திங்கள், 18 ஏப்ரல், 2016

அன்பு காட்டு மனிதா........


மரங்களை வேட்டையாடும் மனிதா.,..
மானிடனின் வாழ்வுக்கு ஆக்ஸிஜன்
கொடுப்பதும் மரந்தானே?
இயற்கையே காப்பவன் என்று.
இலை மறைவில் கூடுகட்டி
குடும்பமாய் வாழ்ந்த பறவை.
குஞ்சுகளை பொறித்து மகிழ்வாக வாழ்ந்த
அகில விருட்சம் காப்பவனை
ஏன் சிதைத்தாய் மனிதா?

 
மரத்தை துண்டு போடும் மனிதனே.
மனிதனையும் துண்டு போடுகிறான்
ஒரு கூட்டு பிள்ளைகள் நிலத்தில் அழுகிறது....
இந்த அழுகுரல் கேட்க வில்லையா.?
இலையாலே கூடுகாட்டி
இமைக்கும் பொழுதெல்லாம்
இமைகாத்தாளே அம்மா.
அலகினால் சீவி அழகு பார்த்த நாங்கள்
வீதியோரம் அழுகிறோம்.

 
மண்ணின் அழகை மனங்கொண்டு பார்க்க
நல்ல மனம் படைத்த மூதாதையர்
நட்டுவைத்த இயற்கையை
நம்மவன் சிதைக்கின்றான்-இன்று
மாட மாளிகைக்கு மகுடம் பதிக்க
அகில விருட்சத்தை சிதைக்கும் –மனிதா.
அதை நம்பி வாழும் பறவைகள் இடத்திலும்
அன்புகாட்டும் மனிதா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
17-4-2016 மலேசியாவின் முதன்மை நாள் ஏடு தமிழ்மலரில் வந்த கவிதை இதோ.