வெள்ளி, 2 அக்டோபர், 2015

நீ தந்த பிரியம்.


உறங்கும் விழிகள் எல்லாம்
உன்உருவம் தோன்றுதடி.
ஊர் உறங்கும் சாமத்தில்
உன் நினைவு வருகிறது.

 மழலை மொழி பேசி
அன்புதனை நீ காட்டி
அல்லல் பட வைத்தாயே.
தனிமையில் வாழ்கிறேன் .

 உந்தன் நினைவுகள் வரும்போது.
உன் விழிகள் இரண்டும்
கண்ணெதிரே. வந்தாட.
நீ காட்டிய பாசம் நின்றாட

பாசத்தின் சிறைக் கூட்டை
பண்போடு நீ சிதைத்தாய்.
பாசம் என்னும் பண்புக்கு
இலக்கணத்தில்
வரிவடிவம் தேடினேன்
நீ தந்த பிரியந்தான் வந்ததடி….

இந்த கவிதை மலேசியா பத்திரிகை தமிழ் மலரில் 27-09-2015 வந்தது.பார்வைக்கு
தமிழ்டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்த சிறுகதை.-09-09-2016
27-09-2015 மலேசிய பத்திரிகை மக்கள் ஓசையில் வந்த  செய்தி பார்வைக்கு
மலேசிய எழுத்தாளர் திருமதி மார்கிரேட் செல்லத்துரை ஐயாவின் வீட்டில் இரவு நேர விருந்தின் பின் அவர்கள் எழுதிய நூலை பெற்ற போது
 
 


18 கருத்துகள்:

 1. இதழில் வந்த செய்திகளைக் கண்டேன். தங்களது எழுத்துப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். எனது முதல் வலைதளத்தில் பௌத்த நல்லிணக்க சிந்தனைகளைக் காண வாருங்கள். http://ponnibuddha.blogspot.com/2015/10/blog-post.html

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துகள் ரூபன் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்
  தமிழ் மணம் 333

  பதிலளிநீக்கு
 3. மிக்க மகிழ்வாயிருக்கிறது
  அனைவரும் பார்த்து மகிழ
  நகலெடுத்துப் பகிர்ந்தவிதம் மனம் கவர்ந்தது
  தங்கள் இலக்கியப்பணி தொடர
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்! தங்கள் தளத்திற்கு புதியவன்! தங்கள் இலக்கிய பணி சிறக்க வாழ்த்துக்கள் கவிதையும் அருமை! நன்றி!

  பதிலளிநீக்கு
 5. தங்களது படைப்புகள் மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் ! எனது வலைப்பூ பக்கமும் நேரம் கிடைக்கும் போது வாருங்கள்.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் ரூபன் !

  அன்போடு சுமந்த நினைவுகள் அருமை அருமை தொடர
  வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
  தம +1

  பதிலளிநீக்கு
 7. அருமை நண்பரே
  தங்களின் எழுத்துலகப் பயணம் சிறக்கட்டும்
  பெருமைகள் தங்களை நாடிவந்து சேரட்டும்
  வாழ்த்துக்கள் நண்பரே
  தம+1

  பதிலளிநீக்கு
 8. மலேசியா உங்களை வாழ்த்தி விட்டது ,தமிழகமும் போற்றும் காலம் வரும் !

  பதிலளிநீக்கு
 9. விட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........

  பணம்அறம்

  நன்றி

  பதிலளிநீக்கு
 10. விட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........

  பணம்அறம்

  நன்றி

  பதிலளிநீக்கு
 11. சிறந்த பணி!
  மேலும் சிறப்புறட்டும் இலக்கிய இதயம் மகிழட்டும்
  நன்றி!
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 12. வணக்கம்...

  தாங்களும் விமரிசனப் போட்டியில் கலந்து கொள்ளலாம்...

  இணைப்பு : →இங்கே சொடுக்கவும்

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

  பதிலளிநீக்கு
 13. ரூபன் தம்பி வாழ்த்த்துகள்!!! கலக்குகின்றீர்கள்! தங்கள் எழுத்துப் பயணம் தொடரவும் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்