சனி, 27 பிப்ரவரி, 2016

சுதந்திரக் காற்று வீசுமா.?

சுதந்திர நாடே சுதந்திர நாடே
எங்கள் சுதந்திரம் எங்கே போனது.
சுடெரிக்கும் எறிகணைகள்
சுடுகுழல் பிரங்கி சுத்தமாய் பதம் பார்த்தது.
சுதந்திர தேசத்தில் ஈழத்தமிழனின்  உடலை
வீதி எங்கும் கோயில் எங்கும்
சுடுகாடாய் போனதப்பா
சுதந்திர தேசத்திசத்தில்

 
பாலுக்கு அழுத பாலகன்
தாய்முலையில் குடித்தபால்
சொட்டுச் சொட்டாய்
உதிர வெள்ளத்தில் உறைந்தம்மா
பாலுக்கு அழும் பாலகன்
இறந்த பிணம் என்று பாராமல்
உயிரற்ற தாயின் முலையில்
பால் குடித்த பாலன் வாழ்வது
எங்கள் ஈழ தேசத்தில்தான்.

 
வீதி எங்கும் மரண ஓலங்கள்
சப்தம்மிட குடிமனைகள்
விகாரமாய் எரிந்தம்மா
சுதந்திர தேசம் என்று
உலக அரங்கிற்கு பறைசாற்றும்
எம் நாட்டு அரசியல் வித்தகர்களே.
வருகிற சுதந்திர நாளி மட்டுமாவது
எம்மின சுதந்திரமாய் வாழுமா?

 
சிறை அறைகளிலும் சொல்ல முடியாத
துன்ப சிலுவையை சுமந்த வண்ணம்.!
சொந்த பாசங்களை தவிக்க விட்டு!
சிறை கம்பிகள்  பூட்டு போட.
கண்ணீர் சிந்திய வாழ்வாக வாழ்கிறது.
எம் ஈழ தேசத்து தமிழினம்

 
வருகிற சுதந்திர தினத்தினலாவது
சுதந்திரம் மலருமா?
என்ற ஏக்கக் கனவுடன்
நாளைய விடியல்.மலர்கிறது.
சுதந்திர தேசத்தில்.

இக் கவிதை மலேசியாவின்  தேசிய நாள் ஏடு தமிழ்மலரில் வெளிவந்த கவிதை 21-02-2016.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 

13 கருத்துகள்:

 1. மனதை நெகிழ்ந்த உண்மை சம்பவங்கள் கண் முன் நிழலாடின ஐயா.

  பதிலளிநீக்கு
 2. சுதந்திர தினத்தில்
  சுதந்திரம் வேண்டல்
  வித்தியாசமான முரண் சிந்தனை
  மனம் தொட்ட மனம் சுட்ட
  அற்புதமான கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. நெகிழ்ச்சியான கவிதை...
  வாழ்த்துக்கள் ரூபன்.

  பதிலளிநீக்கு
 4. வேதனையான வரிகள் கவிஞரே சுதந்திரக் காற்று என்றாவது ஒருநாள் வீசும் என நம்பிடுவோம்.
  தமிழ் மணம் 3

  பதிலளிநீக்கு
 5. இது வெளியிடுவதற்கு அல்ல...
  நண்பரே மேலிருந்து கீழ் 10 வது வரியில் ஓரெழுத்து பிழையை மாற்றவும்
  தவறாக எண்ண வேண்டாம்.

  பதிலளிநீக்கு
 6. எங்கள் வலி சொல்லும் வரிகள்,
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. என்று தீரும் தமிழனின் துயரம் ? வருத்தம் தரும் பதிவு !

  பதிலளிநீக்கு
 8. அருமையான வரிகள் ரூபன் தம்பி. வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 9. சுதந்திரக் காற்று நிச்சயம் வீசும்.கண்ணீருக்கு காலம் கட்டாயம் பதில் சொல்லத்தான் வேண்டும்

  பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்