புதன், 30 டிசம்பர், 2015

இறந்த சடலத்தின் கற்பனை அழுகை.

நான் துள்ளி விளையாடிய காலங்கள்
நிரந்தரமாய் மௌனித்த நேரம்
வீட்டுத் திண்ணையில் உறவுகள்
சூழ படுத்த படுக்கையில் கிடக்கிறேன்.
உணர்வுகள்  அற்று.சடமாக.

 நான் உயிருடன் இருக்கும் போது
அழகிய பெயர் சொல்லி கூப்பிடஉறவுகள்
நான் மரணித்த பின் சவம் என்ற
பெயரே எனக்கு வைத்து விடுகிறார்கள்.

 நான் வரைந்த ஓவியங்கள்
நான் எழுதிய கவிதைகள்.
நான் செய்த கட்டில் கதிரைகள் எல்லாம்
நான் வேண்டி புதிய கார்
விட்டுவிட்டு தனியாக செல்கிறேன்.

அழகு பார்த்து அழகு பாரத்து நான்
கட்டிய வீடு நான் துள்ளி விளையாடிய முற்றம்
நான் சம்பாரித்த பணம்
என்னை நீண்ட நேரம் வைத்திருக்க முடியாதாம்
ஏன் நான் மரணித்த சவம் என்பதால்.

 மரணம் எனக்கு மட்டுமல்
பூமியில் உயிராக அவதரித்த
ஒவ்வொரு ஜீவனுக்கும் உண்டு.
மரணம் வருமென்று அறிந்தும்
இப்படித்தான் இருக்கிறான் மனிதன்.

புகழ் பணம் எல்லாம் சம்பாரித்தும்
இறுதியில் வருதில்லை.
மனிதனாக வாழும் காலத்தில்
நண்மையை செய்து வாழுங்கள்
உங்களை சொர்க்கத்தில் சேர்த்துவிடும்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
27/12/2015 அன்று மலேசிய பத்திரிகை தமிழ் மலரில் வந்த கவிதை

20 கருத்துகள்:

 1. சொர்க்க (?) வாசலைக் காட்டி விட்டீர்கள் ,திறக்கத்தான் மாட்டேங்குது :)

  பதிலளிநீக்கு
 2. கவிதை அருமை.அதிலும் அந்த கடைசி பத்தி சூப்பர்.

  பதிலளிநீக்கு
 3. அருமை நண்பரே அழகிய கருத்தாழம் மிக்க வரிகள் நன்று
  தமிழ் மணம் 3

  பதிலளிநீக்கு
 4. தலைப்பும் கவிதையும்
  மிக மிக அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. உயிருடடன் இருக்கும் வரை தான் பட்டங்களும்,பணமும்,பதவியும்! உயிர் போன பின்போ நம் பட்டமும்,பதவியும் போய் பிணமென்னும் ஒன்றில் சமமானோம்.

  கவிதையின் கரு அருமை.

  பதிலளிநீக்கு
 6. யாதார்த்தமான உண்மை..அறிந்தும் உணராத மனித இனம்..சகோ..

  பதிலளிநீக்கு
 7. உயிர் இருக்கும்வரைதான் உடலுக்கு மதிப்பு என்பதை அழுத்தமாக சொல்லிவிட்டீர்கள் ரூபன். கவிதை அருமை.

  பதிலளிநீக்கு
 8. கவி வரிகள் அருமை, வாழ்த்துக்கள்,
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
  இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் சகோதரரே.

  நலமா? தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வளம் சேர்க்கும் நலம் நிறைந்த ஆண்டாக இவ்வாண்டு அமைய இறைவனை பிராத்திக்கிறேன்.

  கவிதை மிக அருமையாக உள்ளது.வாழ்த்துக்கள்.
  வலையில் வாரா நாட்களில் விட்டுப்போன தங்கள் பதிவுகளையும், மற்ற அனைவரின் படைப்புகளையும் படித்து வருகிறேன். என் தாமதக் கருத்துக்களுக்கு மன்னிக்கவும்.

  நன்றியுடன,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 11. அன்புள்ள அய்யா,
  வணக்கம்.

  "இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2016"

  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  பதிலளிநீக்கு
 12. நல்ல கற்பனை. இருந்தாலும் உண்மை அதிகம் உள்ளது. நன்றி. மகாமகம் காணும் 2016இல் ஐந்தாமாண்டு நிறைவு பெறும் எனது முதல் வலைப்பூவைக் காண அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2016/01/blog-post.html

  பதிலளிநீக்கு
 13. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோ! நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி!

  எல்லா நலமும் வளமும் பெற்றிட பிரார்த்திக்கின்றேன்...

  பதிலளிநீக்கு
 14. என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ரூபன் ...!

  பதிலளிநீக்கு

 15. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 16. கவிதை நயமாக உள்ளது.பாராட்டுக்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ரூபன்=சரஸ்வதிராசேந்திரன்

  பதிலளிநீக்கு
 17. கவிதை உண்மையை உரைக்கிறது.
  புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 18. இனிய புத்தாண்டு வாழ்த்தகள்.
  (வேதாவின் வலை)

  பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்