புதன், 6 ஜனவரி, 2016

நாகரீகம் என்ற பெயரால்…………


மனித நாகரீகம் என்ற போர்வையில்
மனிதம் மனிதத்தை மாசுபடுத்தி
வாழ்கிற வாழ்க்கையாக மாறிவிட்டது.இன்று
அன்று ஒரு காலத்தில் பெண்ணால்
பெண்மையை போற்றி வாழ்ந்தாள்
இன்றைய நாகரீகம் என்ற போர்வையில்
அரை தெரிய உடையும்
ஆடை என்ற போர்வையில்
உடல் தெரிய அங்கவஸ்திரமும்
ஆடம்பர வாழ்க்கையாக மாறிவிட்டது.


அப்பா அண்ணா சொந்தங்கள்
என்ற உறவு இருப்பதை மறந்துவிட்டு
கவர்ச்சி உடையை அணிந்து.
ஆண் வர்க்கத்தின் மனநிலையை
பல திசைகளில் திசை திருப்பி
பெண்மையை சீரழித்ததும்
கலாசாரம் என்ற போர்வையில்
வலம் வரும் அரை குறை ஆடைகள்தான்.

 
நவீன உடை என்ற போர்வையில்
கலாசாரத்தை சீரழிக்க பவனிவரும்
ஆடைகளை தூக்கிப் போட்டு விட்டு
தமிழன் தமிழச்சி என்ற கலாசாரத்தையும்
நம் பண்பாட்டையும் சொல்லும்
உடைகளை வாங்கி
நம் இளைய சமூகத்திற்கு வழிகாட்டி
அன்பான தமிழனாய் வாழ்வோம்.

 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

குறிப்பு-

நிர்வாணம் என்பது அழகானது..அது என்றும் கவர்ச்சியை தூண்டுவதில்லை.
இதை பூர்வீகக் குடிகளில் அவதானித்திருப்போம்.

நாகரீகம் என்ற போர்வையில் வரும் அரை குறை ஆடைகள்தான் பாலியல் கவர்ச்சியை தூண்டுகிறது

03-01-2016 ஞாயிறு தமிழ்மலர் பத்திரிகையில் வெளிவந்தவை.மலேசியாவில்

 

37 கருத்துகள்:

  1. தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார உடையான வேட்டியை சிறப்பிக்கும் தினத்தில்
    ஒரு விழிப்புணர்வு
    நன்றி கவிஞரே!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா

      உண்மைதான் இப்படியான தினத்தில் வெளியீடு செய்வதால் ஒரு விழிப்புணர்வுதான்.. வருகைக்கும் கருத்துக்கும் மகிக் நன்றி ஐயா

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  2. நாகரீகம் என்ற பெயரால் உலகம் எபொபொழுதோ கெட்டு விட்டது இனி மாற வழியில்லை!நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா
      உண்மைதான் ..திருந்த காலம் இல்லை. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  3. தமிழ் கலாசாரா ஆடை என்பது என்ன? வெளி நாட்டவரால் செக்ஸி ஆடை என சொல்லப்படும் பாதி முதுகு,மீதி இடுப்பு தெரியும் சேலை தான் கலாசாரா ஆடை எனில் சேலை தான் எம் பெண்களை கவர்ச்சியாக்கியும் காட்டும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்பா!

    தப்பு செய்ய நினைப்பவன் சோளப்பொம்மைக்கு சேலையை சுத்தி விட்டாலும் அதையும் பெண் என நினைப்பான்.

    பெண்கள் ஆடையில் கட்டுப்பாடு வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதே நேரம் ஆடையால் தான் அனைத்தும் என்பது போன்ற கருத்தை ஏற்பதற்கும் இல்லை.

    இன்னும் பல பதிவுகள் பத்திரிகைகளில் வரட்டும். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      தங்களின் விரிவான கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.வருகைக்கும் கருத்துக்கும்மிக்க நன்றி.
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  4. அருமை கவிஞரே முடிவில் சொன்ன வரிகள் மிகவும் நன்று தொடர்ந்து சாதிக்க வாழ்த்துகள்
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி உண்மைதான் குரு எவ்வழியோ சீடனும் அவ்வழிதான்..ஜி.
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  5. பதில்கள்
    1. வணக்கம்

      தங்களின் இரசிப்புக்கு மிக்க நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  6. எந்தக் காலத்திய உடை கவர்ச்சியாக இல்லாமல் நீங்கள் சொல்லும் கலாச்சார முறையில் இருந்தது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      நண்பரே.

      எமது பண்பாட்டை பிரதிபலிக்கும் ஆடைகள் எவ்வளவு இருக்கிறது.இவைகளை பயன்படுத்தினால் கலாசாரத்தை பாதுகாக்கலாம் வருகைக்கும் கருத்துக்கும்மிக்க நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  7. உண்மை தான் ஐயா..நமது முன்னோர்கள் கட்டி காத்த நாகரீகம் இன்று அநாகரீகமானது மேலும் அன்னியரை வெளியே செய்துவிட்டோம் ஆனால் இன்றும் அடிமையாக தான் இருக்கிறோம் அன்னிய உடைகளுக்கு ஐயா..

    நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா

      உண்மைதான்.நாம் வயதுக்கு மூத்தவர்கள் நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தால் மிகச்சிறப்பாக இருக்கும். உதாரணத்துக்கு ஆலயத்துக்கு செல்லும் போது வேஷ்டி அணியவேண்டும் இப்படியான பண்பாட்டை சொன்னால் மிக நன்று. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  8. பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  9. நம் பண்பாட்டையும் சொல்லும் உடைகளை வாங்கி நம் இளைய சமூகத்திற்கு வழிகாட்டி அன்பான தமிழனாய் வாழ்வோம்.

    நன்று சொன்னீர் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  10. பதில்கள்
    1. வணக்கம்
      அண்ணா
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  11. உலகிற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்வதாகக் கூறி பிறந்த உடலைக் காட்டும் இழிநிலைப் பண்பாட்டைப் பேணுவோருக்கு நல்ல சாட்டை அடி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      உண்மைதான் இப்படியான கலாசாரம் எங்கேதான் சென்று முடியப்போகுது என்று தெரியாது.
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  12. செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேலை உடுத்தத் தயங்கிறியேன்னு பாடாட் தோன்றுகிறது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      ஜி
      உண்மைதான்... இரசிப்புக்கு மிக்க நன்றி
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  13. பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  14. சரியான நேரத்தில் அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  15. பண்பாடு மறந்துவிடலாகாதுதாதான்.

    அருமை பாவலரே!

    தொடர்கிறேன்.

    த ம7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  16. பதில்கள்
    1. வணக்கம்
      அம்மா
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  17. பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  18. கவிதை அருமை.. வாழ்த்துக்கள் ரூபன்.

    Copy the BEST Traders and Make Money : http://bit.ly/fxzulu

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  19. Hello,
    I have visited your website and it's really good so we have a best opportunity for you.
    Earn money easily by advertising with kachhua.com.
    For registration :click below link:
    http://kachhua.com/pages/affiliate
    or contact us: 7048200816

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்