புதன், 15 ஜூலை, 2015

பொம்மையும் மனிதனும்


மனித வாழ்க்கை சக்கரத்தில்
எத்தனை விதமான பொம்மைகள்
துள்ளி விளையாடுகிறது.
சக மனிதனைப் போல சம அளவு
உரிமையோடு சுகமாக பேசுகிறது பொம்மைகள்
சிலரது வாழ்க்கை  தலையாட்டும்
பொம்மை போல காலமென்னும்
மகா சமுத்திரத்தில் நீச்சல் போடுகிறது.

பாலுக்கு அழும் குழந்தைக்கு  பால் கொடுக்காமல்
தலையாட்டும் துள்ளி விளையாடும் பொம்மைகள்.
உயிரின் மேல் உயிர் வைத்து விளையாடுகிறது.
பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் கேள்வி கேட்டால்
அந்த இடத்தில் ஆமாம் என்று
மாணவன் தலையாட்டும் பொம்மையாகிறான்
தாய் மொழி தெரிந்தும் பிற மொழி தெரியாவிட்டால்.
அந்த இடத்தில் கேட்கும் கேள்விக்கு 
தலையாட்டும் பொம்மையாகிறான்.இன்றைய மனிதன்.

உயிர் உள்ளவன் மனிதன். உயிர் அற்றது சடம்
அன்பு பாசம் . கருணை மனித நேயம்.
சொல்லும் சக்தி மனிதனே.
ஆனால் இன்றைய மனிதர்கள் தன் வாழ்நாளை
தலையாட்டும் பொம்மை போல வாழ்கிறார்கள்
விபரம் தெரிந்த காலம் வரை
இறக்கும் போது கூட நாம்  உயிரற்ற.
பொம்மையாக போகிறோம்....

பொம்மை கிடைக்காதெனத் தெரிந்தால்
குழந்தைப் பருவத்தில் நாம் அழுவதைப் போல
எல்லோரும் நம்மைப் பார்த்து
அழுது கொண்டிருப்பார்கள்
இனி இந்த பொம்மை கிடைக்காதென்று
இதுதான் மனிதனின் நிஜ வாழ்க்கையாக மாறுகிறது.
இறுதியில் மனிதனும் பொம்மையாக -மாறுகிறான் .

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

31 கருத்துகள்:

 1. அருமை ரூபன்.

  இங்கு பொம்மைகள் என்பது உருவகமாய்ச் சொல்லப் பட்டிருக்கும் மனிதர்களைத்தான் என்றாலும், சமீபத்தில் படித்த செய்தி ஒன்று நினைவுக்கு வருகிறது. வெளிநாட்டில், ஜெர்மனியா எந்த நாடு என்று நினைவில்லை,. ரோபோ ஒன்று மனிதனைக் கொன்று விட்டது என்று படித்த செய்தி!

  பதிலளிநீக்கு
 2. பொம்மையை மையமாக வைத்து கருத்துச் செறிவு மிக்க, ஒரு வசன கவிதை. – த.ம. 2

  பதிலளிநீக்கு
 3. நீயும் பொம்மை நானும் பொம்மை நினைத்துப்பார்த்தால் எல்லாம் பொம்மை என்ற பாடல் நினைவிற்கு வருகிறது. தாங்கள் கூறுவது முற்றிலும் சரியே.

  பதிலளிநீக்கு
 4. நீயும் பொம்மை நானும் பொம்மை என்பது உண்மைதானோ :)

  பதிலளிநீக்கு
 5. பொம்மை கொண்டு சொன்ன
  வாழ்வின் விளக்கம் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. வணக்கம்,
  ஒரு வேளை சின்ன வயதில் பொம்மை வைத்து விளையாடுவதால்,
  நாமும் பொம்மை ஆகிறோமோ பல நேரங்களில்,,,,,,,,,,,
  தங்கள் உருவகம் அருமை,
  வாழ்த்துக்கள்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 7. அருமையான கவிதை, இறைவன் கையில் நாம் எல்லோரும் விளையாட்டு பொம்மைகளெ! நான் ஒரு விளையாட்டு பொம்மையா! என பாவநாசசிவன் அவர்கள் எழுதிய பாடல் உள்ளது. பரமன் கையில் நூல் உள்ளது, பொம்மலாட்டம் நடக்குது. ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதரே! என்று அப்பர் பாடிய தேவாரம் உள்ளது.

  பதிலளிநீக்கு
 8. ஆட்டுவித்தா லாரொருவ ராடாதாரே
  அடக்குவித்தா லாரொரவரடங்காரே
  ஓட்டுவித்தா லாரொருவ் ரோடாத்ரே
  உருவித்தா லாரொருவ ருருகாதாரே
  பாட்டுவித்தா லாரொருவர் பாடாதரே
  பணிவித்தா லாரொருவர் பணியாதாரே
  காட்டுவித்தா லாரொருவர் காணாதாரே
  காண்பாரார் கண்ணுதலாய்க் காட்டாக்காலே.
  அப்பர் தேவாரம்.

  பதிலளிநீக்கு
 9. அருமையான வரிகள் ரூபன்...ஆம் மனிதர்கள் பொம்மைகளாகத்தான் மாறிக் கொண்டிருக்கின்றார்கள்...

  பதிலளிநீக்கு
 10. எனக்குக்கூட நீயும் பொம்மை நானும் பொம்மை பாடல் நினைவுக்கு வந்தது ரூபன் அருமையான பகிர்வு பாராட்டுக்கள்--சரஸ்வதிராசேந்திரன்

  பதிலளிநீக்கு
 11. அருமையான கருத்து... சில சமயத்தில்,
  அன்புக்காகவும். மனிதர்கள் மௌனமாகின்றனர்... அதுவே
  பல பேர்க்கு. ஊமை என வெளிபடுகின்றன..
  பலரின். ஊமை தான் சிலரை பொம்மையாக்கி விட்டது...
  ஆனால். பிறப்பிலும். ஊமையானவர்கள்
  அன்பான சில மனங்களால் இன்னமும்
  மனிதர்களாய். வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்
  அருமையான. கருத்து. சகோதரா

  பதிலளிநீக்கு
 12. அருமையான கருத்து... சகோதரா..
  சிலரின் அன்பு கிடைக்காமல்,
  பலர் ஊமையாக மாறுகின்றனர்..
  அவர்களும். நடமாடும். பொம்மை தான்..
  ஆனால் பிறப்பிலும். ஊமையான. பலரை
  அனபான சில உள்ளங்களால்
  நல்ல மனிதர்களாய். நடமாடுகின்றனர்...

  பதிலளிநீக்கு
 13. பொம்மையை மையமாக வைத்து சொன்ன கருத்து மிக அருமை.என்னுடைய வலைப்பூவுக்கும் நேரம் கிடைக்கும் போது வாருங்கள்.

  பதிலளிநீக்கு
 14. சிறப்பான கருத்தமைந்த கவிதை! அருமை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் ரூபன் !

  மனிதன் பொம்மை ஆகும் தருணங்கள் அழகாய் சொல்லி இருக்கீங்க அருமை வாழ்த்துக்கள் !
  தமிழ்மணம் +1

  பதிலளிநீக்கு
 16. இனி இந்த பொம்மை கிடைக்காதென்று இதுதான் மனிதனின் நிஜ வாழ்க்கையாக மாறுகிறது. இறுதியில் மனிதனும் பொம்மையாக -மாறுகிறான் .//
  வாழ்வியலின் உண்மையை சொல்லும் கவிதை அருமை ரூபன்.

  பதிலளிநீக்கு
 17. பொம்மை படத்தில் வந்த நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது
  நன்று

  பதிலளிநீக்கு
 18. ஆம் உண்மைதான்! மனித வாழ்வே பொம்மை விளையாட்டே!

  பதிலளிநீக்கு
 19. "பாலுக்கு அழும் குழந்தைக்கு
  பால் கொடுக்காமல் தலையாட்டும்
  துள்ளி விளையாடும் பொம்மைகள்.
  உயிரின் மேல்
  உயிர் வைத்து விளையாடுகிறது." என
  அழகாக வெளிப்படுத்திய கவிதை!

  பதிலளிநீக்கு
 20. இறைவனின் படைப்பில் மனிதன் மனிதனின் படைப்பில் பொம்மை விளையாட பொம்மை வேண்டும் என்று அழுதவன் வாழ்வியல் பொம்மையாகி வீழ்ந்து மடிகிறான் சிரிக்கிறது பொம்மை... அருமை பாராட்டுகள்...

  பதிலளிநீக்கு
 21. இவ்வளவு சீக்கிரம் ஆன்மிகத்திற்குத் தாவ வேண்டாமே! இளமையின் பாற்பட்ட கருத்துக்கள் எவ்வளவோ இருக்கின்றன. தேடிப்பிடித்து கவிதையாக்குங்கள்! - இராய செல்லப்பா

  பதிலளிநீக்கு
 22. நீயும் பொம்மை நானும் பொம்மை பாடல் தான் எனக்கும் நினைவிற்கு வருகிறது. கவிதை அருமையாக இருக்கிறது சகோ. தம +1 கால தாமதத்திற்கு மன்னிக்க

  பதிலளிநீக்கு
 23. ''..சிலரது வாழ்க்கை தலையாட்டும் பொம்மை போல காலமென்னும் மகா சமுத்திரத்தில் நீச்சல் போடுகிறது....''' ஆம் நீயும் பொம்மை நானும் பொம்மை தான் வாழ்வு
  நன்று சகோதரா.

  பதிலளிநீக்கு
 24. உயிரோடு வாழும் உணர்விலாப் பொம்மை!
  துயில்கொள்ளும் என்றும் தொடர்ந்து!

  உண்மையைச் சொல்லிய சிந்தனைக் கவி வரிகள்!
  வாழ்த்துக்கள் சகோ!

  பதிலளிநீக்கு
 25. இன்பத் தீபாவளி உங்களிற்காகட்டும்
  அன்புடன் இனிய வாழ்த்துகள்.
  இன்றெமை வாழ்த்தியவர்கள் வாழ்த்த வருவோருக்கும்
  இன்னமுத நன்றியுடன் தீபமொளிரட்டும்.
  அன்புடன் வேதா. இலங்காதிலகம்.
  டென்மார்க்.

  பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்