புதன், 23 டிசம்பர், 2015

இதுவரை……… என்ற நூல் பற்றிய விமர்சனம்


 

10-1-2016 தினக்குரலில் வெளிவந்த விமர்சனம்-இலங்கையில்

ஈழத்தில் பிறந்து வளர்ந்த அன்பான உறவு தற்போது புலம்பெயர்ந்த ஈழத் தமிழராக கனடாவில் வாழ்கிறார் அவர்தான் கனடாவில் வெளிவரும் உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் உரிமையாளரும் திரு.ஆர்.எஸ்.லோகேந்திரலிங்கம் அவர்கள்

புத்தக வெளியீட்டு விழாவுக்காக கனடாவில் இருந்து மலேசியா வந்த போது அவருடைய கை ஓப்பம் இடப்பட்ட புத்தகம் பரிசாக தந்த போது அதை படிக்க நேர்ந்தது.எப்படியான விடயங்கள் இருக்கிறது என்பதை நாம் முதலில் பார்ப்போம் என்றால்.

கனடா உதயன் பத்திரிகையில் தலைப்புக்களை சுமந்த வண்ணம் மிளிர்கிறது. அணுஆயுதம் தாங்கினால் ஒரு எல்லைதான் அழியும் ஆனால் ஒரு பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்ற ரீதியில் ஒவ்வொரு தலைப்பும் பல வரலாற்று சம்பவங்களை சொல்லும் அளவுக்கு ஈழத்தில் நடைபெற்ற ஒவ்வொரு சம்பங்களையும் ஆண்டுகள் ரீதியில் பட்டியல் இட்டு அதற்கான விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.இலங்கை அரசாங்கத்துக்கும் ஈழ விடுதலை போராட்ட தலைமைக்கும் இடையில் நடைபெற்ற அனைத்து நிகழ்வையும் அழகாக உதயன் பத்திரிகையில் வெளியாகிய தலைப்புகள் இது
இந்த நூலில் காணப்படுகிற அத்தனை தலைப்புக்களும் தமிழ்ஈழ சரித்திரத்தில் முக்கியத்துவம் பெற்ற எழு ஆண்டுகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.2004.2008.2009.2010.2011.2012.2013.ஆகிய ஆண்டுகளில் எழுதப்பட்டவை ஆனால் ஈழப்போராட்ட சரித்திரத்தை எடுத்துக்காட்டும் வகையில் எழுதப்பட்டவை. அந்தவகையில் சில தலைப்புக்கள் எடுத்துக்காட்டாக

 1.நம்மினம் வீழ்ந்து மடிகிறது சர்வதேசம் வேடிக்கை பாரக்கிறது.(6.03.2009.இல்)
2.நீதியை  தொடரச்சியாக நிராகரிக்கும் உலகம் அநீதியை மட்டுமே நேசிக்கிறது.(16.03.2012.இல்)வெளிவந்தஆசிரியர்  தலைப்பு.

3.நியாயமும் அனியாயமும் மோதிக்கொள்ளும் வன்னி நிலப்பரப்பு.

இப்படியாக ஈழ விடுதலைப் போராட்ட தலையங்கங்களை சுமந்த வண்ணம் இதுவரை….. என்ற நூலில் சொல்லப்படுகிறது.

சரிந்து போயுள்ள ஒரு சமூகத்தை நிமிர்த்தி சரிசெய்வதற்கு.ஒரு அரசியல் வாதியின் மனதில் தோன்றும் சிந்தனையிலும் பார்க்க
ஒரு பத்திரிகையாளனின் உள்ளக்கருத்தாக பதிப்படும்  எழுத்துக்களால் அதிக பலன் ஏற்படும். அதன் மூலம் அந்த பத்திரிகையாளன் சமூகத்துக்குதொண்டு செய்யும் ஒரு உயர்ந்தவன் ஆகின்றான்.
நூலாசிரியர் படம்
நிச்சயம் ஒவ்வொரு தமிழ் பேசும் உறவுகளும் படிக்க வேண்டிய நூல் நிச்சயம் வேண்டி படியுங்கள். உறவுகளே.

புத்தகம் வாசிப்பது ஒரு சுமையல்ல எமது அறிவுகண்ணை திறக்கும் திறவுகோல்.

.இந்த நூலுக்கான  வாழ்த்துரை வழங்கியவர் உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு பழ.நெடுமாறன் ஐயாவாகும்.

அணிந்துரைவழங்கியவர்.பொ.கனகசபாபதி.
இதுவரை...... நூலுக்கு விமர்சனம்  எழுத கிடைத்தமை எனக்கு மிக்க மகிழ்ச்சி
மலேசியாவில் உள்ள எழுத்தாளர் மார்கரெட் செல்லத்துரை அவர்களுக்கு கொடுக்கும் போது.

நூல்பற்றிய விபரம்

நூலாசியர்-திரு ,ஆர்.எஸ்.லோகேந்திர லிங்கம்

பதிப்பு ஆண்டு-2013

உரிமை-கனடா உதயன் பத்திரிகை.

வெளியிட்டோர்-கனடா உதயன் பத்திரிகை.

நூலின் விலை-கனடா பணத்தில்-CA$15.00

இந்த புத்தகம் 332 பக்கங்களை கொண்டது

நூல் வேண்டவேண்டுமா.-https://www.facebook.com/naga.logan?fref=ts முகநூலில் தொடர்பு கொள்ளுங்கள்.

11 கருத்துகள்:

 1. ஈழப்போராட்டத்தினை குறித்த நூல் அறிமுகத்துக்கு நன்றி ரூபன்.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் நண்பரே நூல் விமர்சனம் நன்று தங்களது நண்பர் திரு.ஆர்.எஸ்.லோகேந்திரலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துகள்
  தமிழ் மணம் 3

  பதிலளிநீக்கு
 3. மிகச் சிறந்த கவிதை நூலுக்கு
  மிகச் சிறந்த மதிப்புரை
  பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. பத்திரிகை ஆசிரியன்
  தன் பங்குக்கு எதையும் கிறுக்காமல்
  தெளிவான பார்வையுடன்
  தூரநோக்கு சிந்தனையுடன்
  தன் கருத்தை வெளிப்படுத்துவது
  ஆசிரியத் தலையங்கமே!

  சிறந்த திறனாய்வுப் பார்வை
  தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 5. நூல் அறிமுகத்திற்கு மிக்க நன்றி ரூபன் தம்பி!

  பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்