திங்கள், 3 ஏப்ரல், 2017

எல்லாம் உன் கற்பனையே.என் பஞ்சு மிட்டாயே என் பவளச் செவ்வாயே.
பத்து திங்கள் சேர்ந்திருந்து பாதித்திங்கள் பிரிந்தேனடி.
பாவி மகனை கை பிடித்து பாதிவழியில் நிக்கிறாய்.
பார்த்த உன் பால்முகம் மாறவில்லை.
பாவையே! உன் நினைவெல்லாம் பாலாறாய் ஓடுதடி.,…

வளையல் போட்டஉன்கரம் வளையோசை கேட்க.
கோடி தவம்நானிருந்து கோடைகாலம் காத்திருந்து.
நான் நட்டு வைத்த  மல்லிகையும் நடுமுற்றத்தில் நிக்குதடி.
தோட்டத்து மல்லிகையும் தோரணமாய் தொங்குதடி.
முடியழகில் நீ சூட முடித்து வைக்க யாருமில்லை.

என் அன்னக்கிளியழகி என் அருமை சொல்லழகி
குரலோசை கேட்காமல் குணமெல்லாம் மாறுதடி.
தொலைபேசி எடுத்திருந்தேன் தொல்லைகளை தந்திருந்தேன்.
தொலை தூரம் இருப்பதால் தொல்லைகளும் இல்லையடி.

மசமசத்த  கைமணமும் மாறத சுவையும்
ஊசி மிளகாயும் உள்ளேரெண்டு வெங்காயமும்
பழைய சோறும் பழைய தயிரும்
கலையத்தில் நீ எடுத்து காலையில நீ தந்தா
மாறாத உன் கைமணமும் மனதளவில் நிக்குதடி.


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

10 கருத்துகள்:

 1. அருமை கவிஞரே கிராமிய விடயங்கள் தந்த வரிகள் மனதை சற்றே ரணமும் செய்ததே...
  த.ம.+ 1

  பதிலளிநீக்கு
 2. மசமசத்த கைமணம்...அதிகம் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 3. தொடர்க ரூபன்
  கவிதை சொல்லும் இயலாமை நெகிழ்வு

  பதிலளிநீக்கு
 4. #தொலை தூரம் இருப்பதால் தொல்லைகளும் இல்லையடி#
  காதலி மனைவி ஆகிவிட்டாரோ :)

  பதிலளிநீக்கு
 5. "மசமசத்த கைமணமும் மாறத சுவையும்
  ஊசி மிளகாயும் உள்ளேரெண்டு வெங்காயமும்
  பழைய சோறும் பழைய தயிரும்
  கலையத்தில் நீ எடுத்து காலையில நீ தந்தா
  மாறாத உன் கைமணமும் மனதளவில் நிக்குதடி." என
  சுவையாக எழுதி வைச்சீர்
  ஒரு கண நேர வாழ்க்கையை...

  பதிலளிநீக்கு
 6. அருமை திரும்பப் படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்களுடன்

  பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்