போல.
போகியில் போடுங்கள். 
நல்ல மனிதராய் வாழுங்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

உறவுகளே.
 கவிஞர் வல்வை சுஜேன் அவர்களின் வலைப்பூ பக்கம் சென்று கவிகளை படித்து தங்களின் கருத்தை சொல்லுங்கள்...நிச்சயம் செல்லுங்கள்.

புதன், 15 ஜூலை, 2015

பொம்மையும் மனிதனும்


மனித வாழ்க்கை சக்கரத்தில்
எத்தனை விதமான பொம்மைகள்
துள்ளி விளையாடுகிறது.
சக மனிதனைப் போல சம அளவு
உரிமையோடு சுகமாக பேசுகிறது பொம்மைகள்
சிலரது வாழ்க்கை  தலையாட்டும்
பொம்மை போல காலமென்னும்
மகா சமுத்திரத்தில் நீச்சல் போடுகிறது.

பாலுக்கு அழும் குழந்தைக்கு  பால் கொடுக்காமல்
தலையாட்டும் துள்ளி விளையாடும் பொம்மைகள்.
உயிரின் மேல் உயிர் வைத்து விளையாடுகிறது.
பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் கேள்வி கேட்டால்
அந்த இடத்தில் ஆமாம் என்று
மாணவன் தலையாட்டும் பொம்மையாகிறான்
தாய் மொழி தெரிந்தும் பிற மொழி தெரியாவிட்டால்.
அந்த இடத்தில் கேட்கும் கேள்விக்கு 
தலையாட்டும் பொம்மையாகிறான்.இன்றைய மனிதன்.

உயிர் உள்ளவன் மனிதன். உயிர் அற்றது சடம்
அன்பு பாசம் . கருணை மனித நேயம்.
சொல்லும் சக்தி மனிதனே.
ஆனால் இன்றைய மனிதர்கள் தன் வாழ்நாளை
தலையாட்டும் பொம்மை போல வாழ்கிறார்கள்
விபரம் தெரிந்த காலம் வரை
இறக்கும் போது கூட நாம்  உயிரற்ற.
பொம்மையாக போகிறோம்....

பொம்மை கிடைக்காதெனத் தெரிந்தால்
குழந்தைப் பருவத்தில் நாம் அழுவதைப் போல
எல்லோரும் நம்மைப் பார்த்து
அழுது கொண்டிருப்பார்கள்
இனி இந்த பொம்மை கிடைக்காதென்று
இதுதான் மனிதனின் நிஜ வாழ்க்கையாக மாறுகிறது.
இறுதியில் மனிதனும் பொம்மையாக -மாறுகிறான் .

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வியாழன், 2 ஜூலை, 2015

சருகான வாழ்க்கை.


பாசம் வைத்த அன்பான உறவை பிரிந்து
பரதேசி வாழ்க்கையாக போனது பலர் –வாழ்வு
ஊட்டி வளர்த்த அன்புத் தங்கையும்
கூடி வாழ்ந்த உடன் பிறப்புக்களையும்
பணம் என்னும் காகிதத்துக்காக
வாழ்வை தொலைத்தவர்கள் எத்தனை
அம்மாவோ அப்பாவோ உடன் பிறப்புக்கள்
மண்ணின் மடியில் சங்கமித்தாலும்

இறுதியாய் முகம் கூடப்பார்க்க முடியாத
கண்ணீர் கரைந்த வாழ்க்கையாக
சதா துன்பச்சிலுவையை சுமந்து- வாழ்கிறார்கள்
பணம் என்னும் துயரம் துரத்தினால்
அடுத்தவன் வீட்டில் வட்டிக்கு பணம் –வேண்டி
விமானம் ஏறி வெளிநாடு போனவர்கள்.
நெஞ்சில் அணைத்து தூக்கிய
புன்னகை செல்வங்களின் நினைவுகள்.

பாசம் காட்டி அரவணைத்த மனைவியின்
அன்பு நெருடல் வாட்டி வதைக்க - சிந்தனை சிதற.
எல்லாம் பொறுமை காத்துக்கொண்டு.
கனவு தேசத்தில் மாய புன்னகையுடன்-வாழ்கிறார்கள்.
உடல் அங்கு இருக்க உயிர் மட்டும்
சொந்த தேசத்தில் நிழலாடுகிறது.
எல்லாம் பணம் என்னும் –காகிதத்துக்காக….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-