சனி, 27 பிப்ரவரி, 2016

சுதந்திரக் காற்று வீசுமா.?

சுதந்திர நாடே சுதந்திர நாடே
எங்கள் சுதந்திரம் எங்கே போனது.
சுடெரிக்கும் எறிகணைகள்
சுடுகுழல் பிரங்கி சுத்தமாய் பதம் பார்த்தது.
சுதந்திர தேசத்தில் ஈழத்தமிழனின்  உடலை
வீதி எங்கும் கோயில் எங்கும்
சுடுகாடாய் போனதப்பா
சுதந்திர தேசத்திசத்தில்

 
பாலுக்கு அழுத பாலகன்
தாய்முலையில் குடித்தபால்
சொட்டுச் சொட்டாய்
உதிர வெள்ளத்தில் உறைந்தம்மா
பாலுக்கு அழும் பாலகன்
இறந்த பிணம் என்று பாராமல்
உயிரற்ற தாயின் முலையில்
பால் குடித்த பாலன் வாழ்வது
எங்கள் ஈழ தேசத்தில்தான்.

 
வீதி எங்கும் மரண ஓலங்கள்
சப்தம்மிட குடிமனைகள்
விகாரமாய் எரிந்தம்மா
சுதந்திர தேசம் என்று
உலக அரங்கிற்கு பறைசாற்றும்
எம் நாட்டு அரசியல் வித்தகர்களே.
வருகிற சுதந்திர நாளி மட்டுமாவது
எம்மின சுதந்திரமாய் வாழுமா?

 
சிறை அறைகளிலும் சொல்ல முடியாத
துன்ப சிலுவையை சுமந்த வண்ணம்.!
சொந்த பாசங்களை தவிக்க விட்டு!
சிறை கம்பிகள்  பூட்டு போட.
கண்ணீர் சிந்திய வாழ்வாக வாழ்கிறது.
எம் ஈழ தேசத்து தமிழினம்

 
வருகிற சுதந்திர தினத்தினலாவது
சுதந்திரம் மலருமா?
என்ற ஏக்கக் கனவுடன்
நாளைய விடியல்.மலர்கிறது.
சுதந்திர தேசத்தில்.

இக் கவிதை மலேசியாவின்  தேசிய நாள் ஏடு தமிழ்மலரில் வெளிவந்த கவிதை 21-02-2016.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 

புதன், 17 பிப்ரவரி, 2016

காலம் வரும் காத்திரும் சீமாட்டி.


அகவிளக்கில் மலர்ந்தவளே.
அகம் முழுதும் எரிகின்றாய்
உடல்முழுதும் நீ இருப்பாய்
உயிரெல்லாம்  நீ வருவாய்.

 
தித்திக்கும் உன் நினைவு!
திகட்டாத உருவமடி உன்  மேனி
பட்டத்து பால் நிலவும்,
வெட்கி தலை குனியும் -உன் நிறம்.

 
கன்னத்து குழியழகு கார்மேக -முடியழகு
வண்ணத்தில் நீ இருப்பாய்
வானழகு வடிவமடி.
எண்ணத்தில் நீ இருப்பாய்
ஜென்மத்தில் நீ வாழ்வாய்.

 
வில்லழகு நெற்றியிலே
பொட்டழகு மின்னுதடி.
வட்டமிட்ட உன்முகம்
பூ அழகு  புன்னகையும் –செய்யுதடி.

 
ஆண்டுகள் பல கடந்தடி
எண்ணற்ற குறுஞ்செய்தி.
கைபேசி நினைவகத்தில்.
உன் நினைவை சொல்லுமடி..
தினம் தினம்.

 
காகிதத்தில் கவி எல்லாம் நான் எழுதி
காதலர் தினம் வரும் வரை
காலமெல்லாம் காத்திருப்பேன்-சீமாட்டி!
உன் அருகில் நான் இருக்க.!
 
காதலர் தினத்தில் 14-02-2016 மலேசியாவில் உள்ள பத்திரிக்கை தமிழ்மலரில் வெளிவந்தது.
10-02-2016 இலங்கையில் உள்ள பத்திரிக்கை மித்திரனில் வெளியாகிய எனது நேர்காணல்இதோ பார்வைக்கு. 

 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-


செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

விறகு வெட்டும் தொழிலாளி


வாழ்க்கை என்னும் புனித பயணத்தை
பூக்கள் கொண்டு மாலை போனால்
கண்ணீர் என்னும் மழைத்துளிகள்.
சாரல் வீசுகிறது ஏழையின் வீட்டில்
ஏழு நாட்கள் பட்டினி கிடந்து.
ஏழ்மை வாழ்வை போக்கவே.
நித்தம் நித்தம் காடும் கரம்பும்
கால்கள் எல்லாம்  நடந்திடவே.
கானகமே வாழ்க்கையானது.

சில நேரம் கண்ணுறங்கும்-போது.
ஈறெடுத்த பிள்ளைகளின் அழுகுரல்கள்
கேட்கும் போது. மனம் எல்லாம்
துடியாய் துடித்தது பாச பிணைப்பினால்
கடலோரம்  மணல் வீடு கட்டி
கரையோரம் வாழும் நண்டுகள்
மலையோரம் போனாலும் வாழ இடமுண்டு.


மனிதன்தான் கைவிட்டான் மனிதத்தை
தெய்வங்கள் படைத்த.
இயற்(க்)கை நமக்கு வரமப்பா.
ஏழ்மை வாழ்வை போக்கிடவே.
விறகு வெட்டும் தொழிலே
வாழ்க்கைக்கு வந்தது.
இயற்(க்)கை அன்னையின் அன்பினால்
இந்த ஏழையின் வயிறு நிறைந்ததுவே.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மலேசியாவின் தேசிய நாள் ஏடு தமிழ் மலரில் 7-02-2016 வந்த கவிதை
 
 
 -நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-