வெள்ளி, 20 ஜனவரி, 2017

திருகோணமலை-ஈச்சிலம்பற்று மண்ணில் எனது கவிதை நூல் வெளியீடு-2017


கல்விக்கு கரம் கொடுப்போம் அமைப்பும் ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றமும் இந்தியாவை சேர்ந்த இனிய நந்தவனம் பதிப்பகமும் அம்பாறை மாவட்ட தமிழ்எழுத்தாளர்கள் மேம்பாட்டு பேரவையும் இணைந்து நடாத்தும் முப்பெரும் விழா-2017

 
ஈச்சிலம்பற்றையை சேர்ந்த கவிஞர் . ரூபன் எழுதிய ஜன்னல் ஓரத்து நிலா கவிதை நூல் வெளியீடும்.

 
ஈச்சிலம்பற்று கோட்டத்தில் தரம் 1இல் புதிதாக கல்வி பயிலும் வறிய மாணவர்களுக்கு தலா 1000ரூபாய் என்ற அடிப்படையில் மக்கள் வங்கியில் சிறுவர் சேமிப்புக் கணக்கு திறந்து சேமிப்பு புத்தகம் பெற்றோர்களிடம் கையளித்தல்.100 மாணவர்களுக்கு தாய் தந்தை இல்லாமல் வாழ்வோருக்கு

வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கல் நிகழ்வு.

வெருகல்-ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்கள் சமுக தொண்டர்களை கௌரவித்தல் நிகழ்வும்

 
இலக்கிய வாதிகளை கௌரவித்தல்.


இந்த நிகழ்வுக்கு இந்தியா.குவைத். மலேசியா .சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து இலக்கிய வாதிகள் தொழில் அதிபர்கள் கல்லூரி முதல்வர்கள் வருகை தருகிறார்கள்.


இவ் விழா -29-01-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்குநடைஸ்ரீசண்பகாமகா வித்தியாலயத்தில் நடை  பெறவுள்ளது என்பதை அறியத்தருகிறேன்.
 
மாணவர்களின் நலன் கருதி உதவி செய்வோர் உதவலாம் சிறுதுள்ளியாவது...

 

நன்றி
இவ்வண்ணம்
கவிஞர்..ரூபன்-(தலைவர்) ஊற்றுவலையுலக எழுத்தாளர்கள் மன்றம்

10 கருத்துகள்:

 1. நூல் வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள் ரூபன்! இன்னும் பல நூல்கள் வெளியிட வாழ்த்துகிறேன்!

  பதிலளிநீக்கு
 2. வெளியீட்டு நிகழ்வுகள் வெற்றி பெற
  எனது வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துகள். தொடர்ந்து மென்மேலும் எழுதவும் சாதிக்கவும்கூட.

  பதிலளிநீக்கு
 4. தங்களின் முயற்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்ககள்.

  பதிலளிநீக்கு
 5. நலமா நண்பரே? தங்கள் வரைவுகளைப் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். வளர்ச்சி கண்டுகொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்! சில மாத ஓய்வுக்காக அமெரிக்க வந்திருக்கிறேன். - இராய செல்லப்பா நியூ ஜெர்சி.

  http://chellappatamildiary.blogspot.com

  பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்