வியாழன், 26 நவம்பர், 2015

விருது கிடைத்த போது.. மனம் மகிழ்வு….

இலங்கையின் தலை நகர் கொழும்பில் உள்ள தமிழ்ச்சங்க மண்டபத்தில் தடாகம் அமைப்பினால் விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இடம் பெற்றது 21-11-2015 அன்று  இந்த நிகழ்வில் எனக்காக கிடைத்த விருது கள் இரண்டு.

1வது விருது. கவிதைப்போட்டியில் கலந்து கொண்டு என் கவிதை தெரிவாகியமைக்காக.கவினெழி என்ற பட்டமும் சான்றிதழும்
 

2வது விருது.-கவியருவி என்ற பட்டம் தந்து சிறப்பிக்கப்பட்டது… இந்த காட்சிகள் அடங்கிய தொகுப்பு தங்களின் பார்வைக்காக. இதோ.
எனதுதம்பி என்சார்பாக கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் விருது பெற்ற போது.
 
 
அன்பு நன்பர் கவிஞர் ஈழ பாரதி  எனது தம்பி  கொழும்பில் சந்திந்த போது
 
கடந்த ஞாயிறு22-11-2015 மலேசியாவில் உள்ள தேசிய நாள் ஏடு. பத்திரிகை தமிழ் மலரில் வந்த எனது கவிதையும் இங்கே.


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெள்ளி, 20 நவம்பர், 2015

தொடர்பதிவில் நானும் சிக்கிவிட்டேன்...


நமது வலையுலக நண்பர். பாசமிகு அண்ணாவான திரு.கில்லர்ஜி அவர்கள் தொடக்கி வைத்த தொடர் பதிவால் வலையுலகம் மிக உச்சாகமாக உள்ளது.அந்த வகையில் கில்லர்ஜி அண்ணாவுக்கு எனது நன்றிகள்

பத்து ஆசைகளை கில்லர்ஜி அண்ணா அழகாக சொல்லியுள்ளார். அந்த தொடர் பதிவில் சிக்கிய சகோதரி தேன்மதுரத் தமிழ் என்ற வலைப்பூ சகோதரி என்னை தொடர் பதிவுக்கு அழைத்தார்கள் எல்லோரும் எழுதிக் கொண்டு வந்தார்கள் நான் மட்டுமே அதில் எஞ்சியுள்ளேன். அந்தவகையில் என்னை தொடர் பதிவுக்கு அழைத்த சகோதரி கிரேஸ்பிரதீபா அவர்களுக்கு எனது நன்றிகள்.

எனது பத்து ஆசைகள் இதோ தங்களின் பார்வைக்கு.

1.கடவுச் சீட்டு இல்லாமல் சுதந்திரமாக சகல நாடுகளுக்கும் செல்ல வேண்டும்
2.முகம் தெரியா எனது வலையுலக நண்பர்களை நேரில் சந்திக்க வேண்டும் அந்த நாள் எப்போது மலரும் என்ற ஏக்கம்.

3.போட்டி பொறமை இல்லாத மனிதம் வளர வேண்டும்.எல்லோரிடமும்.
4.அளவுக்கு அதிகமாக கறுப்பு பணம் வைத்திருக்கும் ஒவ்வொரு தமிழனும் வாழ்வற்று கிடக்கும் அடித்தட்டு மக்களுக்கு உதவ முன்வரவேண்டும்.

5.நடிகர்கள் நடிக்கிறார்கள் அவர்களின் வாழ்வுக்காக. அந்த நடிகர்களின் பட விளம்பர படங்களுக்கு பாலினால் அபிசேகம் செய்யும் மூட நம்பிக்கையை நிறுத்த வேண்டும்.
6.இல்லாத உறவுகளுக்கு கொடுத்து உதவும் மனநலம் ஒவ்வொரு மனிதன் இடத்திலும் வளர வேண்டும்.

7.தமிழராக இருந்து அவர்கள் சந்திக்கும் தமிழருடன் தாய்மொழியில் பேசாமல் வேற்று மொழி கலப்புடன் பேசுவதை நிறுத்த வேண்டும்.தமிழன் என்றால் தமிழால் பேசுவோம….

8.வீட்டில் வளரும் குழந்தைகளுக்கு எமது தாய் மொழியை கற்றுகொடுக்க வேண்டும் பெற்றோர்கள்…
உதாரணத்துக்கு-சன்தொலைக்காட்சியில் சொல்லுங்கள் அண்ணா சொல்லுங்கள் இமான் அண்ணாச்சி நடத்தும் நிகழ்ச்சியில் தமிழ் வார்த்தை தெரியாமல் அல்லல்படும் பிள்ளைகள் எத்தனை பார்த்தவுடன் நெஞ்சம் துடிக்கிறது..இந்த நிலை மாறவேண்டும்.
9.பெற்ற தெய்வங்களை முதியோர் இல்லங்களில் விடாமல் அவர்கள் இறக்கும் வரை பெற்ற பிள்ளைகள் சுமக்கவேண்டும்.
10.எனது தேசம் எனது ஊர் என்ற நிலை உருவாகி.. சமூக சிந்தனை வளர வேண்டும்.
உதாரணத்துக்கு.-நாம் போகும் பாதையில் ஏதாவது பள்ளங்கள் இருந்தால் ஒரு நிமிடமாவாது செலவழித்து..மூட முடியும் என்றால் மண்ணால்  மூடிவிடலாம் இல்லாவிட்டால்  அபாயமான பகுதி என்று அடையாளபடுத்தி செல்லவேண்டும்.
தொடர்பதிவுக்கு எல்லோரையும் அழைத்து விட்டார்கள் அதனால் யாரையும் அழைக்கவில்லை...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

 

செவ்வாய், 10 நவம்பர், 2015

ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் தீபாவளியை முன்னிட்டு நடைபெற்ற கவிதைப்போட்டியின் வெற்றியாளர்கள்

திங்கள், 9 நவம்பர், 2015

ஏக்கம் கலந்த தீபாவளி.


வாழ்க்கையில் துன்பத்தை சுமந்து.
கண்ணீர் வாழ்க்கையில் வாழும்
ஏழைகள் எத்தனை
அவர்களின் ஏக்கங்கள் மனதை கீறல் இட
தீபாவளி பண்டிகையும்
கரை தொடும் காலமாய்
ஆர்ப்பரிக்கிறது.
வாழ்வில் வசந்தம் வருமா
என்ற ஏக்க உணர்வு.
செந்தணலாக எரிகிறது.
தீபாவளி பண்டிகையில்


மழைத்துளிகள் மின்னல் வெட்ட
ஈரங்கள் காயமுன் ரணங்களை
சுமந்த வர்ண வெடிகள்
வெடிப்போமா என்ற ஏக்க ததும்பல்
ஏழைகளின் மனக்கதவை.
ஒரு கனம் திறந்து பார்க்க வைக்கிறது.
அவர்களின் எதிர்பார்ப்புக்கள்
எல்லாம் நிறைவடையுமா?
இந்த தீபாவளில்.

கல்லரை மேனிகள் காற்றோடு கலந்த
சந்தனப் பேழைகள் கண்திறக்கும்
கார்த்திகை மாதத்தில்
பெற்றவளே. கண்ணீர்கடலில்
ஆர்ப்பரிக்க இனிக்குமா இந்த தீபாவளி்
புன்னகை பூக்கும் தீபங்கள்
எண்ணகள் ஈடேற்ற செய்யுமா தீபாவளி.


வாழ்விடம் இழந்த அனாதைகள்
வாழ்வை சீரளித்த பெண்கள்.
ரணம் கொண்ட பூமி பந்தத்தில்.
கயவர்களின் கைவரிசை.
முகம் காட்ட முடியாமல்
பெண்மையை சிதைத்து.
ஆணவம் கொண்ட நரகாசுரன்
அழித்த நாள் தீபாவளி என்றால்மண்ணில் வாழும்
காம வெறி கொண்ட கயவர்கள்
எப்போது அழிக்கப்டுவர்
அப்போதுதான் இனிப்புடன்
கூடிய தித்திக்கும் தீபாவளி.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தீபாவளித் திருநாளை முன்னிட்டு நடை பெற்ற கவிதைப்போட்டி முடிவுகள் ஊற்று வலைத்தளத்தில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியாக அறியத்தருகிறேன்